காணவில்லை
தமிழ்மணமே கண்டால் யாரும் – படும்
கவலைகளை விரிவாக எடுத்துக் கூறும்!
போனதெங்கே
சொல்லிவிட்டுப் போனால் என்ன – இங்கே
புலம்பபலர் செய்ததிலே பலன்தா னென்ன !
ஆனமட்டும்
பலமுறையே முயன்று விட்டோம் –தோல்வி
அடைந்ததன்றி முடிவாக துயரே பட்டோம்!
கானமற்ற
குயிலாகிப் பாடு கின்றோம் –அந்தோ
கண்மூடி
மனக்கண்ணால் தேடு கின்றோம்!
நல்லார்க்கு
என்றுமிது அழகா இல்லை – நம்மை
நம்பினார்கு கொடுப்பதா இந்தத் தொல்லை!
பல்லார்க்கும் ஏமாற்றம்
ஏனோ? மாற்றம் –உண்மை
பலரறிய
உடனடியாய் எடுத்து சாற்றும்!
எல்லார்கும்
காரணத்தை அறியச் செய்வீர் –மீண்டும்
எதிர்பட்டு பழையபடி அன்பைப்
பெய்வீர்!
இல்லார்க்கு கொடுப்பதே
தரும மாகும் – மனம்
இரங்கிவந்து காட்சிதர கவலை போகும்!
புலவர் சா இராமாநுசம்
பதிவர்களின் மனக் குறையை கவிதை ஆக்கிவிட்டீர்கள் அய்யா பாராட்டுக்கள் ....
ReplyDeleteநமது மனம் மகிழ தமிழ்மணம் மீண்டும் மணம் கமழ கூகுள் ஆண்டவர் அருள் புரியட்டும் !
மிக்க நன்றி!
Deleteஉங்களுக்குமா ஐயா? எனக்கு தான் ஏதோ பிரச்சினை என்று உருட்டிக்கொண்டிருந்தேன்..வந்தும் விட்டது...அழகானக் கவிதை ஐயா!
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteவிரைவில் காட்சி தரும் என எதிர்பார்ப்போம் ஐயா
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteதமிழ் மணக்கும் காலம் மீண்டும் வரும். இல்லாவிடினும் தமிழர்கள் ரசிக்க வராமல் போகார். கவலை வேண்டாம் !
ReplyDeleteTyped with Panini Keypad
மிக்க நன்றி!
Deleteதமிழ் மணக்காமல் எங்கே போகும்?
ReplyDeleteகாணாமல் போன திரட்டிப பட்டைக்கான கவிதை அருமை ஐயா. இப்போது வந்து விட்டது
ReplyDeleteமிக்க நன்றி!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅருமை ஐயா.... ஒன்றிரண்டு நாள் காணவில்லை என்றதும் கவிதை படைத்திட்டீர்களே!
ReplyDelete