Saturday, November 2, 2013

விழிகளில் நீர்வடிய கண்டே னின்றே –சிங்க வெறியர்களே வன்புணர்ந்தே கொன்றா ரென்றே





விழிகளில் நீர்வடிய கண்டே னின்றே –சிங்க
    வெறியர்களே வன்புணர்ந்தே கொன்றா ரென்றே
பழிபாவம் அஞ்சாத  பாவி மக்கள் –இசைப்
    பிரியாவை சிதைத்திட்ட வெறிமிகு  குக்கல்
அழியாத வடுவன்றே உலக  ஏட்டில் – இதை
    அறிந்துமே  போவதோ!? அவனது  நாட்டில்
இழிவன்றோ இந்தியா எண்ணிப்  பாராய் –தமிழன்
    இனிமேலும் தாங்கிடான் உண்ணி ஒராய்!

சண்டியிவன் என்றெண்ணி இருக்க வேண்டாம்-நாளும்
    சண்டியவன் மிரண்டிடவே  காடாம் ஈண்டாம்
நொண்டியல மூலையில் முடங்கிப் போக – தமிழன்
     நொந்துநொந்து  நடைப்பிணமாய்  நாளும் ஆக
கண்டுமனம் கொதித்தாலே எதுதான்  மிஞ்சும் – இதிலே
    காமன்வெல்த்து மாநாடா உறங்கும்  மஞ்சம்!?
உண்டுயிங்கே தமிழ்நாடு ! உணர வைப்பார் –அன்றே
    உணர்ந்திடுவாய் ஒற்றுமைக்கே !? ஒ(வே)ட்டு வைப்பார்

                         புலவர்  சா இராமாநுசம்

19 comments:

  1. அரக்கர்கள் நாடு என்று இலக்கியத்தில் படிக்கும்போது நம்பவில்லை நான்...

    அதை இந்த நூற்றாண்டில் நிறுபித்துவிட்டான் சிங்களன்....

    அவர்கள் மனதில் கொஞ்சம் கூட ஈவு ஈரக்கம் இல்லையா...

    தொலைக்காட்சியில் அந்த காட்சியை பார்க்கும்போது நெஞ்சம் பதைத்தது....

    உலக நாடுகள் இன்னும் வேடிக்கை பார்ப்பது மிகவும் வேதனை..
    எங்கே போயிற்று ஐநா சபை....

    ReplyDelete
  2. ஐயா! ஜீரணிக்கச் சக்தியில்லை..

    எம் வாழ்வு அங்கே இப்படி எத்தனை எத்தனை இசைப்பிரியாக்களாக...

    என்று விடியும்.. ஐயா???

    ReplyDelete
  3. அவர்கள் மனிதர்களே இல்லை...

    ReplyDelete
  4. கொடுமை ஐயா அவர்களை தட்டிக் கேட்க முடியவில்லையே!

    ReplyDelete
  5. தமிழகம் தவிர்த்து ஏனைய மாநில மீனவர்களை இந்திய மீனவர்கள்
    என்று சொல்லும் அரசு.. நம்மை மட்டும் தமிழக மீனவர்கள் என பிரித்துப்
    பார்க்கும் இந்த அரசு.. நமக்கு எந்த விதத்தில் ஒத்தாசை செய்துவிடப் போகிறார்கள்..
    நெஞ்சம் கொதிக்கிறது பெருந்தகையே...
    வெஞ்சினம் மேலோங்குகிறது...
    புரியாதது போல நடிப்பவர்களை புரிந்திட வைத்தல் இயலுமோ
    அப்படித்தான் இந்த அரசும்..
    நச்சுனு சொல்லியிருகீங்க பெருந்தகையே..

    ReplyDelete
  6. இசை பிரியாவின் ஆன்மா சாந்தியடையட்டும் அதே வேளையில் இருப்பாய் தமிழா நெருப்பாய்....

    ReplyDelete
  7. மனித தோல் போர்த்திய மிருகங்கள்... :(

    ReplyDelete
  8. மிக்க நன்றி!

    ReplyDelete

  9. உங்கள் கவித் திறமை பாராட்டுக்குரியது. ஆனால் செய்திகளை சில சமயங்களி உரைநடை வடிவத்தில் உங்கள் உணர்ச்சிகளை வடித்தால் எங்களை போல உள்ளவர்கள் படித்து கருத்திட உதவியாக இருக்குமே

    ReplyDelete
  10. ஆம்.மனது வலிக்கிறது.அய்யா

    ReplyDelete