தியாகம் தியாகமென -காந்தி
தினமும செய்தார் யாகமென
யோகம் சிலருக் கதனாலே -அதனைச்
சொல்ல வந்தேன் இதனாலே
போகம் கருதி சுகம்தேடி-அவர்
புகுந்தார் அரசியல் தனைநாடி
தாகம் இன்னும் தணியவில்லை-தினம்
தந்திடும் துயருக்கு ஏது எல்லை
பெற்ற விடுதலைப் பறிபோகும்-அதைப்
பேணிக் காக்கும் நெறிகூறும்
கற்றவர் கூட ஏனோதான்-ஏதும்
கவலையற்றே வீணே தான்
மற்றவர் வேலையே பார்க்கின்றார்-கேட்டால்
மனதைமூடி மறைக் கின்றார்
அற்றவர் வாழ்வேப் போராட்டம்-என
ஆனது ஆட்சி தேரோட்டம்
எத்தனை காலம் இப்படியே-ஆள்வோர்
எடுத்து வைத்தால் தப்படியே
அத்தனை வகையும் ஒன்றாக-சேரின்
அழிவும் வருமே நன்றாக
மெத்தனம் வேண்டாம் கட்சிகளே-இனி
மேலும் வேணுமா சாட்சிகளே
புத்தரைப் போல தெளியுங்கள்-நல்லோர்
போற்ற ஆட்சியை அளியுங்கள்!
புலவர் சா இராமாநுசம்
அதிகார போதையில் தள்ளாடும்
ReplyDeleteஅரசியல்வாதிகளுக்குத் தேவையான அறிவுரை
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
மிக்க நன்றி!
Deletetha.ama 1
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
சரியான விழிப்புணர்வுக் கவிதை அருமை வாழ்த்துக்கள் ஐயா
எனது புதிய தளத்தின் ஊடாக கருத்து இடுகிறேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி!
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
த.ம.2 வாக்கு.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி!
Deleteகவிதை அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா...
மிக்க நன்றி!
Deleteபுத்தரைப் போல தெளியுங்கள்-நல்லோர்
ReplyDeleteபோற்ற ஆட்சியை அளியுங்கள்!
ஆம்,ஆட்சியாளர்களே மாறுங்கள்.அய்யா சொல்வதைக் கேளுங்கள்
மிக்க நன்றி!
Deleteசிறப்பான கவிதை..
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஅரசியல்வாதிகளின் செவியை எட்டுமா இவ்வரிகள்? எட்டினால் எட்டாதவையும் எட்டும், கிட்டாதவையும் கிட்டுமன்றோ! அருமையான கவிதை. பாராட்டுகள் ஐயா.
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஆட்சிக் கட்டிலில் ஏறியவுடன் காது அடைத்துக் கொள்கிறதே ,என்ன செய்து இந்த நவீன கும்பகர்ணன்களை எழுப்பலாம் ?
ReplyDelete+1
மிக்க நன்றி!
Deleteஎல்லோருடைய எண்ணங்களை கவிதையாக தந்துவிட்டீர் ஐயா, நன்றி
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஅருமையான போதனை !! அற்றவரே தம் துயரை எந்நாளும் எடுத்துரைக்க மற்றவர் யாவரும் ஏனோ தானோ என்றிராது புத்தரைப் போல் தெளிதல் வேண்டும் என்றே போதித்த நற் போதனை கண்டு தலை வணகுகின்றேன் ஐயா .
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஇன்று கிட்டியது என்று
ReplyDeleteதலைகால் புரியாது
தாண்டவமாடும் அதிகார மாண்புமிகுக்கள்
நெஞ்சம் பாய்ச்சும்
கவிதை...
அருமை பெருந்தகையே...
மிக்க நன்றி!
Deleteஅருமையான கவிதை அய்யா..
ReplyDeleteதெளிய வேண்டியது அவர்கள் அல்ல...
மக்கள் தான்.. தாங்கள் இந்த நாட்டின் மன்னர்கள் என்று உணர்ந்துவிட்டால்... பொறுப்பாக நடந்தால்.. வாக்கை விற்பனை செய்யாவிட்டால்..
மக்களாட்சியில் விழிப்புணர்வும் பொறுப்புணர்வும் அவசியம்...
அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் தேவையான அறிவுரை....
ReplyDeleteகவிதை நன்று ஐயா.
ReplyDelete