Friday, September 27, 2013

என் ஐரோப்பிய சுற்றுப் பயணம் பகுதி- ஒன்பது



              பாரிஸ்-5-8-13

           அதன் பிறகு , அன்று இறுதியாகக்  கண்ட இடம்
அழகு மிக்க, புகழ் வாய்ந்த மிக உயர்ந்த  ஈஃபிள் கோபுரமாகும்
கட்டுக்கடங்காத  கூட்டம்! எங்களைப் போல  வெளிநாட்டில்
வாழ்பவரே,  பலகுழுக்களாக வந்திருந்தனர் 

          எனவே அனுமதிச்  சீட்டை  முன்னரே  பதிவு செய்து
இருந்தும்  நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க  வேண்டியதாயிற்று
கோபுரத்தின் மேலே மூன்று  நிலைகள்!  முதல் இரண்டு நிலைகள்  வரை
செல்ல ஏதும்  தடையில்லை! மூன்றாவது  நிலை மட்டும் அப்போது
உள்ள கால நிலைக்கு ஏற்ப  அனுமதி கிடைக்கும் என்று  சொன்னார்கள்

            லிப்ட் வழியாகத்தான் அனைவரும் மேலே  போக முடியும்
எங்களுக்கான முறை வந்த  போது அனைவரும் ஒன்றாகப் போக 
இடமின்றி  இரண்டு குழுவாக மேலே போனோம்  முதல்  நிலையோடு
லிப்டு  நின்று விடும்  வட்ட வடிவமாக சுமார் நூறடி  அகலத்தில்  பாது
காப்புக்  கம்பிளோடு இருந்தது  நீளம் ஐநூறுக்கு மேல் இருக்கலாம் மையத்தில்  கழிப்பரை வசதியும்  இருந்தன

           அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப இரண்டுமுறை, மூன்று முறை
எனச் சுற்றிச் சுற்றி படமெடுத்து கொண்டனர் பாரிஸ் நகரம் முழுவதும் மிகத் தெளிவாகத் தெரிந்தது! நானும் எடுத்தேன்!  என்னை பெறுத்தவரை இலண்டன் நகரை விட பாரிஸ் நகரம் பெரிதாகத்  தோன்றியது

           அதை விட்டு  இரண்டாவது நிலைக்குச்  சென்றோம்  அது
அகலமும் , நீளமும் சற்று  குறைவாக இருந்தது  நகரம்  மேலும்
தெளிவாகத்  தெரிந்தது வேறு, வேறுபாடு இல்லை மூன்றாவது நிலை யும்
செல்ல  சிலர் விரும்ப அனுமதி, காலநிலை சரியில்லையென மறுக்கப் பட
கீழே வந்து தங்கும் விடுதிக்கு  வந்து சேர்ந்தோம்  அன்று இரவு பனிரெண்டு
மணி அளவில் தான  பாரிஸ் கம்பன் கழகத் தலைவர் வெண்பா வேந்தர்
திருமிகு பாரதிதாசன் அவர்களை சந்தித்தோம்

         கீழே  சில காட்சிகள்  ………….!  படத்தின் மீது அம்புக் குறியை
     வைத்து அழுத்தினால் படம் பெரிதாக , தெளிவாகத் தெரியும்

















Wednesday, September 25, 2013

என் ஐரோப்பிய சுற்றுப் பயணம்- பகுதி எட்டு




                  இலண்டன்(-4-8-2013)
       இரயில்  நிலையத்தில்  கிட்டத் தட்ட ஒரு மணி நேரம் காத்திருந்தோம். இரயில்  வந்ததும் நீண்ட நேரம் நிற்காது என்பதால்    அவசரம் அவசரமா ஏறி ( ஒதுக்கப்பட்ட வாறு) அனைவரும்
உரிய இருக்கையில்  அமர்ந்தோம்  சில நிமிடங்களிலேயே வண்டி
புறப்பட்டு அதிவேக  இரயில் என்பதற்கு ஏற்ப  விரையத்  தொடங்கியது
வழி நெடுக  பலகாட்சிகள்  கண்டாலும்  கடலுக்கு  உள்ளே எப்படி செல்கிறது  என்பதைக்காணவே ஆவலாக இருந்தோம் ஆனால்…!

          வண்டி  திடீரென்று  குகைக்குள் செல்வது போல இருந்தது
அதுவரை  கண்டு வந்த வெளிக்  காட்சிகள் மறைந்தன அரை மணிநேரம்
இருக்கலாம் மீண்டும் வெளிக் காட்சிகள் கண்ணில்  தோன்ற அப்போது தான்இதுவரை கடலின்  உள்ளே வந்து  கரையேறி விட்டோம் என்பதும் பாரிஸ் வந்து விட்டது என்பதும் உணர்ந்தோம்! மேலும் ஒரு மணி நேரம் ஓட பாரிஸ் நகரை அடைந்தோம்

            மிகப் பெரிய இரயில் நிலையம்!  நீண்ட  தூரம் நடந்து வந்துதான் வெளியே  வந்தோம் அங்கே எங்களுக்காக  காத்திருந்த
பேருந்தில் ஏறி நேராக தங்கும் விடுதிக்குச்  செல்லாமல்  வண்டியில்
இருந்த வாறே நகரின் பல்வேறு  இடங்களைப் சுற்றிப் பார்த்தோம்

         மங்கிய  வெளிச்சத்தில்  தொடங்கிய  பயணம்  வண்ண ஒளிமயமாக விளங்கும்  நகரின்  பல பகுதிகளுக்கும் சென்றது இரவு ஒரு மணி அளவில்தான்  தங்கும்  விடுதிக்கு  சென்றோம்

