Monday, December 23, 2013

நீயா நானா விளையாட்டே-தேர்தல் நெருங்க நெருங்கத் தமிழ்நாட்டில்!



நீயா நானா விளையாட்டே-தேர்தல்
நெருங்க நெருங்கத் தமிழ்நாட்டில்!
காயா பழமா விளையாட்டே-அந்தோ
கண்கிறோ மிந்த தமிழ்நாட்டில்!
தாயா பிள்ளையா இருந்தாரும்-இங்கே
தனியாய் தனியாய்ப் பிரிந்தாரும்!
வாயா போயா விளையாட்டும் -மேலும்
வளர்ந்து நாளும் களைகட்டும்!

மட்டைப் பந்து விளையாட்டே-அது
மட்டுமா சிறந்த விளையாட்டே!
திட்ட மிட்டே ஆடுகின்றார்-பொருள்
தேடிட சூதையும் நாடுகின்றார்!
வெட்ட வெளிச்சம் ஆனபின்பும்-எதற்கு
வீணே நீயா நானென்றல்!
இட்டம் போல ஆடட்டும் -இனி
எப்படி யேனும் போகட்டும்!

எங்கும் எதிலும் இதுவேதான்-உலகு
எங்கும் காணல் இதுவேதான்!
பொங்கும் உணர்வே இதுவேதான்-தினம்
போட்டியில் பார்ப்பது இதுவேதான்!
தங்குத் தடையே இல்லாமல்-நாளும்
தயங்கி எதுவும் சொல்லாமல்!
இங்கே நானும் எழுதுவ-என்னுள்
இருப்பதும் நீயா நானன்றோ

புலவர் சா இராமாநுசம்

19 comments:

  1. இந்த நீயா நானா விளையாட்டில் எப்பவும் தோற்பவர்கள் மக்களாகத்தான் இருக்கிறார்கள் !
    +1

    ReplyDelete
  2. சரியாய் சொல்லியுள்ளீர்கள்...

    ReplyDelete
  3. என்ன செய்வது! தமிழ்நாட்டில் எப்போதுமே இருமுனைப் போட்டி தானே! மூன்றாவது அணி அமைத்துப் போட்டியிடும் தைரியம் யாருக்கும் இல்லையே! அதுவரை உங்களிடமிருந்து 'நீயா நானா' மாதிரி நல்ல கவிதைகள் பிறந்துகொண்டே இருக்கும்!

    ReplyDelete
  4. கிரிக்கெட் ஆளுங்களை செமையா காலை வாரி விட்டுட்டீங்க அய்யா....

    ReplyDelete
  5. இட்டம் போல ஆடட்டும் -இனி
    எப்படி யேனும் போகட்டும்!

    என்று நாமிருந்தால்
    கொட்டம்தான் இடுவர்

    சட்டமியற்றுவோம் அல்ல
    சரியானதை உருவாக்குவோம்

    ReplyDelete
  6. இதுவும் பருவகாலம் போல விளையாட்டு

    ReplyDelete
  7. தேர்தல் விளையாட்டை பற்றி கவிதையில் விளையாடியது அருமை

    ReplyDelete
  8. தேர்தல் விளையாட்டு - மக்களின் வரிப் பணத்தில்...... :(

    ReplyDelete
  9. .தொடர்கதைதான் :)

    ReplyDelete