காரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த
காரியத்தை பாராட்டி போற்றலே
கடமை!
தோரணம்
கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி
தோற்காது நிலைத்திட செய்வோமே
யாண்டும்
ஏன்செய்தார் என்பதோர் கேள்வி யல்ல –மேலும்
எவர்செய்தார் என்பதும் கேள்வி
யல்ல
தான்செய்தேன் எனச்சொல்ல முதல்வர் பதவி-அவர்
தக்கபடி
முடிவெடுத்து செய்ய உதவி
மூவரொடு
எழுவரையும் காத்தார் நன்றே –அதில்
முரண்பட்டு
பேசுதற்கு இல்லை ஒன்றே
ஆவலொடு
காத்திருந்த தமிழர் இனமே –இன்பம்
அலைபோல பொங்கிட களிக்கும் மனமே
நன்றிதனை
மறப்பது
நன்றல்ல என்றே –ஐயன்
நவின்றதை மறவாது அனைவரும் இன்றே
என்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும்
ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்
புலவர் சா இராமாநுசம்
முதல்வருக்கு பாராட்டுக்கள் ஐயா...
ReplyDeleteகாலத்தினாற் செய்த உதவியை மறக்கக் கூடாதுதான் !
ReplyDeleteத ம 2
நானும் உங்களுடன்!
ReplyDeleteமனதார முதல்வரை நானும் பாராட்டுகிறேன்...
ReplyDeleteமனதார முதல்வரை நானும் பாராட்டுகிறேன்...
ReplyDeleteத.ம.7
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்
வலைச்சர தள இணைப்பு : மூத்தோருக்கு மரியாதை
முதல்வரின் முயற்சியைப் பாராட்டுகிறேன்.
ReplyDelete"நன்றியுரை ஆற்றுவோம்" என்ற
தங்கள் கருத்தை வரவேற்கிறேன்