தொலைந்தது மீண்டும் வந்ததுவே-கனவில்
தொலையா இன்பம் தந்ததுவே
கலைந்தது அந்தோ தூக்கம்தான்-அவளை
கண்முன் காணா ஏக்கந்தான்
விளைந்தது மீண்டும் கனவுவர-அவள்
விட்டுச் சென்றதை நினவுதர
அலைந்தது அந்தோ மனம்வீணே-முக
அழகில் காண்பது மிகநாணே
என்னுள் அவளே இருந்தாலும்-நல்
இருவிழி தந்திடும் மருந்தாலும்
பொன்னுள் பதித்த மணிபோல-தினம்
புலம்பும் நெஞ்சின் பிணிமாள
மன்னும் உயிரும் உடலோடு-அவள்
மறுத்தால் வாழ்வே சுடுகாடே
இன்னும் எதற்கோ நடிக்கின்றாள்-தன்
இதயம் திறக்க மறுக்கின்றாள்
எத்தனை காலம் ஆனாலும்-என்
இளமை அழிந்து போனாலும்
சித்தமே சற்றும் கலங்காது-விருப்பம்
செப்பிடும் வரையில் தூங்காது
இத்தரை தன்னில் வாழ்ந்திடுவேன்-நான்
இறுதியில் ஒருநாள் விழ்ந்திடுவேன்
பத்தரைப் பொன்னே நீவருவாய்-தீராப்
பழியும் வருமுன் கவிப்பெண்ணே!
புலவர் சா இராமாநுசம்
அற்புதமான கவிதை
ReplyDeleteமீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
மிக்க நன்றி!
Deletetha.ma 1
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteவழக்கம்போல் அருமை ஐயா!!
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா..
கவிதையில் ஒவ்வொரு வரிகளும் மனதை நெருடியது... அருமை வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி!
Deleteஎத்தனை காலம் ஆனாலும்-என்
ReplyDeleteஇளமை அழிந்து போனாலும்
சித்தமே சற்றும் கலங்காது-வாழ்க
மிக்க நன்றி!
Deleteசிறப்பான வரிகள் ஐயா...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
மிக்க நன்றி!
Deleteகவிமகள் மீது கொண்ட மட்டற்ற காதல் உணர்வினை இங்கே
ReplyDeleteமிக மிக அற்புதமாக வெளிக்காட்டியுள்ளீர்கள் ஐயா .தங்களின்
கவி வரிகளைக் காணக் கொடுத்து வைத்தவர்கள் நாங்கள் .
வாழ்க வளமுடன் .
மிக்க நன்றி!
Deleteஇன்னும் எதற்கோ நடிக்கின்றாள்-தன்
ReplyDeleteஇதயம் திறக்க மறுக்கின்றாள் - என்ற வரிகள் எல்லாக் காதலர்களுக்கும் பிடிக்கும்!
சிறப்பான வார்த்தைகள் ஐயா
ReplyDeleteநன்றி
த.ம 7
கவிதை அருமை ஐயா...
ReplyDeleteஅன்பை கேட்கும் வரிகள்
ReplyDeleteநன்றி
கவிமகளை நினைத்து வடித்த கவிதை மிக அருமை. ரசித்தேன்....
ReplyDeleteத.ம. +1