காணவில்லை
தமிழ்மணமே கண்டால் யாரும் – படும்
கவலைகளை விரிவாக எடுத்துக் கூறும்!
போனதெங்கே
சொல்லிவிட்டுப் போனால் என்ன – இங்கே
புலம்பபலர் செய்ததிலே பலன்தா னென்ன !
ஆனமட்டும்
பலமுறையே முயன்று விட்டோம் –தோல்வி
அடைந்ததன்றி முடிவாக துயரே பட்டோம்!
கானமற்ற
குயிலாகிப் பாடு கின்றோம் –அந்தோ
கண்மூடி
மனக்கண்ணால் தேடு கின்றோம்!
நல்லார்க்கு
என்றுமிது அழகா இல்லை – நம்மை
நம்பினார்கு கொடுப்பதா இந்தத் தொல்லை!
பல்லார்க்கும் ஏமாற்றம்
ஏனோ? மாற்றம் –உண்மை
பலரறிய
உடனடியாய் எடுத்து சாற்றும்!
எல்லார்கும்
காரணத்தை அறியச் செய்வீர் –மீண்டும்
எதிர்பட்டு பழையபடி அன்பைப்
பெய்வீர்!
இல்லார்க்கு கொடுப்பதே
தரும மாகும் – மனம்
இரங்கிவந்து காட்சிதர கவலை போகும்!
புலவர் சா இராமாநுசம்