Wednesday, January 15, 2014

மாட்டுக்கும் பொங்கலாம் இன்றே!-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே

மாட்டுக்கும் பொங்கலாம் இன்றே!-தமிழ்
         மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு
  நாட்டுக்கும் இல்லாத பெருமை!-நம்
         நாட்டுக்கே உரியதாம் அருமை!

 உழுதிட உழவனின் துணையே!-என
        உற்றது இரண்டவை இணையே-நாளும்
 பழுதின்றி பயிர்த்தொழில் செய்ய!-அவை
         பங்குமே பெற்றது ஐய்ய!

 தொழுதின்று போற்றிட வேண்டும்-அதன்
        தொண்டினை சாற்றுவோம் யாண்டும்-மேலும்
 உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்-இன்றேல்
         உணவின்றி அனைவரும் வீழ்வார்

 மஞ்சு விரட்டெனச் சொல்வார்-மணி
         மாலைகள் சூட்டியே மகிழ்வார்-மிரண்டு
 அஞ்சிய மாடுகள் ஓடும்-ஆகா!
         அவ்வழகினைப் பாடவா கூடும்!

 வண்ணங்கள் தீட்டுவார் கொம்பில்-அதை
          வண்டியில் பூட்டுவார்! அன்பில்!-உவகை
  எண்ணத்தில் மலர்ந்திட உள்ளம்-அவை
           விரைந்திட ஓட்டுவார் இல்லம்

   ஏர்தனைக் கட்டியே உழுவார்-கதிர்
            இறையென பார்த்துமே தொழுவார்-இப்
   பாரெங்கும் பசிப்பிணி நீங்க- இட்ட
          பயிர்நன்கு செழித்துமே ஓங்க!

  ஊரெங்கும் மக்களின் கூட்டம்!-பெரும்
           உற்சாகம் பொங்கிட ஆட்டம்!-நல்
   சீர்மிகும் புத்தாடை அணிவார்-இளையோர்
          சென்றுமே பெரியோரைப் பணிவார்

   உண்டிடக் கொடுப்பவன் உழவன்!-நம்
           உயிரையும் காப்பவன் உழவன்!-பெரும்
   தொண்டினைச் செய்பவன் உழவன்!-நாம்
            தொழுதிட உரியவன் உழவன்!

                                  புலவர் சா இராமாநுசம்

     2011-- மீள்பதிவு
 
27 comments:

  1. உண்டிடக் கொடுப்பவன் உழவன்!-நம்
    உயிரையும் காப்பவன் உழவன்!-பெரும்
    தொண்டினைச் செய்பவன் உழவன்!-நாம்
    தொழுதிட உரியவன் உழவன்!////உண்மையே

    ReplyDelete
  2. உற்சாகம் தரும் வரிகள் ஐயா...

    இனிய திருவள்ளுவர் தினம், மாட்டுப் பொங்கல் தினம் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! இனிய பொங்கல்,புத்தாண்டு நல்வாழ்த்து! வாழ்க வளமுடன்!

      Delete
  3. உழவர் சிறப்பு போற்றும் இனிய கவிதை.
    வாழ்த்துக்கள் அப்பா !

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! இனிய பொங்கல்,புத்தாண்டு நல்வாழ்த்து! வாழ்க வளமுடன்!

      Delete
  4. எனதினிய வாழ்த்துக்கள் அய்யா.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! இனிய பொங்கல்,புத்தாண்டு நல்வாழ்த்து! வாழ்க வளமுடன்!

      Delete
  5. உழவிற்கு தங்கள் சிந்தனையால் வந்தனை செய்த விதம் நன்று !
    +1

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! இனிய பொங்கல்,புத்தாண்டு நல்வாழ்த்து! வாழ்க வளமுடன்!

      Delete
  6. Replies
    1. மிக்க நன்றி! இனிய பொங்கல்,புத்தாண்டு நல்வாழ்த்து! வாழ்க வளமுடன்!

      Delete
  7. ஒரு சந்தேகம் ஐயா, மாட்டுப்பொங்கல் மாடுகளுக்கு மட்டும் தானா? ஆடு, கோழி, வாத்து போன்றவையும் மனிதனுக்கு உதவுபவை தானே! அவற்றுக்கு ஏன் பொங்கல் கொண்டாடுவதில்லை? நன்றிமிக்க நாய்களுக்கு ஏன் கொண்டாடுவதில்லை? இலக்கியங்களில் இதற்குக் காரணம் கூறப்பட்டிருக்கிறதா?

    ReplyDelete
  8. உற்சாக கவிதை! இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! இனிய பொங்கல்,புத்தாண்டு நல்வாழ்த்து! வாழ்க வளமுடன்!

      Delete
  9. அருமை அய்யா.. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் தைத்திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! இனிய பொங்கல்,புத்தாண்டு நல்வாழ்த்து! வாழ்க வளமுடன்!

      Delete
  10. Replies
    1. மிக்க நன்றி! இனிய பொங்கல்,புத்தாண்டு நல்வாழ்த்து! வாழ்க வளமுடன்!

      Delete
  11. உழவுத் தொழிலுக்கு உற்ற நண்பனான, மாட்டினுக்கு, நன்றி மறவா தமிழன் கொண்டாடும் மாட்டுப் பொங்கல் பற்றியும் உழவரைப் போற்றியும் அய்யாவின் கவிதை! புலவர் அய்யாவுக்கு எனது மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. மாட்டுப்பொங்கல் குறித்த சிறப்புக் கவிதை
    மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! இனிய பொங்கல்,புத்தாண்டு நல்வாழ்த்து! வாழ்க வளமுடன்!

      Delete
  13. Replies
    1. மிக்க நன்றி! இனிய பொங்கல்,புத்தாண்டு நல்வாழ்த்து! வாழ்க வளமுடன்!

      Delete
  14. //உண்டிடக் கொடுப்பவன் உழவன்!-நம்
    உயிரையும் காப்பவன் உழவன்!-பெரும்
    தொண்டினைச் செய்பவன் உழவன்!-நாம்
    தொழுதிட உரியவன் உழவன்!//

    சிறப்பான வரிகள்.

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! இனிய பொங்கல்,புத்தாண்டு நல்வாழ்த்து! வாழ்க வளமுடன்!

      Delete
  15. //உண்டிடக் கொடுப்பவன் உழவன்!-நம்
    உயிரையும் காப்பவன் உழவன்!-பெரும்
    தொண்டினைச் செய்பவன் உழவன்!-நாம்
    தொழுதிட உரியவன் உழவன்!//

    அருமையான வரிகள்...

    இன்று எனது பக்கத்தில்

    http://kovai2delhi.blogspot.in/2014/01/blog-post_16.html

    ReplyDelete
  16. //-வேறு
    நாட்டுக்கும் இல்லாத பெருமை!-நம்
    நாட்டுக்கே உரியதாம் அருமை!//
    அருமை ஐயா நன்றி

    ReplyDelete