தோற்றால் வருவதே ஏமாற்றம்-ஆனால்
தோன்ற வேண்டும் அதில்மாற்றம்!
ஏற்றால் வெற்றியின் படியாக-நாம்
எடுத்து வைக்கும அடியாக!
ஆற்றல் வேண்டும் நம்பணியை-வெற்றி
அடைவோம் பரிசாம் நல்லணியை!
மாற்ற மில்லா மனத்திண்மை-என்றும்
மனதில் கொண்டால் தருமுண்மை!
முயலா விட்டால் ஏமாற்றம்-நாம்
முயன்றால் தந்திடும் முன்னேற்றம்!
இயலா தென்றே எண்ணாதீர்-எதையும்
ஏனோ தானெனப் பண்ணாதீர்!
வயலாய் ஆகுதே பாலைநிலம்-முயற்சி
வழியால் வந்ததே அந்தவளம்!
புயலாய் உழைக்க ஏமாற்றம்-நீங்கிப்
போக வந்திடும் முன்னேற்றம்!
எண்ணிச் செயல்படின் ஏமாற்றம்-வாரா
எதுவாய் இருப்பினும், முன்னேற்றம்!
பண்ணுள் இசையிலை ஏமாற்றம்-அதைப்
பாடினால் வருவதும் ஏமாற்றம்!
கண்ணில் விண்வெளி ஏமாற்றம் –நல்
கானல் நீரும் ஏமாற்றம்!
மண்ணில் எவரே ஏமாற்றம் –அடையா
மனிதர் இருந்தால் பறைசாற்றும்!
புலவர் சா இராமாநுசம்
முயலா விட்டால் ஏமாற்றம்-நாம்
ReplyDeleteமுயன்றால் தந்திடும் முன்னேற்றம்!//ஆம் உண்மையே
மிக்க நன்றி!
Deleteகண்ணில் விண்வெளி ஏமாற்றம் என்றாலும் ராக்கெட்டாய் சீறிப் பாய்ந்தால் எந்த உயரமும் அடைவது சாத்தியமே என்று சொன்ன கவிதை அருமை அய்யா !
ReplyDeleteத .ம 2
மிக்க நன்றி!
Deleteநீங்க சமீபத்தில் "நீயா நானா?" என்கிற தலைப்பே அகந்தை பிடிச்சவங்க அடம் பிடிச்சு சண்டை போடுறமாரி மட்டமா இருக்குனு முரளி பதிவில் அழகா சொன்னீங்க! இவ்வளவு தெளிவாக அதை இதுவரை யாரும் சொல்லவில்லை! வாழ்த்துக்கள்.
ReplyDeleteஒரு இலக்கை நோக்கிப் போகும்போது, தோல்வியும் வரலாம் என்று யோசிக்காதவங்களுக்குதானே சார், தோத்தால் ஏமாற்றம் கெடைக்கும்? அதையும் எதிர்பார்த்துப் போனால் நிச்சயம் தோல்வியிலும் ஏமாற்றம் கெடையாதுதான். இல்லையா?
உண்மையான வரிகள் ஐயா...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
மிக்க நன்றி!
Delete//முயலா விட்டால் ஏமாற்றம்-நாம்
ReplyDeleteமுயன்றால் தந்திடும் முன்னேற்றம்!
இயலா தென்றே எண்ணாதீர்-எதையும்
ஏனோ தானெனப் பண்ணாதீர்!//
அருமையான வரிகள்...
மிக்க நன்றி!
Deleteஅருமையான கவிதை வரிகள். என் பதிவில் கவிதை எழுதலாமே என்று அழைக்கிறேன். எதிர்நோக்கி.
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteமுன்னேற்றம் மனதில் கொள்ள நல்ல ஏற்றமாகத் தந்த
ReplyDeleteஇனிய கவிதை!
மிக அருமை ஐயா!
மிக்க நன்றி!
Delete"தோற்றால் வருவதே ஏமாற்றம்-ஆனால்
ReplyDeleteதோன்ற வேண்டும் அதில்மாற்றம்!" என
சான்றாய் வந்தது நல்வழிகாட்டல்!
மிக்க நன்றி!
Deleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_19.html) சென்று பார்க்கவும்... நன்றி...
மிக்க நன்றி!
Delete//தோற்றால் வருவதே ஏமாற்றம்-ஆனால்
ReplyDeleteதோன்ற வேண்டும் அதில்மாற்றம்!
ஏற்றால் வெற்றியின் படியாக-நாம்
எடுத்து வைக்கும அடியாக!//
நம்பிக்கை தந்திடும் கவிதை. ரசித்தேன்.