Friday, November 22, 2013

போய்வந்த அடிச்சுவடுக் காய வில்லை – பிடித்து போடுதுவோ மீனவனை ஓய வில்லை!





போய்வந்த  அடிச்சுவடுக்  காய வில்லை – பிடித்து
     போடுதுவோ  மீனவனை  ஓய வில்லை!
நாய்வந்து எச்சிலைக்கு  அலைதல் போல – வெறி
      நாயாக சிங்ளவன்  வழக்கம் போல!
பேய்வந்து பிடிப்பதாக  நேற்றும் வந்தான்- பலரை
     பிடித்துப்போய் சிறைதானே  வாங்கித்  தந்தான்!
வாய்நொந்து போகும்வரை எடுத்துச்  சொன்னோம்-ஆனால்
     வடநாடு கேட்டதா பலன்தான்  என்னாம்!

ஒட்டுமொத்த  தமிழ்நாடு  ஒன்றாய் இங்கே –எடுத்து
     உரைத்தாலும் புறந்தள்ளி சென்றாய் அங்கே!
கட்டிவைத்த பழஞ்சோறே ஊசிப் போச்சே –இந்திய
     கண்ணியமே காற்றினிலே  பறக்க லாச்சே!
எட்டியெனத் தமிழ்நாட்டை எண்ணி விட்டாய் –இனி
     எதிர்நாளில்  கைதன்னை கழுவ ! கெட்டாய்!
பட்டியிலே அடைபட்ட மாடா ! அல்ல – மக்கள்
     பாடம்தான் புகட்டார? நாளும் செல்ல!

                              புலவர்  சா  இராமாநுசம்


9 comments :

  1. இந்தக் கொடுமை என்று தீருமோ ஐயா...

    ReplyDelete
  2. பாடம் புகட்டும் நாள் நெருங்கிட வேண்டும் ஐயா!

    மனம் நெருடும் கவிதை...

    என் பணிவான வணக்கமுடன் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  3. மிக்க நன்றி!

    ReplyDelete
  4. தொடரும் கொடுமைகளுக்கொரு தீர்வில்லை
    தீர்ப்பதற்கோ இயலுவோருக்கு மனதில்லை

    ReplyDelete
  5. கவிதை அருமை அய்யா...

    தொடரும் கொடுமை தீரப்போவதில்லை...
    இங்கு அதிகாரத்தில் இருப்பவர்களும் எதுவும் செய்யப்போவதில்லை...

    ReplyDelete
  6. கொடுமைகளுக்கு எல்லையில்லாது போகிறது.... என்று தீரும் இத்துயர்!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...