ஆடுகின்றார்!
ஆடுகின்றார்! நாடகம் –ஈழ
ஆதரவுப்
பேராலே நாடகம்
போடுகின்றார்
போடுகின்றார்! நாடகம் –ஈழப்
போராளிப் பேராலே நாடகம்
தேடுகின்றார்
தேடுகின்றார்! ஓட்டே! –வரும்
தேர்தலிலே
வெற்றிபெறக் கேட்டே
கேடுதரும் அரசியலே! போபோ!-தட்டிக்
கேட்பவர்க்கு வைப்பதென்ன ஆப்போ
ஒருவருக்கும் உணர்வில்லை ! இங்கே!- இதில்
உள்நோக்கம் இருப்பதாலே எங்கே?
வருவதில்லை
ஒருநாளும் வெற்றி – வெறும்
வாய்வார்த்தை தந்திடுமா பெற்றி
உருவமின்றி
நிழல்தேடும் தன்மை –இன்று
உள்ளநிலை! உணர்வீராம்! உண்மை!
பெருமையில்லை
கட்சிகளே இன்றே –எடுத்துப்
பேசுவதே செயலாதல் என்றே!?
புலவர் சா இராமாநுசம்
இந்த நாடகம் இவர்கள் அரசியல் நடத்த மக்களை ஏமாற்ற மட்டுமே...
ReplyDeleteஉண்மையான உணர்வாளர்கள் வெளியில் தெரியாமல் இருக்கிறார்கள்...
இந்த நாடகங்கள் முடியும்காலம் விரைவில் வரும்
மிக்க நன்றி!
Deleteஉண்மைதான் ஐயா.
ReplyDeleteஇன்றைய ஈழ நிலமை அரசியலில் நல்லதொரு ஊட்டச்சத்து...
மனக்குமுறலைக் கவிதையில் கொட்டியுள்ளீர்கள்.
அருமை ஐயா!
மிக்க நன்றி!
Deleteஅரசியல் வாதிகள் தங்கள் பொய்யான பிரசாரங்களால் மக்களுக்கு
ReplyDeleteவைப்பது ஆப்பே தான் மிகவும் சரியான கருத்தை முன் வைத்தீர்கள்
ஐயா .ஓட்டளிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் என்றே பறை சாற்றி நிற்கும் சிறப்பான பகிர்வுக்கு என் நன்றி கலந்த வாழ்த்துக்கள் ஐயா .
மிக்க நன்றி!
Deleteநல்ல காலம் வரும் ஐயா.... கணினி கோளாறு காரணமாக இணையம் வர முடியவில்லை... (நண்பரின் கணினி உதவியால் இந்தக் கருத்துரை)
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஎன்ன தான் எவர் தான்
ReplyDeleteநாடகம் ஆடினாலும்
உண்மை
ஒரு போதும் அழிவதில்லை!
தமிழர் அடையாளம்
அழியாமல் பேண
உணர்வுள்ளவர்கள் தான்
ஒன்றிணைய வேண்டுமே!
கவிதை அருமை ஐயா.
ReplyDeleteஅரசியல் நாடகம்.....
ReplyDeleteஎன்னத்த சொல்ல!