Thursday, January 30, 2014

எள்ளுகின்ற நிலைதானே முடிவில்வருமே-மக்கள் எண்ணியிதை ஆய்ந்தாலோர் விடிவுவருமே!



ஆன்றோரே பெரியோரே வாருமய்யா –பதவி
   அடைவதற்குக் கூட்டணியா !?  பாருமய்யா!
சான்றோரே நாள்தோறும் செய்திவருதே –அரசியல்
   சாக்கடையா !?  ஐயகோ!  துயரம்தருதே! 
கொள்கையென ஏதொன்றும்  தெரியவில்லை-என்ன
   கூட்டணியோ ! கடவுளே!  புரியவில்லை!
எள்ளுகின்ற  நிலைதானே  முடிவில்வருமே-மக்கள்
   எண்ணியிதை ஆய்ந்தாலோர் விடிவுவருமே!

நேற்றுவரை  பகைவராம்! காணயின்றே –அந்த
    நினைவின்றி சேர்வதா நாணமின்றே!
போற்றுவதா!? இச்செயலும் எண்ணவேண்டும்-நாளும்
    புலம்புவதால் தீராது   திண்ணமீண்டும்!
தூற்றுவதும்  மாற்றுவதும்  வழக்கமாக-மெகாத்
    தொடராக ஆற்றுவதும்  பழக்கமாக!
சாற்றுவதா!? இக்கொடுமை ஆயவேண்டும் –உடன்
    சரிசெய்த பின்பேநாம்  ஓயவேண்டும் !

           புலவர்  சா  இராமாநுசம்

5 comments:

  1. இந்தக் கூட்டணிக் கண்றாவியை என்னவென்று சொல்வது...? இக்கொடுமை தீருவதும் நம் கையில் தான் என்று அருமையாக சொன்னீர்கள் ஐயா...

    ReplyDelete
  2. ஐயா!
    தூற்றுவதும் மாற்றுவதும்
    அரசியல்வாதிகளுக்கு வழக்கமாகிவிட்டதே!

    ReplyDelete
  3. நாளொரு கட்சி, பொழுதொரு கூட்டணி... இதுவே இன்றைய அரசியல் நிலை...

    ReplyDelete
  4. நம் கையில் இருக்கிறது அனைத்தும்

    ReplyDelete
  5. எப்படி வேண்டுமானாலும் தாண்டும் மனிதர்கள்!

    ReplyDelete