தைமுதலே புத்தாண்டாம் தமிழர்கென்றே -என
தமிழரிஞர் பலர்கூடி வைத்தாரன்றே
மெய்யதுவே ! உணர்ந்தனை ஏற்றார்நன்றே- இம்
மேதினியில் பொங்கலுடன் இணைத்தாரொன்றே
(சந்தம் வேறு)
புதுப்பானை பொலிவுற வைத்தே-நல்
பூவொடு மஞ்சளின் கொத்தே!
மதிப்பாக மாலையாய் கட்டி-அந்த
மண்பானை கழுத்தினில் சூட்டி!
புத்தம் புதுநெல்லைக் குத்தி-வெல்லம்
போட்டுடன் பால்பொங்கக் கத்தி!
சத்தமும் பொங்கலோ என்றே-தர
சங்கீத இனிமையை நன்றே!
மாடென உழைத்திட்ட உழவன்-பொங்கல்
மாட்டுக்கும் வைத்ததைத் தொழுவன்
காடொனக் கிடந்திட்ட நிலமும் -அவன்
கைபட பெற்றதாம் வளமும்!
கொல்லும் பசிப்பிணி போக்கும்-உழவன்
குறையென்ன கண்டதை நீக்கும்!
ஒல்லும் வகையவன் வாழ -அரசு
உடனடி எண்ணுமா சூழ !
புலவர் சா இராமாநுசம்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி! இனிய பொங்கல்,புத்தாண்டு நல்வாழ்த்து! வாழ்க வளமுடன்!
Deleteஎனதினிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் .
ReplyDeleteமிக்க நன்றி! இனிய பொங்கல்,புத்தாண்டு நல்வாழ்த்து! வாழ்க வளமுடன்!
Deleteகொல்லும் பசிப்பிணி போக்கும்-உழவன்
ReplyDeleteகுறையென்ன கண்டதை நீக்கும்!
ஒல்லும் வகையவன் வாழ -அரசு
உடனடி எண்ணுமா சூழ !
தித்திக்கும் இனிய தைப் பொங்கல்,
உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்
மிக்க நன்றி! இனிய பொங்கல்,புத்தாண்டு நல்வாழ்த்து! வாழ்க வளமுடன்!
Deleteமிக்க நன்றி! இனிய பொங்கல்,புத்தாண்டு நல்வாழ்த்து! வாழ்க வளமுடன்!
ReplyDeleteசிறப்புக் கவிதை வழக்கம்போல் வெகு சிறப்பு
ReplyDeleteபகிர்வுக்கு நலவாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
மிக்க நன்றி! இனிய பொங்கல்,புத்தாண்டு நல்வாழ்த்து! வாழ்க வளமுடன்!
Deleteவணக்கம் ஐயா!
ReplyDeleteஅற்புதமான கவிதை!
பொங்கலிட்டுப் போற்றியே பூமிவளம் காத்திடுவோம்
எங்களுக்கும் ஈய்ந்தருள் என்று!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் உளமார்ந்த
இனித்திடும் தமிழ்ப்புத்தாண்டுப் பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி! இனிய பொங்கல்,புத்தாண்டு நல்வாழ்த்து! வாழ்க வளமுடன்!
Deleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
ReplyDeleteஇனிய பொங்கல் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி! இனிய பொங்கல்,புத்தாண்டு நல்வாழ்த்து! வாழ்க வளமுடன்!
Deleteகொல்லும் பசிப்பிணி போக்கும்-உழவன்
ReplyDeleteகுறையென்ன கண்டதை நீக்கும்!
ஒல்லும் வகையவன் வாழ -அரசு
உடனடி எண்ணுமா சூழ !..............
அதுதான் மதுக்குடியில் பீரும் விஸ்கியும் வாங்கி பொங்கி வடிய ரூபாய் நூறு கொடுத்தார்களே அய்யா........
அருமையான சமுக அக்கறை கொண்ட படைப்பு
பொங்கல் வாழ்த்துக்கள் அய்யா........
மிக்க நன்றி! இனிய பொங்கல்,புத்தாண்டு நல்வாழ்த்து! வாழ்க வளமுடன்!
Deleteமிக்க நன்றி! இனிய பொங்கல்,புத்தாண்டு நல்வாழ்த்து! வாழ்க வளமுடன்!
ReplyDeleteஅருமையான கவிதை.
ReplyDeleteஇனிய பொங்கல் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஐயா.