Wednesday, October 30, 2013

என் ஐரோப்பிய சுற்றுப் பயணம்- பகுதி பதினாறு-ஈங்கிள்பர்க் -




                 ஈங்கிள்பர்க் (11-8-2013)

            வழக்கம்போல்  காலை  உணவை  முடித்துக் கொண்டு
புறப்பட்டோம்  அன்று நாங்கள் கண்ட இடம்  சுவிட்சர்லாந்தின்       அழகிய மலையில்  உயர்ந்த இடத்தில் உள்ள ஜங்க்ஃபிரோக் மற்றும்
இண்டர் லேகன் ஆகியன!

              இங்கே குறிப்பிடத்  தக்கது ஜங்க்ஃபிரோக்கில் அமைந்துள்ள
இரயில் நிலையமானது ஐரோப்பாவின் மிக  உயர்ந்த, கடல் மட்டத்திலிருந்து 13333 அடி  உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது

               நாங்கள்  முதலில் அங்கு செல்ல லாட்டர்பிரன்னன் என்னும் இடத்தை அடைந்து மலை இரயில் மூலம் பயணமானோம்  அதுவே இரண்டு வகையில் அமைத்திருக்கிறார்கள்  சற்று சரிவான இடத்திற் ஏற்ப ஒன்றும் சற்று செங்குத்தாக செல்ல மற்றொன்றும்  என. ஆகவே இடையில் நாங்கள் இறங்கி வண்டி மாறி ஏறி உச்சியில் உள்ள நிலையத்தை அடைந்தோம்

                 வழியில் நாங்கள் கண்ட காட்சிகளையும் மலை உச்சியில் கண்ட காட்சிகளையும்  நீங்களும்  கண்டு  களிக்க இப்பதிவிலும்  அடுத்த பதிவிலும்  வெளியிடுகிறேன்  

                    புலவர்  சா இராமாநுசம் 






















     

21 comments:

  1. பதிமூன்றாயிரம் அடி உயரத்தில் ரயில் நிலையமா? அதற்குச் செல்லும் வழியும் வியப்பைத் தருகிறது. அழகான இயற்கை கொஞ்சும் காட்சிகள். கண்ணாடி சன்னல் வழியே எடுத்திருந்தாலும் நேரிலே பார்ப்பதைப் போன்றே காட்சிகள் உள்ளன. பகிர்வுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  2. சுவிட்சர்லாந் என்றாலே இயற்கை கொஞ்சும் அழகு நாடு!

    இயற்கைக் காட்சிகளுக்குப் பஞ்சமே இல்லை!

    படங்களும் அருமை! தொடருங்கள் ஐயா!

    த ம.1

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா

    பதிவு அருமை படங்களும் அருமை தொடருங்கள் வாழ்த்துக்கள்..ஐயா

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. ரசிக்க வைக்கும் இடங்கள் ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. பூலோக சொர்க்கம் என்று அழைக்கப்படும் எமது சுவிசர்லாந் நாட்டிற்கும் வருகை தந்த இப் பயணமானது இனிமையான பல நினைவுகளையும் தங்கள் உள்ளத்தில் நிறைத்திருப்பது மனதிற்கு மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது ஐயா .படங்களும் பகிர்வும் அருமை ! மேலும் தொடரட்டும் காண ஆவலோடு
    இருக்கின்றோம் .

    ReplyDelete
  7. படங்களும் பயணக்கட்டுரையும் சிறப்பாக உள்ளன. பாராட்டுக்கள் ஐயா/

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள் அய்யா...

    ReplyDelete
  9. படங்களே பேசுகின்றனவே ஐயா!

    ReplyDelete
  10. கண்கொள்ளாக் காட்சி. உங்களுடன் நான்களுன் பயனிப்பதாக் உணர்கிறோம் ஐயா!

    ReplyDelete