சுற்றும் உலகம் தன்னோடு-முள்
சுற்றி வருமே என்னோடு
சற்றும் நேரம் தவறாமல்-கதிர்
சாய இரவும் வாராமல்
இற்றை வரையில இருந்திலவே-நேரம்
எதுவென மனிதர் அறிந்திடவே
ஒற்றைக் கையில் கட்டிடுவார்-வீட்டில்
உயர சுவற்றில மாட்டிடுவார்
ஆமாம் என்பெயர் கடிகாரம்-மக்கள
அடிக்கடி பார்க்க மணிநேரம்
தாமத மாகா அலுவலகம்-அவர்
தடயின்றி செல்ல இவ்வுலகம்
தாமே தம்மை சுற்றவிடும்-ஆனால்
தடைபட என்விசை கெட்டுவிடும்
நாமா காரணம் அவர் கோபம்-ஏனோ
நம்மிடம் வருவது பரிதாபம்
எத்தனை வகையில் என்னுருவம்-கால
இயற்கையில் மாற பலபருவம்
அத்தனை நிலைக்கும் ஏற்றபடி-எம்மை
அழகாய் அமைத்துளார் மற்றபடி
சத்தம் காட்டுவார் சிலபேரே-ஆனால்
சாந்தமாய் இருப்பார் பலபேரே
புத்தகம் போடலாம் எம்பெருமை-இதுவே
போதும் அறிவோம்கால தம்அருமை
புலவர் சா இராமாநுசம்
தாமத மாகா அலுவலகம்-அவர்
ReplyDeleteதடயின்றி செல்ல இவ்வுலகம்
தாமே தம்மை சுற்றவிடும்-ஆனால்
தடைபட என்விசை கெட்டுவிடும்
மனம் கவரும் கவிதை வரிகள் ஒவ்வொன்றும் அருமை ....!
அருமை உணர்ந்து கொண்டால் போதும் என்று சொன்னது அருமை ஐயா...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
நேரத்தின் அருமையை அழகாகச் சொல்லி உள்ளீர்கள் ஐயா! அதன் அருமையைஎல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம்!
ReplyDeleteநன்றி!
வணக்கம்
ReplyDeleteஐயா.
கவிதையின் வரிகள் உண்மை... சிறப்பாக சொல்லியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நேரத்தின் அருமையை அழகாகச் சொல்லியுள்ளீர்கள் ஐயா
ReplyDeleteநேரத்தின் அருமையைச் சொல்லும் அழகான கவிதை புலவர் ஐயா...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
காலம் பொன்போன்றது என்ற
ReplyDeleteகருத்தினை சிரமேற்கொள்கிறேன் பெருந்தகையே..
அருமையான கவியாடல்...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : மஞ்சு பாஷிணி சம்பத் குமார் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கதம்ப உணர்வுகள்
வலைச்சர தள இணைப்பு : அன்பின் பூ - மூன்றாம் நாள்
கவிதை வெகு நன்று!
ReplyDeleteஇலவசமாய் எனக்கொன்னு எப்போ நீங்க தரப்போறீங்க?
ReplyDelete"சத்தம் காட்டுவார் சிலபேரே-ஆனால்
ReplyDeleteசாந்தமாய் இருப்பார் பலபேரே" என்பது
உண்மை தான் ஐயா!
மனம் கவரந்த கவிதை. கைக் கடிகாரம் கட்டிக் கொள்வதை விட்டே பல வருடங்கள் ஆகிவிட்டது! :)
ReplyDelete