Wednesday, February 12, 2014

மட்டைப் பந்து விளையாட்டே-அது மட்டுமா சிறந்த விளையாட்டே!



நீயா நானா விளையாட்டே-தேர்தல்
நெருங்க நெருங்க தமிழ்நாட்டில்!
காயா பழமா விளையாட்டும்-அந்தோ
கண்டோம இந்த தமிழ்நாட்டில்!
தாயா பிள்ளையா இருந்தாரும்-இங்கே
தனியாய் தனியாய் பிரிந்தாரும்!
வாயா போயா விளையாட்டும் -மேலும்
வளரந்து நாளும் களைகட்டும்!

மட்டைப் பந்து விளையாட்டே-அது
மட்டுமா சிறந்த விளையாட்டே!
திட்ட மிட்டே ஆடுகின்றார்-பொருள்
தேடிட சூதையும் நாடுகின்றார்!
வெட்ட வெளிச்சம் ஆனபின்பும்-எதற்கு
வீணே நீயா நானென்றல்!
இட்டம் போல ஆடட்டும் -இனி
எப்படி யேனும போகட்டும்!

எங்கும் எதிலும் இதுவேதான்-உலகு
எங்கும் காணல் இதுவேதான்!
பொங்கும் உணர்வே இதுவேதான்-தினம்
போட்டியில் பார்ப்பது இதுவேதான்!
தங்குத் தடையே இல்லாமல்-நாளும்
தயங்கி எதுவும் சொல்லாமல!
இங்கே நானும் எழுதுவதும்-என்னுள்
இருப்பது நீயா நானன்றோ!

புலவர் சா இராமாநுசம்

19 comments:

  1. #இங்கே நானும் எழுதுவதும்-என்னுள்
    இருப்பது நீயா நானன்றோ!#
    உண்மைதான் அய்யா ,என் உள்ளக்கருத்தும் இதுவே !
    த ம 1
    வருகைதாருங்கள் ...மனைவிக்கு புரியும்படி சொல்வது எப்பவும் நல்லது
    http://www.jokkaali.in/2014/02/blog-post_11.html

    ReplyDelete
  2. எல்லாம் ஓர் நாடகம்... இனி எப்படியேனும போகட்டும் ஐயா...

    ReplyDelete
  3. //திட்ட மிட்டே ஆடுகின்றார்//
    ஏமாறுகிறவர்கள் இருக்கிறவரை ஏமாற்றுகிறவர்கள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். இனியாவது நாம் இந்த ‘விளையாட்டு’க்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்போமா என்பதை உங்கள் கவிதையின் வரிகள் சொல்லுகின்றன ஐயா.

    ReplyDelete
  4. நீயா நானா விளையாட்டுதான் தமிழ்நாட்டின் தேசிய விளையாட்டு!

    ReplyDelete
  5. எங்கும் எதிலும் இதுவேதான்-உலகு
    எங்கும் காணல் இதுவேதான்!
    சரியாக சொன்னீர்கள் ஐயா.

    ReplyDelete
  6. வணக்கம்
    ஐயா

    திட்ட மிட்டே ஆடுகின்றார்-பொருள்
    தேடிட சூதையும் நாடுகின்றார்!...

    நல்லா சொன்னிங்கள் ஐயா.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. "மட்டைப் பந்து விளையாட்டே-அது
    மட்டுமா சிறந்த விளையாட்டே!
    திட்ட மிட்டே ஆடுகின்றார்-பொருள்
    தேடிட சூதையும் நாடுகின்றார்!" என்ற
    உண்மையை வரவேற்கிறேன்

    ReplyDelete
  8. தங்களின் மன வலி புரிகிறது ஐயா இவர்கள் என்று தான்
    திருந்துவார்களோ ! காலம் வெகு விரைவில் நன்மை
    சேர்க்கும் காலமாக மலரட்டும் .சிறப்பான பகிர்வுக்கு
    மிக்க நன்றி ஐயா .தங்களின் உடல் நிலை இப்போது
    எப்படி உள்ளது ?...அறியும் ஆவலுடன் திரும்புகின்றேன் .

    ReplyDelete
  9. அரசியல்வியாதிகளின் தொல்லைதான் மனசுக்கு வேதனை !

    ReplyDelete
  10. பொருள் தேடிட சூதையும் நாடுகின்றார்!//உண்மைதான் அய்யா

    ReplyDelete
  11. சரியாகச் சொன்னீர்கள் புலவர் ஐயா....

    பணத்திற்காக எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள்.....

    ReplyDelete