Friday, December 6, 2013

என் முகநூல் பதிவுகள் -ஏழு






ஒருவன் தவறு செய்தால் அவனுக்கு , நாமோ அல்லது சட்டத்தின் மூலமாகவோ தண்டணைத் தரமுடியும் ! அதனால்
நமக்கு கிடைக்கும் இன்பம் சில நாட்கள் மட்டுமே நிலைக்கும்! ஆனால் , அத்தவறை பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால் , நாம் வாழும் நாள் வரை நமக்குஅது, இன்பம்
தரும்!


எப்படியும் வாழலாம் ,என எண்ணி வாழ்வோர் மத்தியில், இப்படிதான் வாழவேண்டுமென திட்டமிட்டு, அதாவது, வாழவேண்டிய முறைப்படி உலகில் வாழ்கின்ற ஒருவன் வானுலகில் வாழ்கின்ற தெய்வத்திற்குச் சமமாகப் போற்றப்
படுவான்


கண்ணெதிரே ஒருவரை வைத்துக் கொண்டு கொஞ்சம் கூட தயவு, தாட்சணியம் இல்லாமல் அவரைப்பற்றி நல்லதோ , கெட்டதோ சொல்வதில் எந்த தவறும் இல்லை! ஆனால் அவரைப் போகவிட்டு புறத்தே அவரைப் பற்றி இழித்தோ ,பழித்தோ பேசுவது மாபெரும் தவறாகும்!


நாம் யாரையாவது பார்த்து , நீ செத்துப் போறது நல்லது என்று சொல்வோமா! சொல்ல முடியுமா !ஆனா வள்ளுவர் சொல்கிறாரே!

ஒருவன் புறங்கூறி அதனால் வரும் பொய்யான வாழ்க்கையை, வாழ்வதைக்காட்டிலும் அவ்வாறு வாழாமல் இறந்து போதல் அறவழி கூறும் செல்வத்தை அவனுக்குக் கொடுக்கும் என்று!


உயிரோடு இருக்கிற வரைக்கும் தான் எவரையும் பெயரோ, உறவுமுறையோ சொல்லி அழைக்கிறோம்! உயிர் போயிட்டா
எல்லாருக்கும் ஒரேபெயர்தான்! பிணம்!


கல்லானது பிளவை பட்டால் மீண்டும் ஒட்டாது! அதுபோல சிலரோடு ஏற்பட்ட நட்பும் பிளவு பட்டால் மீண்டும் சேர்வதில்லை! ஆனால் சிலரோடு ஏற்பட்ட நட்பு , பொன் பிளவு பட்டாலும் மீண்டும் ஒன்று சேர்வது போன்று சேர்வதுண்டு! இதுதவிர சிலரோடு ஏற்பட்ட நட்பு , பிளவு பட்டாலும் நீர்மேல் கிழித்த கோடுபோல மறைந்து மீண்டும் ,விரைந்து ஒன்று சேர்ந்து விடும்!

                                புலவர்  சா  இராமாநுசம்



23 comments :

  1. வணக்கம்
    ஐயா
    உயிரோடு இருக்கிற வரைக்கும் தான் எவரையும் பெயரோ, உறவுமுறையோ சொல்லி அழைக்கிறோம்! உயிர் போயிட்டா
    எல்லாருக்கும் ஒரேபெயர்தான்! பிணம்!

    மனித வாழ்வில் நடக்கும் சம்பவங்களை மிக அழகாக எடுத்துச்சொல்லிய விதம் அருமை வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. கண்ணதாசன் அவர்கள் செப்புமொழிகள் என
    இதுபோல ஆழமான கருத்துடைய பல மொழிகள்
    எழுதியுள்ளார், தங்கள் பதிவுகள் அதை
    நினைவுறுத்திப்போகிறது
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. # உயிர் போயிட்டா
    எல்லாருக்கும் ஒரேபெயர்தான்! பிணம்!#
    பிணம் என்றால் ஆண் பாலுக்கும் பெண் பாலுக்கும் பொதுவான சொல் என்பதும் சிந்திக்கத் தக்கது அய்யா !
    +1

    ReplyDelete
  4. சிந்திக்க வேண்டிய (வைத்த) கருத்துக்கள் ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. தவறு செய்பவனுக்கு தண்டனை தருவதால் நமக்கு இன்பம் கிடைக்கிறதோ இல்லையோ ஆனால் அவன் தண்டனை பெறுவதால் மீண்டும் அவன் தவறுகள் செய்யாவண்ணம் கொஞ்சமாவது தடுக்க முடியும் அல்லவா ?

    மற்ற கருத்துக்கள் அருமை

    ReplyDelete
  6. பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. சிறப்பான பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா !

    ReplyDelete
  8. அத்தனை கருத்துக்களுமே சிந்திக்க வேண்டியவை... மிக்க நன்றி ஐயா..

    ReplyDelete
  9. மறுக்கமுடியாத உண்மைதான் ஐயா.. முகத்திற்கு நேரே பேசுவதே சாலச்சிறந்தது. நட்பைப்பற்றி தாங்கள் கூறியதும் முற்றிலும் உண்மை.:) நன்றி நல்லதொரு பகிர்விற்கு _/\_

    ReplyDelete
  10. அருமையான கருத்துகள்..... பகிர்வுக்கு நன்றி புலவர் ஐயா.

    த.ம. 7

    ReplyDelete
  11. சிந்தனை வரிகள் ஐயா
    நன்றி

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...