Tuesday, October 8, 2013

என் ஐரோப்பிய சுற்றுப் பயணம்- பகுதி பனிரெண்டு ஆம்ஸ்டர்டாம் -2






                   ஆம்ஸ்டர்டாம் (7-8-2013)

              (7-8-2013 ) அன்றைய தினம் இறுதியாக நகரின்  மத்தியில்  ஓடும்  நதியில்  படகில் சுற்றி அழகிய வீதிகளையும் கண்டோம்! நீண்ட நேரம்! படகிலேயே சிற்றுண்டியும்  வழங்கப்பட்டது! பின்னர் விடுதிக்குத்
திரும்பினோம்

              மறுநாள் (8-8-2013 ) வழக்கப் படி காலையில் புறப்பட்டு
அந் நகரில்  உள்ள , புகழ் வாய்ந்த வைர ,தொழிற்சாலையில் (அணுமதி
பெற்று) உள்ளே சென்று பார்த்தோம்!  தலை சுற்றும் அளவுக்கு விலை!
வெளியில் வந்து விட்டோம்

               அங்கே வண்டியை  நிறுத்த இடமில்லை!  எனவே வேறு  எங்கோ  வண்டியை நிறுத்தியிருக்க , தொலைபேசி  மூலம் வரச் சொல்லி
காத்திருந்தோம்  அதன் பின்னர்  வண்டியில் இருந்தவாறே  மேலும்  நகரின்
அழகைப் பார்துக் கொண்டே பகலுணவுக்கு  சென்றோம்

                  காலையிலேயே  நாங்கள்  தங்கியிருந்த விடுதியைக்
காலி செய்து விட்டதால்  பகல் உணவு  முடித்ததும்  எங்கள்  பயணம்
கொலோன்  நகரம் நோக்கி  புறப்பட்டது

        அதற்கு முன் எடுக்கப்பட்ட  படங்கள்!  கீழே காணலாம்!