Thursday, December 26, 2013

ஏனோ தொடங்கினேன் முகநூலே-நான் எழுதிட எழுதிட அகம்நாளே!



ஏனோ தொடங்கினேன் முகநூலே-நான்
எழுதிட எழுதிட வலைநாளே!
தானே வந்திடும் பதிவுபல-வர
தொல்லை தந்திடும் பதிவுசில!
தேனாய் இனித்திடும் சிலவேளை
தேளாய் கொட்டும் பலவேலை!
ஆனால் விடவும் இயலவில்லை-எனினும்
அஞ்சுதல் வாழ்வில் பயிலவில்லை!

நித்தம் எழுதியே வருவேனே – உலகில்
நிலையல வாழ்வு அறிவேனே!
சித்தம் மகிழ மறுமொழியும்-உடன்
செப்பிட விருப்பம் தருமொழியும்!
சத்தென என்னை வாழ்விக்கும்-மருத்துவ
சக்தியாய் மேலும் ஊக்குவிக்கும்!
வித்தென நாளும் வருவீரே-அதுவே
விளைந்திட விருப்பம் தருவீரே!

புலவர் சா இராமாநுசம்

19 comments :

  1. ஏனோ எழுதினேன் முகநூலே.... அருமை ஐயா.

    ReplyDelete
  2. ஐயாவிற்கு வணக்கம்
    அருமை ஐயா. வாழ்வியலை வார்த்தைகளில் கோர்த்த விதம் மிக அழகு. ரசித்து படித்தேன். பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  3. அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்...

    ReplyDelete
  4. அருமை ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. அருமை ஐயா..... பாராட்டுகள்.

    ReplyDelete
  6. அருமையான கவிகளைப் போல் அகமும் மகிழ்ந்திட
    தித்திக்கும் புத்தாண்டில் இன்னருள் பாலிக்க இறைவனையும்
    வணங்கித் தங்களின் வாழ்த்தினையும் பெற்றிட வந்தேன் ஐயா .

    ReplyDelete
  7. (த.ம.6)
    முகநூல் என்பது முகத் துதியா?
    முகத்தில் குத்தும் குறுவாளா?
    அகத்தை எழுதும் பலகையது!
    ஆனால் கசப்பும் நெளிகிறது!
    போனது எல்லாம் போகட்டும்,
    பொழுதைக் கழிக்க நல்ல வழி!

    ReplyDelete
  8. சிறுவர் பெரியவர் அனைவரையும் கவர்ந்திழுத்து விடுகிறது முக நூல்.அகத்தினை வெளிபடுத்த உதவுகிறதே. அகநூல் என்றும் பெயரிடலாம் போலிருக்கிறது. அழகாகக் சொன்னீர் ஐயா!

    ReplyDelete
  9. விடாது தொடரும் உங்கள் துணிச்சல்தான் எனக்கும் ஊக்கம் தருகிறது +1

    ReplyDelete
  10. தொடர்ந்து எழுதுங்கள்
    தங்கள்
    எழுத்துப்பணி தொடர
    என் வாழ்த்துகள்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...