1
ஆலமரத்தினுடைய விதையானது மிகமிகச் சிறியது. ஆனால் அது முளைத்து மரமாகி விரிந்து கிளைகளும் விழுதுகளுமாக பரந்து பலபேர் அதன் கீழ், தங்கி,
இளைப்பாற இடமாகிறது. ஆனால் பனை
மரத்தின் விதையோ மிகவும் பெரியது என்றாலும் அது முளைத்து மரமானால் அதன் , கீழ் எத்தனைப் பேர்
தங்கி இளைப்பாற முடியும்?
எனவே நம்மில் , சிறியவர், பெரியவர் என்ற பாகுபாடுகளை எண்ணாமல் அவர்களின் செயலால் ஏற்படும் பயன்களைக் கருதியே முடிவு செய்தல் வேண்டும்
எனவே நம்மில் , சிறியவர், பெரியவர் என்ற பாகுபாடுகளை எண்ணாமல் அவர்களின் செயலால் ஏற்படும் பயன்களைக் கருதியே முடிவு செய்தல் வேண்டும்
2
பொய்யுடை ஒருவன் சொல்வன் மையால்
மெய்போ லும்மே மெய்போ லும்மே!
பொய் பேசும் ஒருவன் தான் சொல்லும் திறமையால் அவன் சொல்லும் பொய், உண்மைபோலவே தோன்றும்
மெய்யுடை ஒருவன் சொலமாட்டாமையினால்
பொய்போ லும்மே பொய்போ லும்மே!
உண்மை பேசும் ஒருவன் பேசும் திறம் இல்லாமையால் அவன் கூறும் உண்மையும் பொய்போலத் தோன்றும்

3
ஒரு நாளைக்கு உண்பது ஒரு நாழி அரிசி சோறாகும்!
உடுத்திக் கொள்வது நான்கு முழத் துணியாகும்! ஆயினும்
நாம் மனதில் சிந்தித்து எண்ணுவது எண்பது கோடியாகும். இதை அறியாது அறிவுக் கண் மூடி வாழ்கின்ற
குடிமக்களின் வாழ்க்கையானது எப்பொழுது
வேண்டுமானலும் உடைந்து போகக்கூடிய மண்ணால் ஆன
பாத்திரத்துக்கு ஒப்பாகி சாகும்வரை துன்பம் தரும்!
பாத்திரத்துக்கு ஒப்பாகி சாகும்வரை துன்பம் தரும்!
புலவர் சா இராமாநுசம்