Wednesday, October 23, 2013

முகநூல் பதிவுகள்





  நாலு வழிப் பாதை நடுவுல ஒரு கைகாட்டி மரம் நிற்கும். அது நான்கு திசையிலும் உள்ள ஊர்களுக்கும் போகும்
பாதையைத்தான் காட்டுமே தவிர அது நம்மோடு வராது
நாம் தான் நம்முடைய இடத்திற்கு போக வேண்டும் அது போலத்தான் நம் வாழ்கையிலும் பெரியோர்கள் வழிகாட்டியாகத்தான் இருப்பார்கள்! நாம்தான் எச்செயலையும் முயன்று முடிக்க வேண்டும்!

கல்லை மடியில் கட்டிக் கொண்டு கிணற்றில் வீழ்ந்தான் ஒருவன்! அவன் சாகத் துணிந்தவன்! ஆனால் கல் தடுக்கி
கிணற்றில் வீழ்ந்தான் ஒருவன்! இரண்டும் ஒன்றா!? இல்லையே! வீழ்ந்தான் என்ற செயல் வேண்டுமானால்
ஒன்றாக இருக்கலாம்! இப்படித் தான் வாழ்வில் நாம் மேற்
கொள்ளும் சில செயலும் அமைந்து விடுகின்றன!

கண்ணுக்குத் தெரியாத, தூரத்தில் புகை வந்தால் , அங்கே ஏதோ நெருப்பு , என்று சொன்னால்! நீ போய் பார்த்தாயா என்றா கேட்க முடியும்? ஒன்றை கொண்டு இன்னொன்றை
யூகிப்பது தானே புத்திசாலித்தனம்! ஏனோ, தெரியவில்லை
ஊழல் அரசியல் வாதிகளிடம் சிக்கி, இதை மறந்து ஓட்டுப் போடுகிறோம்!

அழகு  என்பது  எதில்  இருக்கிறது ! பார்க்கும் பொருளிலா  ! பார்க்கும்    மனதிலா !  கடைக்குப் போகிறோம் பல வண்ண  துணிகளைப் பார்க்கிறோம்
 சிலவற்றை ஒதுக்கி  விட்டு நம்  மனதிற்கு, இது அழகுயென பிடித்ததை எடுக்கிறோம்!  பக்கத்தில் உள்ள  ஒருவன்  நாம் ஒதுக்கித் தள்ளியதை தனக்கென  எடுக்கிறான் ! அவனுக்கு , அது பிடித்திருக்கிறது! இப்பொழுது
சொல்லுங்கள் ! அழகு , எங்கே இருக்கிறது !!?


                           புலவர் சா  இராமாநுசம்

26 comments:

  1. // கண்ணுக்குத் தெரியாத, தூரத்தில் புகை வந்தால் , அங்கே ஏதோ நெருப்பு , என்று சொன்னால்! நீ போய் பார்த்தாயா என்றா கேட்க முடியும்? ஒன்றை கொண்டு இன்னொன்றை யூகிப்பது தானே புத்திசாலித்தனம்! ஏனோ, தெரியவில்லை ஊழல் அரசியல் வாதிகளிடம் சிக்கி, இதை மறந்து ஓட்டுப் போடுகிறோம் //

    வாழ்வியல் கருத்து ஒன்றினை அழகாகச் சொன்னீர்கள். ஆனாலும் தேர்தலில் எரிகின்ற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்று கேட்கும்படியாக அல்லவா இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் இளங்கோ! நோய் மட்டுமே தெரிகிறது மருந்து.....!
      காண இயலவில்லையே! நன்றி!

      Delete
  2. //அழகு என்பது எதில் இருக்கிறது ! பார்க்கும் பொருளிலா ! பார்க்கும் மனதிலா ! கடைக்குப் போகிறோம் பல வண்ண துணிகளைப் பார்க்கிறோம்
    சிலவற்றை ஒதுக்கி விட்டு நம் மனதிற்கு, இது அழகுயென பிடித்ததை எடுக்கிறோம்! பக்கத்தில் உள்ள ஒருவன் நாம் ஒதுக்கித் தள்ளியதை தனக்கென எடுக்கிறான் ! அவனுக்கு , அது பிடித்திருக்கிறது! இப்பொழுது
    சொல்லுங்கள் ! அழகு , எங்கே இருக்கிறது !!?//

    நிச்சயம் நம் மனதில் தான்....

    சிறப்பான கருத்துக்களை விளாக்கியுள்ளீர்கள் ஐயா...பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. சிந்தனைத் துளிகள் அருமை
    மிகவும் ரசித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அழகு நாம் செய்யும் நல்ல செயல்களிலும், நாம் பேசும் நல்ல வார்த்தைகளிலும், நாம் செய்யும் நற்செயல்களிலும்தான் இருக்கு ஐயா!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்தும் ஏற்றதே! அதையும் மனதுதானே முடிவு
      செய்கிறது! நன்றி

      Delete
  5. மிக்க நன்றி!

    ReplyDelete
  6. அழகு நாம் பார்க்கும் க்கன்னில்தான் இருக்கிறது. என்றே நினைக்கிறேன்..

    ReplyDelete
  7. அழகு நிச்சயம் மானதில் தான், ஆனால் இந்தக் கருத்தை பலரும் ஏற்றுக் கொள்வதில்லை.

    ReplyDelete
  8. அனைத்தும் அருமை ஐயா... எல்லாம் நம் (அவரவர்) மனதைப் பொறுத்து மாறுபடும்...

    ReplyDelete
  9. அத்தனையும் சிறப்பு.... ரசித்தேன்

    ReplyDelete
  10. சிறப்பான சிந்தனைகள்.

    ReplyDelete
  11. அருமை... ரசித்தேன் ஐயா...

    ReplyDelete
  12. அழகு , எங்கே இருக்கிறது !!?

    அவரவர் பார்வையிலும் ரஸனையிலும் தான் இருக்கிறது.

    ReplyDelete
  13. அருமையான சிந்தனைகள் அய்யா....!

    ReplyDelete
  14. நல்ல சிந்தனை...
    அழகு என்பது எமது மனம்தான்...

    ReplyDelete