            பாரிஸ்-5-8-13

         விடிந்ததும் வழக்கம்  போல காலை உணவை  முடித்துக்
கொண்டதும்  நகர  சுற்றுலா தொடங்கியது  இன்றும் பல இடங்களை
வண்டியஅல்  அமர்ந்த வாறே கண்டோம் பகல்  உணவு முடித்து அங்குள்ள லூவர் மியூசியம் சென்று பார்த்தோம்  வழக்கமான கலைப்  பொருள்கள் தான் ஆனால்  வெகு அழகாக பராமரிக்கப் படுகிறது

        படிகள் மிகுதி! எனவே முழுவதும் நான் பார்க்க வில்லை
அதை முடித்திக் கொண்டு, சீன் நதியில்  படகு  சவாரி!அனைவரும்
மிகவும் விரும்பிய ஒன்றாக, நன்றாக  இருந்தது இரண்டு மணி நேரம்!
போனதே  தெரியவில்லை படங்களும் அதிகமாக எடுத்தோம்

       அங்கு, எடுத்த படங்களுடன்  நகர உலாவின் போது
எடுத்த படங்களையும்  கீழே  காணலாம்!

















Monday, September 23, 2013

என் ஐரோப்பிய சுற்றுப் பயணம் பகுதி- ஏழு






           இலண்டன்(-4-8-2013)
      
      என்னால்  மேலும் இனி நடக்க இயலாது  நீங்கள்  அனைவரும்
போங்கள்! நான் பார்க்கா விட்டாலும்  பரவாயில்லை நேரமாகிவிடும் என்று  கூறி  என் கைப்பையையும்  நண்பரிடம் கொடுத்து விட்டு வழிகாட்டியிடம்
என்னை மட்டும்  உட்கார (பாதுகாப்பாக) இடத்தைக்  ஏற்பாடு  செய்ய முடியுமா என்று கேட்டேன்

       அவர், சற்று பொறுங்கள்  என்று கூறி, பயண ஏற்பாட்டாளர்
இராசேந்திரரோடு  உள்ளே சென்று யாரிடமோ  பேசிவிட்டு திரும்பி
வந்து , உங்களுக்கு சக்கர நாற்காலி வண்டி ஏற்பாடு  செய்துள்ளோம்
என்று சொல்ல, இராசேந்திரர், உங்களோடு நான்  வருகிறேன் வழிகாட்டி அவர்களோடு போவார் என்றார்


        அது வேறு வாயில்  என்பதால் அதைத் தேடிப் போனோம் அங்குள்ள
காவலரிடம் கேட்டதும்  அவர் தன்  கையில்  உள்ள தொலை பேசி வாயிலாக தகவல்  தெரிவிக்க பத்துநிமிடங்களுக்குள் ஆட்டோ போல
ஒரு வண்டி  வந்தது அதில் எங்களை ஏற்றிவிட சென்று இறங்கினோம்

     அங்கு சக்கர நாற்காலி வண்டி தயராக இருந்தது அதில் நான்
அமர்ந்தேன் . திரு இராசேந்தரிடம் ஏதேதோ கேட்டு எழுதி கையெழுத்தும்
வாங்கினார்கள் அதன்பின் அவரே வண்டியை தள்ளத் தொடங்கினார்
அதனால் நான்  மிகவும் துன்பத்தோடு அவரிடம் வருத்தம்  தெரிவிக்க
அவர், என் தந்தையைப்  போல உள்ள உங்களுக்கு  சேவை செய்ய
ஒரு வாய்ப்பு  கிடைத்ததே என்று சொன்னதைக் கேட்டு நெகிழ்ந்து
போனேன்

       சக்கர நாற்காலியில்  செல்வதற்கென்றே உரிய வழி ஏற்ற இறக்கங்களுடன்  இருந்ததால்  எதுவும்  சிரமமின்றி ஒரு  மணிநேரத்திற்கு
மேல்  சுற்றினோம் மிகப்  பெரிய  அரண்மனை! நேர்த்தியாக கட்டப் பட்டு
இருந்தாலும்  எங்கு  பார்த்தாலும்  (முழுவதும்) வழிவழி  வந்த  இராச பரம்பரை பற்றிய  வரலாறு, முடிசூட்டிக்  கொள்வது இராணுவ  அணிவகுப்பு
ஆகியன  பற்றியே, ஓவியங்களாக,தீட்டப்பட்டும்  புகைப் படங்களாவும்
இருந்தன! சில குறும்  படங்களும் ஆங்காங்கே காட்டப் பட்டன இது காணும்
மக்களுக்கு ஒருவித சலிப்பைத்தான் ஏற்படுத்தும் என்பதே  என் கருத்து புகைப்படக் கருவியும் ,பையும்  நண்பரிடம் இருந்ததால் படமெடுக்க வில்லை! அது  எனக்கு அவசியமாகவும் படவில்லை!

         அன்று  பகல் இரண்டுமணி அளவில் இலண்டனை விட்டு  பாரிஸ்
செல்ல யூரோஸ்டார் என்னும் அதிவேக இரயில் (,கடலுக்குள்  செல்வது)மூலம்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால்  நாங்கள்   சென்றவாறே
வெளியில் வந்தோம்
        
         அங்கே வண்டியும் மற்றவர்களும் வந்துவிட சென்று  பகல் உணவை முடித்துக்  கொண்டு  இரயில்  நிலையத்தை அடைந்தோம்
  
      கீழே சில படங்கள்! இலண்டன் ஐ ,யில் மேலிருந்து எடுத்த
என்னால் எடுக்க முடியாமல் போன காட்சிகள்( நண்பரிடம் பெற்றேன்)
இடம்  பெற்றுள்ளதைக் காணலாம் அரண்மனை வெளித் தோற்றங்கள்
இரயில் நிலையம் ஆகியனவும்  காணலாம்!
 .