அந்தோ மறைந்தார் நம்மாழ்வார்- என்றும்
அனைவர் மனதிலும் அவர்வாழ்வார்!
தந்தார் இயற்கைச் விவசாயம்-அழியாத்
தரமுடன் வாழ்ந்திட நம்தேயம்!
காலன் அவரையும் விடவில்லை –இயற்கை
காலத்தால் நடப்பதாம்! ஏதுஎல்லை!
ஞாலம் வாழ்ந்திட வழிகண்டார் –எடுத்து
நாளும் நமக்கதை அவர்விண்டார்
வாழ்நாள் முழுவதும் அதற்கென்றே-அவர்
வாழ்ந்து பெற்றது புகழொன்றே!
வீழ்நாள் நமக்கும் வரும்ஒன்றே –அவர்
விட்டதைத் தொடர்வோம் நனிநன்றே
புலவர் சா இராமாநுசம்
தங்களது நம்மாழ்வார் நினைவஞசலியில் நானும் உங்களோடு இணைந்து கொள்கிறேன். அன்னாரது ஆன்மா அமைதி அடையட்டும்!
ReplyDeleteதங்களது நம்மாழ்வார் நினைவஞசலியில் நானும் உங்களோடு இணைந்து கொள்கிறேன். அன்னாரது ஆன்மா அமைதி அடையட்டும்!
ReplyDeleteவீழ்நாள் நமக்கும் வரும்ஒன்றே –அவர்
ReplyDeleteவிட்டதைத் தொடர்வோம் நனிநன்றே//
அன்னாரது ஆன்மா அமைதி அடையட்டும்
அன்னாரது ஆன்மா அமைதி அடையட்டும்...
ReplyDeleteஅவர் விட்டுச் சென்ற பணிகளைத்
ReplyDeleteதொய்வின்றித் தொடர்வதே அவருக்கு
நாம் செய்யும் சிறந்த அஞ்சலி
அஞ்சலிக் கவிதைக்கு நன்றி
வணக்கம்
ReplyDeleteஐயா.
சிறப்பான பதிவு ஆத்மா சாந்தியடையட்டும்..
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.....இந்த வருடத்தில் தங்கள் வாழ்வில் புது வசந்தங்கள் வீசட்டும்.....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ஐயா! அஞ்சலிக் கவிதைக்கு நன்றி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்! நன்றி!
ReplyDeleteஅஞ்சலி கவிதை நன்று.
ReplyDeleteஅவரது ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகளும்......