ஓட்டு ஓட்டு என்றீர்கள்-நம்
ஊரை ஆளச் சென்றீர்கள்!
கேட்டு வாங்கிப் போனீர்கள-பின்
கேடே செய்வதாய் ஆனீர்கள்!
நாட்டு நடப்பைப் பாருங்கள்-மிக
நன்றா? ஒன்றா? கூறுங்கள்!
காட்டுக் கூச்சல் ஒன்றேதான்-தினம்
கட்சிகள் செய்வது இன்றேதான்!
மக்கள் அவையே கூடுவதும்-உடன்
மாநில அவையே கூடுவதும்
தக்கது பேசி முடிப்பதற்கா-வீண்
தகராறு செய்தே கெடுப்பதற்கா
அக்கரை இல்லை யாருக்கும்-எதையும்
ஆய்வதும் இல்லை பேருக்கும்
துக்கமே உண்டா துளிகூட-காணும்
தொடர்கதை ஆனது நாம்வாட
ஒவ்வொரு முறையும் நடக்குதய்யா-தினம்
உண்மை! உண்மை! இதுபொய்யா
இவ்வகை நடப்பின் எவ்வாறே-நாடு
ஏற்றம் பெறவா!? இவ்வாறே
செவ்வகை ஆட்சி நடைபெறுமா?-நன்கு
சிந்தனை செய்யின் தடைபடுமா!
எவ்வகை நலமென அவைதன்னில்-பேசி
எடுப்பதே முடிவு! சரியெண்ணில்!
புலவர் சா இராமாநுசம்
ஆதங்கம் எனக்குள்ளும். கடந்த சில வருடங்களாகவே இப்படி கூச்சலும் குழப்பமும் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. எந்த முடிவுகளும் எடுக்காது குழப்பம் ஏற்படுத்த கோடிக்கணக்கில் செலவு....
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஅவையை முடக்குபவர்களுக்கு அலவன்ஸ் ,பென்சனும் முடக்கப்படும் என்று சொன்னால் திருந்துவார்கள் !
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஎதிலும் அக்கறை இல்லை ஐயா - பணம் தவிர...!
ReplyDeleteமிக்க நன்றி!
ReplyDelete"அக்கரை இல்லை யாருக்கும்-எதையும்
ReplyDeleteஆய்வதும் இல்லை பேருக்கும்" என்பதில்
உண்மையிருக்கே...
தங்கள் வருவாயை மட்டுமே
இருசாராரும் (வாக்குப்போட்டோர், வாக்குக்கேட்டோர்)
எண்ணுகின்றனரே!
மிக்க நன்றி!
Deleteஇதையெல்லாம் பேசிப் பயனில்லை பெருந்தகையீர்! அடுத்த முறை வோட்டுப் போடும்போது nota வுக்கு வோட்டளித்துவிடுங்கள். அதற்கப்புறமாவது புத்திவருமா என்று பார்க்கலாம்.
ReplyDeleteமிக்க நன்றி!
Deletetamilmanam 7
ReplyDeleteமக்கள் அவையே கூடுவதும்-உடன்
ReplyDeleteமாநில அவையே கூடுவதும்
தக்கது பேசி முடிப்பதற்கா-வீண்
தகராறு செய்தே கெடுப்பதற்கா//
அனைவர் மனதிலும் உள்ள கேள்வி
அருமையான கவியாக்கித் தந்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
மிக்க நன்றி!
Deletetha.ma 8
ReplyDeleteமிக்க நன்றி!
Delete
ReplyDeleteமக்கள் அவையே கூடுவதும்-உடன்
மாநில அவையே கூடுவதும்
தக்கது பேசி முடிப்பதற்கா-வீண்
தகராறு செய்தே கெடுப்பதற்கா
அக்கரை இல்லை யாருக்கும்//
உண்மையை இடித்து உரத்த வரிகளுக்குத்
தலைவணங்குகின்றேன் ஐயா !!
மிக்க நன்றி!
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி!
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
த.ம 10வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி!
Deleteஅவையில் பேசு வதற்குக் கூட பணம் கேட்பவர்கள் ஆயிற்றே. நல்ல கவிதை ஆயிற்றே .
ReplyDeleteசெவ்வகை ஆட்சி நடைபெறுமா?-நன்கு
ReplyDeleteசிந்தனை செய்யின் தடைபடுமா!
எவ்வகை நலமென அவைதன்னில்-பேசி
எடுப்பதே முடிவு! சரியெண்ணில்!
அருமை அத்தனையும் உண்மை
ஆதங்கம் ஒவ்வொரு வரிகளிலும் தெரிந்தது
பகிர்வுக்கு நன்றி...!
தங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களும் நத்தார் வாழ்த்துக்களும்
உரித்தாகட்டும்.....!
தங்கள் பணி நன்றே தொடர வாழ்த்துக்கள்....!.