காதலர் தினமே
–எதிர்ப்பில்
கலங்கா மனமே
ஆதலே வேண்டும்
–அதுவே
ஆவலைத் தூண்டும்
நோதலும் வருமே –மேலும்
நேசமும்
தருமே
சோதனை பலவே
–அதனால்
சோர்ந்திடல் இலவே
சாதியும் பாரா
– எதிலும்
சமத்தும் கோரா
பீதியால் அழியா-பிறர்
பேச்சினால் ஒழியா
ஆதியில் இருந்தே
– இது
அழியா மருந்தே
பாதியில் பிரிவதே
–வெறும்
பருவத்தால்
வருவதே
உண்மைக் காதல் –இருவர்
ஒன்றென ஆதல்
திண்மை ஒன்றே
–நெஞ்சில்
தேவை நன்றே
நன்மை விளைய
–துயர்
நஞ்சினைக்
களைய
இன்மை நீங்கும்
– காதல்
இளமையாய்
ஓங்கும்
புலவர் சா இராமாநுசம்
பய புள்ளைங்களுக்கு இப்படி நீங்க வாழ்த்து சொல்வீங்க என்று நான் நினைச்சுப் பார்க்கலே ,அசத்திட்டீங்க !
ReplyDeleteத.ம 1
மிக்க நன்றி!
Delete/// இருவர் ஒன்றென ஆதல் /// சிறப்பான வரிகள் ஐயா...
ReplyDeleteஅன்பு தினம் - என்றும் வேண்டும்...
தினம் என்றும் - அன்பாக வேண்டும்...
வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி!
Deleteஅருமையான வரிகள் ஐயா..._/\_
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஉண்மைக் காதல் –இருவர்
ReplyDeleteஒன்றென ஆதல்
திண்மை ஒன்றே –நெஞ்சில்
தேவை நன்றே
நன்மை விளைய –துயர்
நஞ்சினைக் களைய
இன்மை நீங்கும் – காதல்
இளமையாய் ஓங்கும்//
அருமையான வாழ்த்து! புலவரே! இந்த வயதிலும், உங்கள் மூன்றாம் தலைமுறைக்கு, இப்படியொரு அருமையான காதலர் வாழ்த்து தெரிவித்தது ஆச்சரியமாக உள்ளது!! காதலை வாழ்த்துவதில் வயதில்லி என்பது தெரிகின்றது! எண்ணம்தான் முக்கியம்!
அருமை!
தம.
மிக்க நன்றி!
Delete"சாதியும் பாரா – எதிலும்
ReplyDeleteசமத்தும் கோரா
பீதியால் அழியா-பிறர்
பேச்சினால் ஒழியா
ஆதியில் இருந்தே – இது
அழியா மருந்தே" எனக் கூறும்
அடிகளை அடியேன் விரும்புகிறேன்!
மிக்க நன்றி!
Deleteமனத்தைக் கவர்ந்த காதலர் தினக் கவிதை அருமை ! தலை வணங்குகின்றேன் ஐயா .
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஅருமை!
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteகாதலின் வலியும் சுகம்தான் அய்யா !
ReplyDeleteகாதலர் தின சிறப்புப் பாடல் மிகச் சிறப்பு..... பகிர்ந்தமைக்கு நன்றி புலவர் ஐயா.
ReplyDelete