இனிய உறவுகளே! வணக்கம்[
நேற்று காலை எனது இல்லதில் பத்துமணியளவில் ஒரு சிறிய பதிவர் சந்திப்பு நடந்தது! கலந்துரையாடியோர் பட்டியல்!
சீனு, பிரபகிருஷ்ணா, சிவகுமார், அரசன், டி.என்.முரளிதரன், வெற்றிவேல், பாலகணேஷ், புலவர் இராமாநுசம், சேட்டைக்காரன், கே.ஆர்.பி.செந்தில், மதுமதி, ஸ்கூல் பையன், ரூபக் ராம் ஆகியோர் ஆவர்!
பல, செய்திகளை பேசினோம் ! என்றாலும்,
குறிப்பாக சவுக்கு இணையதளத்தை முடக்கு மாறு நீதி மன்றமே ஆணையிட்டுள்ளதை கண்டு வந்த அனைவரும் தங்கள் கவலையை தெரிவித்தனர் !ஆரசியல் வாதிகளின் ஊழலையும் மற்ற ஊழலையும் அம்பலப்படுத்தும் (ஆதாரத்தோடு) சவுக்கு இணைய தளத்தை,தவறான செய்தி தந்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதில் யாருக்கும்
கருத்து வேறுபாடு இல்லை! அவ்வாறு செய்யாமல் இணைய
தளத்தை முடக்க முயல்வது சனநாயக நாட்டில் முறையல்ல என்பதே அனைவரின் கருத்தாக இருந்தது
அனைத்து ஊடகங்களும் அறவழியில் முறையாக
தங்கள் அச்சத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்!!!
செய்வீர்களா!!!?
புலவர் சா இராமாநுசம்
ஆம்! அனைவரும் இணைந்து குரல் கொடுத்து அறவழியில்தான் போராட வேண்டும்! அவசியம் செய்கிறோம் ஐயா!
ReplyDeleteஅவசியம் கண்டிக்கவேண்டும் ,பதிவர்கள் சார்பில் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை மனுவை அனுப்பினால் கூட நல்லது என்றே படுகிறது ஐயா!
ReplyDeleteத ம 2
நன்றி!
Deleteநீதித் துறைக்கு ஏன் அச்சம்
ReplyDeleteஅங்கேயும் ஊழல் மலிந்து விட்டது
அச்சம் அங்கும் வந்து விட்டது
அதனால்தான் அதிகாரத்தை பயன்படுத்துகிறார்கள்
நல்லதுக்கு அதிகாரம் என்றால் நானிலமே வாழ்த்தும்
புழுத்து நாறும் ஊழலை இதுபோன்ற தடைகள் ஒன்றும் செய்ய இயலாது,
அந்நாற்றம் இதுபோன்ற சட்டங்களால் மேலும் பலபேருக்கு சென்றடையும்
http://www.krpsenthil.blogspot.in/2014/03/blog-post.html
ReplyDeleteசவுக்கு இணையத்தளத்தை முடக்குவது கருத்துச்சுதந்திரத்தை மறுக்கும் செயல்.
ReplyDeleteஎந்த ஒரு இணைய தளத்தையும் முடக்குவது ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் செயல்! அறவழியில் ஒன்றினைந்து செயல்படுவோம்! நன்றி!
ReplyDeleteஇந்தக் கூட்டு முயற்சியானது வெற்றி பெற வேண்டும் ஐயா .
ReplyDeleteகருத்துச் சுதந்திரம் நிலைத்து நிற்க வேண்டும் எனில் தாங்கள்
எடுத்துக்கொண்ட முயற்சியானது போற்றுதற் குரியது !
ஆதரவு என்றும் உண்டு ஐயா...
ReplyDeleteநல்ல இடுகை!
ReplyDeleteஎன் தமிழ்மணம் +1
ஜனநாயக நாட்டில் ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்துவது தவறு என்று சண்டை போடலாம்; இப்படி செய்வது தவறு என்று குரல் கொடுக்கலாம்; கொடுக்கமுடியும்!
ஆனால், நீங்கள் இருபதோ இந்தியாவில்!
எப்படி இதை இந்தியாவில் எதிர்க்க முடியும்?
எல்லோருக்கும் குடும்பம் குழந்தைகள் குட்டி இருக்கும் போது அடங்கிப் போவது தான் அறிவுடைய செயல்!
எங்கெல்லாம் நீதி தலையை நீட்டுகிறதோ
ReplyDeleteஅங்கெல்லாம் உண்மை அரங்கேறியதே
அதற்குத் தடை தான் தீர்வா?
ஆதரவு உண்டு ஐயா
ReplyDeleteத.ம.9
என் ஆதரவு உண்டு ஐயா...
ReplyDeleteநிச்சயம் செய்வோம் ஐயா.
ReplyDelete