தோற்றால் வருவதே ஏமாற்றம்-ஆனால்
தோன்ற வேண்டும் அதில்மாற்றம்
ஏற்றால் வெற்றியின் படியாக-நாம்
எடுத்து வைக்கும அடியாக
ஆற்றல் வேண்டும் நம்பணியை-வெற்றி
அடைவோம் பரிசாம் நல்லணியை
மாற்ற மில்லா மனத்திண்மை-என்றும்
மனதில் கொண்டால் தருமுண்மை
முயலா விட்டால் ஏமாற்றம்-நாம்
முயன்றால் தந்திடும் முன்னேற்றம
இயலா தென்றே எண்ணாதீர்-எதையும்
ஏனோ தானென பண்ணாதீர்
வயலாய் ஆகுதே பாலைநிலம்-முயற்சி
வழியால் வந்ததே அந்தவளம்
புயலாய் உழைக்க ஏமாற்றம்-நீங்கிப
போக வந்திடும் முன்னேற்றம்
எண்ணிச் செயலபடின் ஏமாற்றம்-வாரா
எதுவாய் இருப்பினும், முன்னேற்றம்
பண்ணுள் இசையிலை ஏமாற்றம்-அதைப்
பாடினால் வருவதும் ஏமாற்றம்
கண்ணில் விண்வெளி ஏமாற்றம் –நல்
கானல் நீரும ஏமாற்றம்
மண்ணில எவரே ஏமாற்றம் –அடையா
மனிதர் இருந்தால் பறைசாற்றும்
ஏமாற்றம் வரும்போது தன்னம்பிக்கையை இழந்து விடக்கூடாதுன்னு அருமையாகச் சொன்னீர்கள் !
ReplyDeleteத ம 1
வருகைக்கு மிக்க நன்றி!
Deleteஅருமையான கவிதை....
ReplyDeleteத.ம. +1
வருகைக்கு மிக்க நன்றி!
Deleteஏமாற்றம் இல்லாத வாழ்வும் உண்டோ அதில் மாற்றம் வருவதே
ReplyDeleteநன்று என்று இடித்து உரைத்த கவிதை கண்டு மகிழ்ந்தேன் ஐயா .
த .ம .3
வருகைக்கு மிக்க நன்றி!
Deleteமிகவும் அருமையாக சொல்லியுள்ளீர்கள், ஏமாற்றம் என்பது வாழ்வில் வருவதுதானே ஆனால் வந்தாலும் அதை எப்படி எதிர்கொள்வதென்று !! அழகிய கவிதை!
ReplyDeleteத.ம.+
வருகைக்கு மிக்க நன்றி!
Deleteஅருமையான தன்னம்பிக்கை கவிதை! வாழ்த்துக்கள்
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி!
Deleteதன்னம்பிக்கையுடன் உறசாகம் தரும் வரிகள் ஐயா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி!
Deleteதன்னம்பிக்கை தருகிறது கவிதை.
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி!
Deleteமண்ணில எவரே ஏமாற்றம் –அடையா
ReplyDeleteமனிதர் இருந்தால் பறைசாற்றும்
அற்புதம்...
கம்பன் இல்லை /முருகனார் இல்லை /குழந்தை இல்லை என்போர்க்கு கவலை இல்லை ,
புலவர் இராமாநுசம் உருவிலே .
வருகைக்கு மிக்க நன்றி!
Deleteஏற்றங்கள் என்றென்றும் ஏமாற்றும் மாற்றமாகும்
ReplyDeleteஆற்றலுடன் தந்தீர் அறிந்து!
வருகைக்கு மிக்க நன்றி!
Deleteஆற்றல் வேண்டும் வரும் ஏமாற்றத்தை தடுக்க என்பதை அழகாக உணர்த்திய வரிகள் ஐயா.
ReplyDelete