தன்னலம் ஏதும் இன்றி-
யாரும்
தன்கென
நிகரும் இன்றி!
இன்னலே நாளும் கொண்டார் –காந்தி
இந்திய விடுதலை கண்டார்!
மன்னராய்ப் பலரும்
இங்கே –பதவி
மகுடமே
சூட எங்கே?
பொன்நிகர் விடுதலை
காணோம்-அந்தோ
போயிற்று
அனைத்தும் வீணாம்!
தேசத்தின் தந்தை நீரே
–என்று
தெரிந்தவர் எத்தனைப் பேரே!
நாசத்தை நாளும்
செய்தே –சொந்த
நலத்தையே பயனாய் எய்தே!
மோசத்தை சட்டம் ஆக்கி –என்றும்
முடிவிலா
வறுமை தேக்கி!
பேசத்தான் வழியே
இல்லை! –எதிர்த்து
பேசிடின்! வருதல் தொல்லை
ஊற்றென ஊழல் ஒன்றே –இன்றே
உலவிட நாட்டில் நன்றே!
காற்றென வீசக் கண்டோம்
–துயரக்
கண்ணீரால் கவிதை விண்டோம்
ஆற்றுவார் எவரும் உண்டோ! –தூய
அண்ணலே உமதுத் தொண்டோ!
போற்றுவார் எவரும் காணோம் –அந்தோ
போயிற்று
அனைத்தும் வீணாம்
புலவர்
சா இராமாநுசம்
// தேசத்தின் தந்தை நீரே –என்று
ReplyDeleteதெரிந்தவர் எத்தனைப் பேரே! //
உண்மைதான். தேசத் தந்தையை தெரிந்தவர்கள் கூட மறந்துவிட்டனர்!
மிக்க நன்றி
Deleteஆதங்கத்துடன் கூடிய அற்புதமான
ReplyDeleteசிறப்புக் கவிதை பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
மிக்க நன்றி
Deleteவர வர எல்லாம் அருகித் தான் விட்டது வேதனை .
ReplyDeleteமாற்றம் வரும் என்று நம்புவோம்.
மிக்க நன்றி
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
தேசத்தின் தந்தை நீரே –என்று
தெரிந்தவர் எத்தனைப் பேரே!
உண்மையான வரிகள் கவிதை அருமை வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி
Deleteபேசத்தான் வழியே இல்லை! –எதிர்த்து
ReplyDeleteபேசிடின்! வருதல் தொல்லை...மிகச்சரியாக சொன்னீங்க. ஐயா.
மிக்க நன்றி
Deleteமிக்க நன்றி
ReplyDeleteஆதங்கத்தைத் தெரிவிப்பதற்கு இதைவிட வேரொன்றும் இல்லை ஐயா!
ReplyDeleteசிறந்த கவிவரிகள்! அருமை!
என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!
த ம.4
எப்படியோ இருந்த நாடு இந்த நிலைக்கு வந்திருப்பதின் காரணம் பற்றி சிந்திக்கையில் பதறுகிறது அய்யா
ReplyDelete//தேசத்தின் தந்தை நீரே –என்று
ReplyDeleteதெரிந்தவர் எத்தனைப் பேரே! //
உண்மை.....
மிக்க நன்றி
Deleteகாந்தியை மறந்து விட்டோம், ஆனால் காந்தி நோட்டுக்காக அலைகிறோம் என்று எங்கோ படித்தது நினைவிற்கு வருகிறது.
ReplyDeleteகாந்தியத்தை மறந்துவிட்டோம் ஐயா.
காந்தியின் நினைவினைப் போற்றுவோம்
துயரக்கண்ணீரால் விண்ட கவிதை பகிரும் ஆதங்கம் மனத்தில் பாரமேற்றுகிறது ஐயா.
ReplyDeleteஅண்ணலின் கொள்கையை இன்றைய தலைவர்கள் மறந்துவிட்டார்கள் வேதனை வெளிப்படும் கவிதை ஐயா! என்ன செய்வது?
ReplyDeleteமிக்க நன்றி
Deleteகவிதை நன்று. த.ம. 7
ReplyDeleteமிக்க நன்றி
Deleteஆதங்கமும் அழகான கவிதையாய்....
ReplyDeleteஅருமை புலவர் ஐயா.
அருமை ஐயா....
ReplyDeletetm 9
ReplyDeleteமிக்க நன்றி
Deleteகவிதை அருமை ஐயா
ReplyDeleteமிக்க நன்றி
Deleteஅருமையான கவிதை ஐயா!
ReplyDeleteமிக்க நன்றி
Delete