Saturday, February 15, 2014

அன்றே சொன்னது இதுதானே -இன்று ஆனது! உண்மை அதுதானே!



அன்றே சொன்னது இதுதானே -இன்று
ஆனது! உண்மை அதுதானே
நன்றே எண்ணிப் பாருங்கள் -என்ன
நடந்தது ஆய்ந்து கூறுங்கள்
----------------

அந்தோ பாவம் கெஜரிவாலே –ஆம்\
ஆத்மி கட்சி திவாலே!
வந்தார் ஊழல் ஒழிக்கவென –கிழிய
வாயும் ஒலிக்க முழக்கமென!
தந்தார் மக்களும் ஓட்டுகளை-வீசித்
தள்ளினர் இலஞ்ச நோட்டுகளை
அந்தோ!! உண்மை! அறியாரே – நாளும்
அடுத்தென விரைவில் புரிவாரே!

பக்கா ஊழல் துணையாக –இன்று
பதவி ஏற்றார் பிணையாக
முக்கா கிணறு தாண்டுவதா –இவர்
முடிவு நாட்டுக்கு வேண்டுவதா!!!?
பாழாய் கிணற்றில் வீழ்ந்துவிட்டார் –ஏனோ
பதவி ஆசையா !! தாழ்ந்துகெட்டார்
வாழா வெட்டி ஆட்சிக்கே –முதல்வர்
வந்தார் இவரென சாட்சிக்கே

புலவர் சா இராமாநுசம்

19 comments:

  1. பாவம் சனநாயகம் ?

    ReplyDelete
  2. இவர் பயந்து ராஜினாமா செய்தாரா இல்லை இதில் வேறு எதாவது உள்குத்து இருக்கிறதா என்று...

    உண்மையில் ஜனநாயகம் சாக்கடையாக போகப்போகிறது...

    எனக்கு ஒரு சந்தேகம்... போதிய பலம் இருந்தால் உண்மையில் ஊழலுக்கு எதிராக இவர் நடவடிக்கை எடுபபாரா என்று தெரியவில்லை...

    ReplyDelete
  3. நோட்டுகளால் எல்லாம் என்றிருந்தால் இப்படித்தான்...! ம்...

    ReplyDelete
  4. கேலிக்கூத்து ஆகிவிட்டது ஜனநாயகம்!

    ReplyDelete
  5. எனக்கு கேஜ்ரிவால் தோற்றுவிட்டார் என்று படவில்லை ,அடுத்து முழு மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடிப்பார் என்றே தோன்றுகிறது !
    த ம 8

    ReplyDelete
  6. பொறுத்திருந்து பார்ப்போம் ஐயா

    ReplyDelete
  7. நம்ம ஊரில் ஜனநாயகம் என்று ஒன்று இருக்கிறதா?!!!

    ReplyDelete
  8. காலம் தான் எல்லாவற்றிற்கும் பதில் சொல்ல வேண்டும். என்ன செய்யப் போகிறார் என்று அவருக்கு வாக்களித்த மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்...

    ReplyDelete