Tuesday, October 22, 2013

என் ஐரோப்பிய சுற்றுப் பயணம்- பகுதி பதினைந்து-ஈங்கிள்பர்க்



                   ஈங்கிள்பர்க் (10-8-2013)     

 கூக்கு கடிகாரத் கண்டுவிட்ட  தொழிற் சாலையை  விட்டு  எங்கள்
பயணம்  சுவிட்சர்லந்தின்   மிகப் பெரிய நகரமாகவும் அதன்
பொருளாதார மைய மாகவும்  திகழும் ஜீரிச்  என்னும்  நகரை
நோக்கி  தொடங்கியது

        வழியில்  நாங்கள் கண்ட இயற்கைக் காட்சிகள், அழகிய ஏரிகள்
ஐரோப்பாவின்  மிகப்  பெரிய நீர்வீழ்ச்சி ஆகிய வற்றை கண்டு இரசித்தோம்
ஜீரிச்   நகரை அடைந்ததும்  வண்டியில் சென்ற வாறே  பெரிய கடிகார முகத்  தோற்றம் கொண்ட  புனித பீட்டர் தேவாலயம், இன்னும் நகரின்
சில இடங்களையும் கண்டுவிட்டு ஈங்கிள்பர்க்  என்னும்  இடத்தில் அமைந்திருந்த அழகிய  விடுதிக்குச் சென்றோம்  அது பெரிய
மலைமேல் அமைந்திருந்த மிகப் பெரிய  விடுதியாகும் ! அதற்குச் செல்ல
 நூழைவு  வாயிலை  மலையை  குடைந்து  குகைபோல (500அடிக்குமேல்)
அமைத்து  அதற்கும் மேலே லிப்டு மூலம் விடுதிக்குச் செல்லவேண்டும்
இது, இதுவரை நாங்கள் காணாத காட்சி!

           இவை அனைத்தையும் படங்களாக  கீழே காணலாம்



















  

28 comments :

  1. பூலோகத்தின் சுவர்க்கம் என
    ஸ்விஸ் நாட்டைச் சொல்வார்கள்
    படித்திருக்கிறேன்
    தங்கள் அற்புதமான பதிவின் மூலமும்
    புகைப்படங்கள் மூலமும் கண்டு மகிழ்கிறேன்
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த
    நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! இரமணி!

      Delete
  2. மிகவும் அழகான சுற்றுப் பயணம் .நன்கு ரசித்து ரசித்துப்
    பார்த்துள்ளீர்கள் ஐயா .படங்களோடு பயண அனுபவம்
    பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக உள்ளதையா !

    ReplyDelete
  3. படங்களைப் பார்க்கையில் நாமும் அந்த இடங்களுக்கு சென்று பார்க்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டுகின்றன !
    நேரில் பார்த்த பாக்கியம் உங்களுக்கு ,நீங்கள் பதிவராய் இருப்பதால் படத்தில் காணும் பாக்கியம் எங்களுக்கு !
    த.ம.1 .

    ReplyDelete
  4. நினைவுகள் என்றுமே சுகம்.. வாழ்த்துகள் அய்யா.

    ReplyDelete
  5. படங்களுடன் பகிர்வு மிகவும் அருமை...

    தொடர்கிறேன்.

    ReplyDelete
  6. அருமையான காட்சிப் பதிவுகளும்! அழகிய படங்களும்!..

    நல்ல சுற்றுலாப் பயணம்தான் உங்களுக்குக் கிடைத்தது..
    மகிழ்ச்சி ஐயா!

    ReplyDelete
  7. அழகான அருமையான சுற்றுப் பயணம் ரசிக்க வைத்தது ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. தங்களின் கருத்துரைக்காக : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-2.html

    ReplyDelete
  9. மிக்க நன்றி!

    ReplyDelete
  10. ஒரு சுகமான அனுபவத்தைத் தொடர்ந்து பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்! - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை

    ReplyDelete
  11. அத்தனையும் அற்புதம்

    ReplyDelete
  12. படங்களும் பதிவும் அருமை. பாராட்டுக்கள் ஐயா.

    ReplyDelete
  13. அருமையான இடங்கள். காணக்கிடைத்தன. நன்றி.

    ReplyDelete
  14. சிறப்பான படங்கள். உங்கள் மூலம் நாங்களும் இங்கே சென்று வந்த உணர்வு.....

    ReplyDelete
  15. // ஈங்கிள்பர்க் என்னும் இடத்தில் அமைந்திருந்த அழகிய விடுதிக்குச் சென்றோம் அது பெரிய மலைமேல் அமைந்திருந்த மிகப் பெரிய விடுதியாகும் ! அதற்குச் செல்ல நுழைவு வாயிலை மலையை குடைந்து குகைபோல (500அடிக்குமேல்) அமைத்து அதற்கும் மேலே லிப்டு மூலம் விடுதிக்குச் செல்லவேண்டும் இது, இதுவரை நாங்கள் காணாத காட்சி! //

    புதுமையான செய்தியை பகிர்ந்து கொண்டதர்கு நன்றி!

    ReplyDelete
  16. மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் படங்கள்...
    அருமை பெருந்தகையே...

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...