பலபேர்ப் பதிவே எழுதவில்லை-இந்த
பாழும் மின்வெட்டு! பெருந்தொல்லை!
புலராப் பொழுதே ஆனதுவே-துயர்
பொங்கிட நிலையாய்ப் போனதுவே
தளரா அந்தோ! மின்வெட்டே-நம்
தமிழகம் முற்றும் தொழில்கெட்டே
வளராப் பயிரும் கருகிவிடும்-பெரும்
வறுமையும் பஞ்சமும் பெருகிவிடும்
சிலபேர் பதிவை படித்திடுவேன்-பதில்
செப்பிட இயலா! திடுக்கிடுவேன்
உளபோல் தோன்றும் இல்லாகும்-எங்கும்
உள்ள நிலைமை இதுவாகும்!
செல்வதும் வருவதும் அறியோமே-எடுத்து
செப்பிட ஏதும் இயலாமே
அலைபோல் உள்ளம் அலைகிறதே-என்ன
ஆகுமோ? என்றே குலைகிறதே!
பகலும் இரவும் சரிபாதி-இங்கேப்
பவர்கட் தருவதும் சரிபாதி!
அகலும் நாளும் வந்திடுமா-படும்
அல்லல் நீக்கித் தந்திடுமா?
புகல அரசால் முடியாதே-திட்டம்
போட்டால் அன்றி விடியாதே!
இகலே அரசியல் ஆனதுவே-காணல்
இயல்பாய் நமக்கும் போனதுவே!
ஓட்டு ஒன்றே குறியாக-இங்கே
உள்ள கட்சிகள் நெறியாக
காட்டும் நிலையே காண்கின்றோம்-இதைக்
கண்டே மனமும் நாணுகின்றோம்
போட்டிகள் எதிலும் நாள்தோறும்-சண்டைப்
போடுவர் உள்ள ஊர்தோறும்
வாட்டுது அந்தோ! மின்கட்டே-ஐயா!
வந்திடும் மேலும் மின்வெட்டே!
புலவர் சா இராமாநுசம்
வணக்கம்
ReplyDeleteஐயா
சில வலைப்பூக்களை பார்க்கிற போது ஒவ்வொரு நாளும் பதிவு வரும் ஆனால் நீண்ட நாட்களுக்கு பின்பு பதிவு போடுகிறார்கள் என்றால் இதற்கு காரணம் என்னவென்று இப்போதுதான் புரிந்தது.. கவிதை அருமை வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கு மிக்க நன்றி!
Deleteசிலபேர் பதிவை படித்திடுவேன்-பதில்
ReplyDeleteசெப்பிட இயலா! திடுக்கிடுவேன்
வருகைக்கு மிக்க நன்றி!
DeleteTamilmanam +1
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி!
Deleteஇந்த பிரச்சனை எப்போதும் தீரும் என்று தெரியவில்லை....
ReplyDeleteஎனக்கு சாதகமான நேரத்தை விழுங்கிவிட்டது மின்தடை...
வருகைக்கு மிக்க நன்றி!
Deleteதங்களுக்கு மின்தடை இல்லை என்று நினைக்கிறேன்..
ReplyDeleteஇருந்தும் எங்களுக்காக கவலைப்பட்டு ஒரு அக்கறை பதிவு நன்றி ஐயா!
நாளுக்கு நாள் மின்வெட்டு அதிகம் தான் ஆகிக் கொண்டிருக்கிறது ஐயா... அதுவும் எந்த நேரம் போகும் என்பதும் தெரியாது...
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி!
Deleteaamaangayaaa.....
ReplyDeleteமினி சைஸ் பதிவு பாணியிலிருந்து நான் மாற நினைக்கையில் இப்படி ஒரு சோதனை !
ReplyDeleteஎனக்கும் ஓய்வு நேரம் என்பதே ஒழிந்து விட்டதே அய்யா !
த .ம +1
வருகைக்கு மிக்க நன்றி!
Deleteஉண்மை ஐயா...
