1 அறஞ் செய
விரும்பு! என்று ஔவையார் சொன்னார்!
அறஞ் செய் ! என்றே சொல்லியிருக்கலாமே! சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் தானே செய்யுளுக்கு அழகு!
ஔவையாருக்கு அது ,தெரியாது என்றா சொல்லமுடியும்!! பின், அவ்வாறு சொல்ல என்ன காரணம்!!?
உறவுகளே! சிந்தியுங்கள்! உங்கள் சிந்தனை கூறும் மறு மொழிகளை கண்டு நாளை என் கருத்தினை எழுதுகிறேன்

2 அன்பர்களே!
நேற்று, நான் போட்ட பதிவின் நோக்கம், வெறும் பொழுது போக்காகப் படிக்காமல் ,மேலும் உங்கள் சிந்தனையை சற்று தூண்டலாமே என்பது தான்! ஆனால்....
விருப்பம் தெரிவித்தவர் 35-பேரும், மறுமொழி தந்தவர்,9-பேரும் தான்! அது , எனக்கு சற்று ஏமாற்றமே!
3 அனைவருக்கும் மிக்க நன்றி! மறுமொழி தந்தவர்களின் பொரும்பாலார் கருத்தே , என் கருத்தாகும்! அறம் செய் என்பது கட்டளை வாக்கியம். அது நடந்தாலும் நடக்கலாம். நடக்காமலும் போகலாம் . விரும்பு என்று சொன்னால் , அவன் தனக்குள்ளயே விருப்பத்தை உருவாக்கிக் கொள்வது ஆகும் ! அது, செயல் நடைபெற ஏதுவாகும்!

4 இல்லறம் அல்லது நல்லறம் அன்று
மனைவி மக்களோடு சேர்ந்து வழும் குடு்ம்ப வாழ்க்கையே சிறந்தது. மற்ற துறவற வாழ்க்கை அற வாழ்வு ஆகாது
எண்ணும் எழுத்தும் கண்எனத் தகும்
கணிதமும் எழுத்தும் நம்முடைய இரு கண்கள் என்று சொல்லத் தக்கன!

5
பூக்காமலே காய்க்கும் ஆலமரம் ,அத்தி மரம்,பலாமரம் போன்ற மரங்கள் உள்ளன. அதுபோல மனிதர்களிலும்
சொல்லிச் செய்யாமல் குறிப்பறிந்து தாமாகவே செய்யும்
மக்களும் உலகத்தில் உள்ளனர்
6 மனித உயிர்களுக்கு
எது மேன்மையைக் கொடுக்கும் என்றால் ,ஒழுக்கம் ஒன்றுதான் என்று உறுதியாகச்
சொல்லலாம்! ஒழுக்கம் உருவம் என்றால்
மற்ற அனைத்தும் அதன் நிழல் போன்றவை உருவம்
போகும் வழி நிழலும் பின் தொடர்வதைப்போல மற்ற சிறப்புகளும் ஒழுக்கத்தை பின் தொடர்ந்து நமக்கு வரும்
வள்ளுவப் பெருமான் கூட ஒழுக்கம் உயிரைக் காட்டிலும் பாது காக்கப்பட வேண்டும் என்றே சொல்கிறார்! போனால் திரும்பி வாராதது உயிர் மட்டுமல்ல ஒழுக்கமும் ஆகும்!

புலவர் சா இராமாநுசம்