Monday, December 2, 2013

வளங்காணக் கடன்பட்டு வருந்த வேண்டாம் வரவுக்கு மேல்செலவுச் செய்தல் வேண்டாம்!



ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
   உரிமைக்கு தீங்குயெனில் பொறுக்க வேண்டாம்!
ஆதாரம் இல்லாமல் பேச  வேண்டாம்
   அவதூறு செய்வாரின் உறவே வேண்டாம்!
யாதானும் வாழும்வழி காண வேண்டாம்
    என்றென்றும் பகைமையே பூண வேண்டாம்!
தீதாகப் பொருள்தேடி சேர்த்தல் வேண்டாம்
    திட்டமிட்டு வாழ்வதை மறக்க வேண்டாம்!


வளங்காணக் கடன்பட்டு வருந்த வேண்டாம்
    வரவுக்கு மேல்செலவுச் செய்தல் வேண்டாம்!
களவான மனங்கொண்டுப் பழக வேண்டாம்
    கருணையின்றி பிறர்நோகப் பேசல் வேண்டாம்!
உளமின்றி வெறுப்போடு உதவல் வேண்டாம்
    உதட்டளவு வார்த்தைகளை உதிர்க்க வேண்டாம்!
அளவின்றி யாரோடும் பழக வேண்டாம்
     ஆசைகளை பல்வகையில் பெருக்க வேண்டாம்!


கோழையெனப் பிறர்சொல்ல நடக்க வேண்டாம்
     குறைகளைய எள்ளவும் தயங்க வேண்டாம்!
ஏழையெனில் இரங்காத மனமே வேண்டாம்
     ஏமாற்றிப் பிழைக்கின்ற பிழப்பே வேண்டாம்!
பேழையுள் பணம்போல உறங்க வேண்டாம்
    பிறருக்கு பயன்படத் தயங்க வேண்டாம்!
தாழையின் பாம்பாக இருக்க வேண்டாம்
     தரமில்லா மனிதர்க்கு இணங்க வேண்டாம்!

                                       புலவர் சா இராமாநுசம்




38 comments:

  1. படிப்பதற்கு மிக மிக அருமையாக இருக்கிறது...பாரட்டுக்கள் ..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  2. வணக்கம்
    ஐயா

    பதிவு அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா....

    புதிய பதிவாக தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப்போட்டி...வந்து பாருங்கள் ஆதரவு தாருங்கள்...
    http://2008rupan.wordpress.com/2013/12/02/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d/

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  3. களவான மனங்கொண்டு பழகுபவர்களை எளிதாக அடையாளம் காணவேண்டும்....



    அருமையான கவிதை ஐயா....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  4. அருமையான கவிதை...
    அழகான வரிகள்...
    வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  5. அருமையான கவிதை ஐயா....

    எனது தளத்திலும் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.html

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  6. வளங்காணக் கடன்பட்டு வருந்த வேண்டாம்///உண்மைதான் அய்யா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  7. அருமையான வரிகள். மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்..

    ReplyDelete
  8. ஆழமான கருத்துடன் கூடிய
    அற்புதமான கவிதை\
    வாசிக்க வாசிக்க நாவும்
    மனமும் இனித்தது
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  9. Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  10. (tha ma 6) வேண்டாம் வேண்டாம் என்று கவிதை எழுதினீர்கள். இனி நாளை எழுதப்போவது 'வேண்டும், வேண்டும்' என்ற கவிதை தானே? (வேறு எந்தக் கவிஞரும் இந்தக் கருத்தைக் கவர்ந்து செல்லாமல் இருந்தால்!)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  11. எத்துனை அருமையான கருத்துக்களை கவியினுள்ள பொதித்து வைத்துள்ளீர்கள்...அருமை ஐயா.. அருமை..!

    ++++++++++++++++++++++++

    வணக்கம்...

    நீங்க செல்போன் வச்சிருக்கீங்களா?

    அப்போ கண்டிப்பா ஆண்ட்ராய்ட் போனாதான் இருக்கும்..

    சரியா...?

    உங்களோட செல்போனை மத்தவங்க அநாவசியமா பயன்படுத்த கூடாதுன்னு நினைக்கிறீங்களா?

    அப்போ தொடர்ந்து படிங்க...

    ஸ்மார்ட் போன்களை பாதுகாக்க புதிய சாப்ட்வேர்..!

    ReplyDelete
  12. வணக்கம்...

    நீங்க செல்போன் வச்சிருக்கீங்களா?

    அப்போ கண்டிப்பா ஆண்ட்ராய்ட் போனாதான் இருக்கும்..

    சரியா...?

    உங்களோட செல்போனை மத்தவங்க அநாவசியமா பயன்படுத்த கூடாதுன்னு நினைக்கிறீங்களா?

    அப்போ தொடர்ந்து படிங்க...

    ஸ்மார்ட் போன்களை பாதுகாக்க புதிய சாப்ட்வேர்..!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  13. அருமையான அறிவுரை!
    அற்புதக் கவிதையாக ஆக்கித்தந்துள்ளீர்கள்.

    உளத்தில் பதிந்து வைக்கவேண்டி பகிர்வு! நன்றி ஐயா!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  14. //வளங்காணக் கடன்பட்டு வருந்த வேண்டாம்//
    உண்மையான வரி, பலர் பின்பற்றுவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  15. நவீன ஆத்திச்சூடி அருமை அய்யா !
    த .ம 8

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  16. அருமையான கவிதை புலவர் ஐயா.

    ReplyDelete
  17. அருமையான எளிமையான வரிகள் நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  18. வாழ்க்கையில் உயர, நாம் செய்யக்கூடாதவற்றை வெகு அழகானக் கவிதையாய்ப் பட்டியலிட்டு அறியத் தந்தமைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  19. அவதூறு செய்வாரின் உறவே வேண்டாம்!

    புதிய ஆத்திசூடியாய் அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  20. "வளங்காணக் கடன்பட்டு வருந்த வேண்டாம்
    வரவுக்கு மேல்செலவுச் செய்தல் வேண்டாம்!
    களவான மனங்கொண்டுப் பழக வேண்டாம்
    கருணையின்றி பிறர்நோகப் பேசல் வேண்டாம்!
    உளமின்றி வெறுப்போடு உதவல் வேண்டாம்
    உதட்டளவு வார்த்தைகளை உதிர்க்க வேண்டாம்!
    அளவின்றி யாரோடும் பழக வேண்டாம்
    ஆசைகளை பல்வகையில் பெருக்க வேண்டாம்!" என்ற
    அடிகளில் அடுக்கிய எல்லாமே
    சிறந்த சிந்திக்க வைக்கும்
    வழிகாட்டல்களே!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  21. // வளங்காணக் கடன்பட்டு வருந்த வேண்டாம்
    வரவுக்கு மேல்செலவுச் செய்தல் வேண்டாம்!//

    நல்ல அறிவுரை...

    ReplyDelete