Thursday, November 14, 2013

குழந்தைகள் தின பாடலும், என் அன்புப் பேரனும்








இளையமகள் பெற்றெடுத்த  பேரன் – கணினி
    இணையத்தை  இயக்குவதில்  சூரன்
வலைதனிலே எனக்குதவி  வருவான் –தமிழ்
    வார்தைகளை திருத்திகூட  தருவான்

அதிகாலை எழுவதுதான் தொல்லை! -ஆனால்
    அதன்பிறகு  தயக்கமது  இல்லை
புதுமாலை  போல்பொலிவு கொண்டே –பள்ளி
    போய்விட்டு திரும்புவதும் உண்டே

படியென்று  சொல்லுவது  வீணே! –அவன்
    படித்திடுவான் பாடங்களைத்  தானே
முடியென்று சொல்லுமுன் முடிப்பான்! –செயலை
    முடித்துவிட்டு  பின்பேதான் படுப்பான்

கண்ணெனவே காக்கின்றாள்! மகளே  -அந்த
    காரணத்தை நானெடுத்தே புகல
ஒண்ணெனவே பெற்றதாலே அருமை –அவன்
    ஊர்மெச்ச படிப்பதாலே  பெருமை
      

உண்ணுவதில் மட்டும்தான் தொல்லை –அதை
    உணரும்நாள் வந்திடிமா  ஒல்லை!
மண்டிவிடும் மகிழ்வாலே மேலும் –இதை
    மறவாது  நடப்பானா நாளும்

தப்பென்றால் தலைகுனிந்து  நிற்பான் -செய்த
    தப்புக்கு மன்னிப்பு  கேட்பான்
முப்பாலய் அவன்வாழ  வேண்டும் –தம்
    முன்னோரின் வழிபற்றி  யாண்டும்!

                    புலவர்  சா  இராமாநுசம்
   

18 comments:

  1. வணக்கம்
    ஐயா

    சிறுவர் தினத்தில் உங்கள் பேரனுக்கு வடித்த அழகிய சிறுவர் பாடல் அருமை வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. சிறுவர் தின சிறப்புப்பதிவாக
    தங்கள் பேரன் சிறப்புக் குறித்து
    பதிவிட்டது மனம் கவர்ந்தது
    நாளைய நேருக்கள் இவர்கள்தானே
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  3. மிக்க நன்றி!

    ReplyDelete
  4. உங்களின் கவிதைபோல்
    உங்களின் பேரனும் அவனின் செயல்களும்
    எங்களைக் கொள்ளைக்கொள்கின்றன.

    உங்களின் பேரன் நீடூடி வாழ உங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன் புலவர் ஐயா.

    ReplyDelete
  5. புத்திசாலி பேரனுக்கு அன்பு தாத்தாவின் அற்புதமான பா! இன்னும் பல சாதனைகள் செய்ய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. பேரனுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்! உங்கள் பேரனுக்கும் எனது அன்பு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. பேரனின் நற் பண்புதனைப் புகழ்ந்து பாடிய கவிதை
    மனத்தைக் கொள்ளையடித்தது .இவன் போல்
    ஒருவனைப் பெற்றெடுக்கவே நாம் தவமாய் தவமிருக்க
    வேண்டும் .தங்கள் பேரனுக்கும் உலகில் வாழும் அனைத்துக்
    குழந்தைச் செல்வங்களுக்கும் தங்களோடு சேர்ந்திங்கே வாழ்த்துச் சொல்லி மகிழ்வதில் பெருமை கொள்கின்றேன் ஐயா .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  9. கவிதை அருமை...
    தங்கள் பேரனுக்கும் வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
  10. தங்கள் பெயரனுக்கும், அவருக்காக அழகிய கவிதை படைத்த தங்களுக்கும் வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  11. குழந்தைகளுக்கு ஏற்ற முன்மாதிரி எண்ணங்கள்
    வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete

  12. // இளையமகள் பெற்றெடுத்த பேரன் – கணினி
    இணையத்தை இயக்குவதில் சூரன்
    வலைதனிலே எனக்குதவி வருவான் –தமிழ்
    வார்தைகளை திருத்திகூட தருவான் //

    புலவர் அய்யாவின் பேரன் அல்லவா? அதுதான் தமிழிலும் ஆர்வமாக இருக்கிறான். உங்கள் பேரனுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. // படியென்று சொல்லுவது வீணே! –அவன்
    படித்திடுவான் பாடங்களைத் தானே//

    நல்ல விஷயம்.... நல்லதோர் படிப்பு படித்து வாழ்க்கையில் எல்லாவித முன்னேற்றமும் அடைய உங்கள் பேரனுக்கு வாழ்த்துகள்....

    ReplyDelete