Saturday, November 23, 2013

என் முகநூல் பதிவுகள்-ஆறு





மரங்களானவை வெட்டும் வரையிலும். தம்மை வெட்டுவாருக்கும் சேர்த்தே நிழல் தந்து காக்கும்! அதுபோல,
அறிவுடைய சான்றோர், தாம் சாகும்வரை பிறர் தமக்கு தீங்கு செய்தாலும் அவர்களுக்கும் , வாழும்வரை முடிந்த எல்லா வகையிலும் நன்மையே செய்வர்!

கல்லால் ஆன தூண் அதிக பாரமானால் உடைந்து விழுமே தவிர வளைந்து கொடுக்காது! அது போல சான்றோர்கள் மானக்கேடு வருமிடத்து தம் உயிரை விடுவாரே
தவிர யாருக்கும் (பகைவர்) பணிய மாட்டார்கள்!!

ஏற்றி வைத்த குத்து விளக்கு அறையை ஒளிமயமாக ஆக்கினாலும் , அக் குத்து விளக்கின் கீழே வட்டமாக நிழல் படர்ந்து சற்று இருள் பரவி இருப்பதை பார்க்கிறோம் அதுபோல சில மனிதர்களின் வாழ்வு வெளிப் பார்வைக்கு இன்ப மயமாகத் தெரிந்தாலும் உள்ளுக்குள் ஏதோ ஒருவகை
சோகம் இருக்கவே செய்யும்

இல்லத்தை ஆளுகின்ற மனைவி நற்குணம் மிக்கவளாக இருப்பின் ஒருவன் வாழ்க்கையில் இல்லாது எதுவுமில்லை! அவள் இறந்து போனாலோ அல்லது கடும் சொற்களும், தீய குணங்களும் உள்ளவளாகவோ இருப்பின் அவ்வீடு , புலி தங்கும் குகையாகவோ , புதராகவோ மாறிவிடும்

வாழ்கையிலே நாம் ஒருவருக்கு உதவி செய்யறோம்! அவங்க நமக்கு உதவி செய்யறாறங்க! அது கொடுத்து வாங்கற கைமாற்று மாதிரி! ஆனா நாம , பிறருக்கு , ஏதும் செய்யாத, செய்யமுடியாத நிலையில் , பிறர் நமக்கு உதவி செய்தால் அது செய்யாமல் செய்த உதவி ஆகும் அதற்கு ஈடாக எதையும் சொல்வது அரிது!

எந்த செயலை செய்வதாக இருந்தாலும் தொடங்கு முன் அதைப் பற்றித் தெளிவாக ஆய்வு செய்தே தொடங்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் தொடங்கிய பின் பாதியிலே அதனை ஆய்வு செய்வது இழிவைத்தான் தரும் பலன் விளையாது

                          புலவர்  சா  இராமாநுசம்

20 comments:

  1. மனைவியைப் பற்றிய கருத்து நூறு சதம் உண்மையானது. அதிலும் ஆணுக்கு வயது ஏறஏறத்தான் மனைவியின் அருமை புரியவருகிறது. அவள் மறைந்துவிட்டாலோ அது அவன் வாழ்க்கையில் வெறுமையைக் கொண்டுவந்துவிடுகிறது. மனைவி என்பவள் உடலின்பத்திற்காக மட்டும் படைக்கப்பட்டவள் அல்லள். கணவனுக்கு உயிர்கொடுப்பவளே அவள் தான். அவள் இல்லையேல் அவன் வெறும் சதைக்கூடு தான். இதை உணர்ந்தாவது ஆண்கள் தத்தம் மனைவியரை அன்போடு பராமரிப்போமாக!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  2. வணக்கம்
    ஐயா
    வாழ்கையிலே நாம் ஒருவருக்கு உதவி செய்யறோம்! அவங்க நமக்கு உதவி செய்யறாறங்க! அது கொடுத்து வாங்கற கைமாற்று மாதிரி

    பிறருக்கு உதவி செய்யும் விதம் பற்றி கூறிய விதம் நன்று... பதிவு அருமை வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  3. நல்ல கருத்துக்களை தேர்ந்தெடுத்து வெளியிட்டமைக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  4. ஆறும்.. அழகு...

    ரசித்தேன் ஐயா...!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  5. Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  6. அனைத்தும் நல்ல கருத்துகள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி

      Delete
  7. கல்தூண் வளைந்து கொடுக்காது என்றீர்களே
    அருமை ஐயா.
    சீரிய கருத்துக்கள் ஐயா. நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி

      Delete
  8. அழகான கருத்துக்களை தொகுத்தளித்தமைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி

      Delete
  9. சிறப்பான நற் கருத்துப் பகிர்வுகளுக்கு மிக்க நன்றி ஐயா !

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி

      Delete
  10. மரங்களானவை வெட்டும் வரையிலும் மட்டுமல்ல வெட்டுப்பட்டப் பிறகும் பலவிதங்களில் உதவிக் கொண்டுதான் இருக்கின்றன,

    ReplyDelete
  11. சிறப்பான கருத்துகள் புலவர் ஐயா....

    ReplyDelete