Friday, January 24, 2014

எடுக்க வேண்டும் நடவடிக்கை-ஒன்றாய் எதிர்போம் கச்சத்தீவின் உடன்படிக்கை!



மீண்டும் மீண்டும் வருகின்றான்-நம்
மீனவர் வலையை அறுக்கின்றான்!
தூண்டில் மீனாய் துடிக்கின்றார்-நாளும்
துயரக் கண்ணீர் வடிக்கின்றார்!
ஈண்டும் ஆட்சி மாறியதே-ஆனால்
எனினும் பழைய காட்சியதே!
வேண்டும் துணிவு! அதுவொன்றே-அவர்
வேதனை போக்கும் வழியின்றே!

எத்தனை தரம்தான் போவார்கள்-சிங்ளர்
எடுபிடி யாக ஆவார்கள்!
மொத்தமாய் போய்விடும் தன்மானம்-அங்கே
மேலும் போவது அவமானம்!
புத்தியில் அவருக்கு கோளாரே-புனித
புத்தரே சொல்லினும் கேளாரே!
எத்தராம் சிங்களர் திருந்திடவே-அங்கே
எதிர்க்க நம்படை நிறுத்திடுவீர்!

ஆறினால் சோறு பழஞ்சோறே-ஆளும்
அம்மா அவர்க்குக் கதியாரே!
கூறினால் மட்டும் போதாதே-அழுத்தம்
கொடுப்பீர் மத்திக்கி, இப்போதே!
மீறினால் வருமே போராட்டம்-என
மத்தியில் ஆள்வோர் உணரட்டும்!
மாறினால் அவர்கள் மாறட்டும்-இன்றேல்
மக்களை அரசே திரட்டட்டும்!

பிடித்த மீனையும் அள்ளுகின்றான்-படகை
பிணைத்து இழுத்துத் தள்ளுகின்றான்!
அடித்துச் சிறையிடல் தொடர்கதையா-இந்த
அவலம் மீனவன் தலைவிதியா!
தடுக்க மத்திக்கு வக்கில்லை-ஆளும்
தமிழக அரசே உடன்ஒல்லை!
எடுக்க வேண்டும் நடவடிக்கை-ஒன்றாய்
எதிர்போம் கச்சத்தீவின் உடன்படிக்கை!


புலவர் சா இராமாநுசம்

14 comments:

  1. மாநிலத்தில் மட்டும்தானே ஆட்சி மாறியது போல் மத்தியில் ஆட்சி மாறினால் ,இதற்கு தீர்வு கிடைக்கும் !

    தமிழ்மணம் likeவோட்டு போட்டால் dislike வோட்டும் சேர்ந்து விழுகிறது ,என் தளத்திலும் இந்த பிரச்சினை ,ஏனென்று தெரியவில்லை !

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா

    நல்ல தீர்வு கிடைக்கட்டும்..ஐயா..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. ஒற்றுமையுடன் செயல் பட வேண்டும் ஐயா... சிறப்பான கவிதைக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. எடுக்க வேண்டும் நடவடிக்கை . சரியாக சொன்னீர்கள் ஐயா.

    ReplyDelete
  5. அமைதி வேண்டும்.
    அதற்கு
    எல்லோரும் ஒன்றுபட வேண்டும்.

    ReplyDelete
  6. எடுக்க வேண்டும் நடவடிக்கை .

    ReplyDelete
  7. மாற்றை விரைவில் வந்தால் நல்லது.....

    ReplyDelete
  8. செத்தாலும் மாறாதே
    செங்குருதி காயாதே
    இத்தாலிப் பேய்தந்த
    இடையறா துன்பங்கள் !

    ReplyDelete