Saturday, December 21, 2013

அன்புப் பெரியவர் ,ஐயா G.m பாலசுப்பிரமணியம் விருப்பத்திற்கு ஏற்ப மயில் பற்றிய கவிதை





 சிறுவன்

மயிலே மயிலே நீயேனோ - உன்
மனதை மயக்கும் உன்தோகை
ஒயிலாய் விரிய நடமாடி - பெரும்
உவகை கொண்டு ஆடுகிறாய்

மயில்

வெள்ளி வானில் கருமேகம் - பரவி
விரைய மயிலும் ஆடுமென
பள்ளிச் சிறுவா நீபாடம் - என்றும்
படித்த தில்லையா ஒரு நாளும்

சிறுவன்

அழகுமிக்கப் பொன் மயிலே - நடனம்
ஆடிக் காட்டும் நல்மயிலே
பழகிக் கொண்டால் உன்குரலும் - அந்த
பாடும் குயிலாய் ஆகாதோ

மயில்

குயிலின் இனிமை என்குரலில் - நான்
கூட்டிக் காட்ட சிறுவாநீ
பயில வருமென எண்ணாதே - இறைவன்
படைப்பை வெல்ல ஆகாதே!

                   புலவர்  சா  இராமாநுசம்
       

35 comments :

  1. மயிலைப்போல் கவியும் அழகு

    ReplyDelete
  2. தமிழ் மணம் +1
    ஒரு கேள்வி! இது மாதிரி கவிதை எழுத எவ்வளவு நேரம் ஆகும் உங்களுக்கு! ஒரு காரணமாக கேட்கிறேன்!
    நன்றி!


    ReplyDelete
    Replies
    1. பொதுவாக அதிகாலை என்றால் முப்பது மணித் துளிகள் அல்லது சற்று ஏறக் குறைய ஆகலாம் சூழ்நிலையும் அமைய
      வேண்டும் இப்போதெல்லாம் முதுமையின் காரணமாக அதிகம்
      எழுதவோ , படிக்கவோ இயலவில்லை!
      மிகவும் நன்றி!

      Delete
  3. அழகு கவிதை!
    இறைவன்.. அததற்குத் தேவையானதை அழகாகவே படைத்திருக்கின்றான்.
    ஒன்றைப்போல் இன்னொன்று இருக்க வேண்டும் என்றில்லாமல் தன் தன் தனித்துவத்தை திறமையாகக் கொண்டால் சிறப்புத்தான் ஐயா!

    அருமையான கவிதை!

    வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  4. அருமையான கவிதை ஐயா
    நன்றி

    ReplyDelete
  5. அழகு... அருமை ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. என் பதிவில் நீங்கள் எழுதுவதாகப் பின்னூட்டம் ஏதும் காணப் படவில்லை. இருந்தாலும் ஒரு நப்பாசை என்னை இங்கே அழைத்து வந்தது.கவிதை கண்டு மிக்க மகிழ்ச்சி.கவிதை நன்றாக இருக்கிறது எனச் சொல்வது சர்க்கரை இனிக்கிறது என்று சொல்வது போலாகும்.நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. அன்பின் இனிய பெரியீர்! வணக்கம்!
      மன்னிக்க! மறதி வயோதிகம் அவ்வப் போது வரும் முதுகு வலி போன்ற தொல்லைகள்! அதனால் ஏற்பட்ட தவறு,இது பொறுத்தருள்க!

      பாராட்டுக்கு மிக்க நன்றி!

      Delete
  7. சிறுவனும் – மயிலும் உரையாடும் கவிதை அருமை! அய்யா நீங்கள் உடல்நலம் பேணவும். எனக்கும் கடுமையான முதுகுவலி! அதனால்தான் முன்புபோல் பல வலைத்தளங்களுக்கு செல்ல இயலவில்லை!

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி!

      Delete
  8. த ம 8. கேட்டவர்க்கெல்லாம் கவிதை கொடுக்கிறீர்களே! வாழ்க நீவிர்!

    ReplyDelete
  9. அருமை மயில் பற்றிய கவிதை ஐயா!

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி!

      Delete

  10. வணக்கம்!

    தமிழ்மணம் 9

    மயிலைக் குறித்து வடித்த கவிதை
    உயிரை மயக்கும் உவந்து

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி!

      Delete
  11. அழகான கவிதை மயில் போல....

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி!

      Delete
    2. பாராட்டுக்கு மிக்க நன்றி!

      Delete
  12. அழகான கவிதை. பகிர்வுக்கு நன்றி புலவர் ஐயா.

    ReplyDelete
  13. வயோதிகம் அவ்வப் போது வரும்
    முதுகு வலி போன்ற தொல்லைகள்! //

    மயிலின் தோகை வருடாதோ
    மனதை வாட்டும் வலி போக நாம்
    உயிராய் மதிக்கும் எம் தெய்வம்
    உடலும் தேறி நலன் காண .........

    விரைவாய்க் கவிதை மலர் தந்து எம்
    விருப்பம் பேணிக் காப்பவரை
    இறைவா நீயும் அறியாயோ
    இன்னல் தீர்த்து அருளாயோ ?...!!

    ReplyDelete
  14. Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி!

      Delete
  15. அழகான கவிதை..பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி!

      Delete
  16. Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி!

      Delete
  17. மயிலும் சிறுவனும்
    பாவாலே பகிருவது
    அழகாக இருக்கு!

    ReplyDelete
  18. ஆழமான கருத்துடன்
    அற்புதமான கவிதை
    பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...