ReplyDeleteஇருளில் தமிழகம் மட்டுமல்ல... பதிவுலகமும்தான்...
வருகைக்கு மிக்க நன்றி!
Delete// பலபேர்ப் பதிவே எழுதவில்லை-இந்த
ReplyDeleteபாழும் மின்வெட்டு! பெருந்தொல்லை! //
// சிலபேர் பதிவை படித்திடுவேன்-பதில்
செப்பிட இயலா! திடுக்கிடுவேன் //
நீங்கள் ஒரு புலவர் என்பதால் உள்ளத்து உணர்ச்சியை கவிதை வரிகளாகத் தந்து விட்டீர்கள். இங்கு எனது நிலைமையும் அவ்வாறேதான் அய்யா! பதிவு எழுத இயலாவிட்டாலும். எழுதிய நண்பர்களின் பதிவைப் படித்திடவும், கருத்துரை தந்திடவும் கம்ப்யூட்டர் இயக்க மின்சாரம் இல்லை. இன்வெர்ட்டர் பாரம் தாங்காமல் இழுக்கிறது. யாரை என்ன சொல்வது?
ஆதங்கக் கவிதை அற்புதமாய் இருக்குதையா!
ReplyDeleteஅல்லல் தீருவதுதான் எப்போ?....
என் பணிவான வணக்கமுடன் வாழ்த்துக்களும் ஐயா!
..வருகைக்கு மிக்க நன்றி!
Deleteமனதில் விழுந்த பெரும் காயமாய் இந்த மின் வெட்டுத் தரும் துயர்
ReplyDeleteஎன்று தான் தணியுமோ !! சிறப்பான படைப்பு .கவலையை விடுங்கள்
ஐயா விரைவில் நல்ல காலம் தோன்றட்டும் .
வருகைக்கு மிக்க நன்றி!
Deleteஇந்த மின்வெட்டால் பெருந்தொல்லை தான்....:(((
ReplyDeleteஎன்று இந்த நிலை மாறுமோ....
இந்த மின் வெட்டுக்கு ஒரு சாவு வராதா ? உங்கள் ஆதங்கம் புரிகிறது அய்யா....!
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி!
Deleteமின்வெட்டு நமக்கெல்லாம் வேட்டு வைக்கிறது! என்றுதான் தீருமோ இந்த தொல்லை! அருமையாக கவிதையில் பவர்கட்டை விவரித்தது அழகு ஐயா! நன்றி!
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி!
Deleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...
வருகைக்கு மிக்க நன்றி!
Deleteமின்வெட்டினால் எத்துணை பிரச்சினைகள்?அருமை
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி!
Deleteஉண்மைதான் ஐயா. தினந்தோறும் வரும் பதிவுகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது
ReplyDeleteமின்வெட்டால் தொல்லை....
ReplyDeleteதீர நிச்சயம் வழிகள் வேண்டும்.
செய்யத்தான் எந்த அரசுக்கும் மனமில்லை..
த.ம. 11
சென்னைக்கும் டிசம்பரில் இருந்து இரண்டு மணிநேர மின் வெட்டு உண்டு.
ReplyDeleteநீண்ட கால திட்டங்களே பயன் தரும். ஆதங்கம்! கவி பாடவும் கட்டுரை எழுதவும்தான் நம்மால் முடியும்
வருகைக்கு மிக்க நன்றி!
Deleteமின்வெட்டுக் காரணத்தால் தான் உடனே தங்கள் தளத்துக்கு வரமுடியாமல் போயிற்று. (வரவர, உங்கள் கவிதையில் இளமை துள்ளுவதை யாரும் சொல்லவில்லையா? என்ன ரகசியம் அய்யா?)
ReplyDelete"பலபேர்ப் பதிவே எழுதவில்லை-இந்த
ReplyDeleteபாழும் மின்வெட்டு! பெருந்தொல்லை!" என்று
கேளும் உண்மை என்று கொட்டிவிட்டீர்
நாளும் நம்மவர் நிலையைக் கடவுளறியாரோ!