Monday, December 16, 2013

இறுதி முச்சு உள்ளவரை-நம் இதயம் எண்ணம் எண்ணும்வரை!


தமிழா....!

இறுதி முச்சு உள்ளவரை-நம்
இதயம் எண்ணம் எண்ணும்வரை
உறுதி நீயும் கொள்வாயா-தனி
ஈழம் தானென சொல்வாயா!
குருதிசிந்தக் கணக் கற்றோர்-அங்கே
குழந்தை குட்டி தனைப்பெற்றோர்
இறுதிச் சடங்கும் ஆளின்றி -செய்ய
இறந்தோர் தம்மை மறப்பாயா!

முள்ளி வய்கால் படுகொலையை-நம்
மூச்சும் பேச்சும் உள்ளவரை
சொல்லி ஒன்றாய் நம்மவரை-உடன்
சேரச் செய்தே அறப்போரை
ஒல்லும் வகையெலாம் சொய்வோமா-இந்த
உலகம் உணர உய்வோமா !
தள்ளி நின்ற நம்மவரும்-தம்
தவறை உணர்ந்து வருவாரா!

அடங்கிப் போனோம் நாமென்றே-ஆளும்
ஆணவ ஆட்சியை நாம்வென்றே
முடங்கிப் போக வைப்போமா-இறுதி
மூச்சையும் பணயம் வைப்போமா!
ஒடுங்க மாட்டோம் நாமென்றே-அவர்
உணர எதிர்த்துத் தினம்நின்றே!
நடுங்கச் செய்வதே நம்வேலை-நம்
இறுதிமூச்சு உள்ள வரை!

புலவர் சா இராமாநுசம்

5 comments :

  1. /// நடுங்கச் செய்வதே நம்வேலை-நம்
    இறுதிமூச்சு உள்ள வரை... ///

    வீரமிகு வரிகள் ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ஈழமக்களின் நலனே தன் வாழ்வும் வளமும் என்றே தினமும்
    கவி பாடும் தந்தையைக் கண்டு உள்ளம் பொங்குதே எந்நாளும் .
    மேவும் துயர்கள் மாழும் ஒரு நாள், எந்நாளும் துயரப்படும் தந்தையே
    துயரைத் துறக்க துயரைத் துறக்க அதுவே நன்று ,இப் புவி தனில்
    உம்போல் புலவர்கள் வேண்டும் எமக்கு கவி பாட .

    ReplyDelete
  3. உள்ளத்தைத் தொடும்
    தங்கள் பாவரிகளை
    வரவேற்கிறேன்!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...