Monday, November 4, 2013

என் முகநூல் பதிவுகள்






கொண்டாட மனமில்லை -நம்
குலமகளாம் இசைப்பிரியா
துண்டாலே உடல்மூடி -சிங்கள
துரோகிகளும் இழுத்துவர
கண்டேனே! கண்டபின்பா! -மனம்
களித்திடுமா தீபாவளி!
சண்டாளன் ஆட்சியங்கே -குலைந்து
சாயும்நாள் ! தீபாவளி !


அரசாங்கம் போடும் திட்டமெல்லாம் நடைமுறைப் படுத்தும் போது முடிவில் , மணமக்கள் மீது போடப்படும் அட்சதைப் போல ஆகிவிடுகிறது! எப்படியென்றால், விழாவுக்கு வந்தவர்கள் தம் கையில் தரப் பட்ட அட்சதையை இருந்த இடத்திலிருந்தே போடுவதால் அவர்களுக்கு முன்னால் இருப்பவர் தலைமேல் தான் விழுமே தவிர மேடையை அடைவதில்லை! மேடையில் உள்ளவர் போடுவது மட்டுமே விழும்! அதுபோல , அரசு போடும் திட்டங்கள் , பல துறைகள், பல அதிகரிகள் என அவர்தம் கைகளில் சிக்கி பலனோ, பணமோ, சிதைந்து , சுருங்கி
மக்களை அடைகிறது! அதனால் திட்டத்தின் முழுபலன் கிடைப்பதில்லை! -சொன்னவர், நேரு, சொன்ன இடம் , மக்களவை!


ஆலயம் முழுவதும் மிகவும் ஒளிமயமாக இருந்தாலும் உள்ளே சென்று , கருவறையில் ஆண்டவன் முன்னால்
ஏற்றி வைக்கப்பட்டுள்ள குத்து விளக்கின் சுடரைக், காணும் போது தான் நமக்குப் பக்திப் பரவசம் உண்டாகிறது

மனிதப் பிறவியில் எந்தவொரு மனிதனுக்கும் ஒழுக்கம் தான் வாழ்க்கையில் மேலான சிறப்பைத் தருவதாகும் அதனால் தானே வள்ளுவர் பெருமானும் , போனால் திரும்பி
வராத உயிரைவிட ஒழக்கம் தான் விழுப்பம்(சிறப்பு) தருமென்றார்!

அன்று ,! அண்ணா, மக்களவையில் பேசும் போது ,பிரதமர் நேருவைப் பார்த்து , ஐயா !நீங்கள் கட்டி முடிக்கப் பட்ட கோபுரம், நான் கொட்டிக்கிடக்கின்ற செங்கல் ! என்று கூறியது எவ்வளவு பெரிய, நயமான, அரசியல் நாகரீகம்!

ஆனால், இன்று !? இப்படி! காணமுடிகிறதா!!!


                                                                                               புலவர்  சா  இராமாநுசம்

11 comments :

  1. அந்த அரசியல் நாகரீகம் இனிமேல் வருவது சந்தேகம் தான் ஐயா... வாழ்க்கையில் மேலான சிறப்பை உணர்ந்தால் நடக்கலாம்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  2. இன்று உள்ள அரசியல், சமூக, நிலைதனை தெள்ளத் தெளிவாக,
    உள்ளங்கை நெல்லிக்கனி போல எடுத்து இயம்ப இக்கவிதைக்கோர் இணையில்லை.

    அரசு எடுத்து நடத்தும் பல நல்ல திட்டங்கள் மக்களை அடைவதில்லை என்பதற்கோர் மிகச்சிறந்த உதாரணம் வாழ்த்தும் அட்சதை..

    இடைத் தரகர்கள் ஒழிந்தால் தான் சமூக உயர்வு ஏற்படும். இப்பொழுது இருக்கும் அரசியல் கட்டமைப்பில் இது சாத்தியமா என்று தெரியவில்லை.

    சுப்பு தாத்தா.
    www.vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  3. மனம் வேதனையில் வாடுகிறது ஐயா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  4. இசைப்பிரியா மிகவும் வேதனை தரும் சம்பவம் ... நேரு சொன்னது அருமை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  5. இசைப்பிரியா போல் எத்தனை பேரை அழித்து இருக்கிறது சிங்களம்...
    இருந்தும் இன்னும் நமது அரசு அவர்களுக்கு சொம்பு தூக்கிக் கொண்டுதான் இருக்கிறது.
    வேதனை தரும் சம்பவம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  6. இன்றைக்கு நடக்கும் பல விஷயங்கள் மனதை வருத்தும்படியே இருக்கின்றன......

    ReplyDelete
  7. செய்தி தொகுப்பு மிக நன்றாக இருக்கிறது.....பாராட்டுக்கள்...

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...