Friday, September 27, 2013

என் ஐரோப்பிய சுற்றுப் பயணம் பகுதி- ஒன்பது



              பாரிஸ்-5-8-13

           அதன் பிறகு , அன்று இறுதியாகக்  கண்ட இடம்
அழகு மிக்க, புகழ் வாய்ந்த மிக உயர்ந்த  ஈஃபிள் கோபுரமாகும்
கட்டுக்கடங்காத  கூட்டம்! எங்களைப் போல  வெளிநாட்டில்
வாழ்பவரே,  பலகுழுக்களாக வந்திருந்தனர் 

          எனவே அனுமதிச்  சீட்டை  முன்னரே  பதிவு செய்து
இருந்தும்  நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க  வேண்டியதாயிற்று
கோபுரத்தின் மேலே மூன்று  நிலைகள்!  முதல் இரண்டு நிலைகள்  வரை
செல்ல ஏதும்  தடையில்லை! மூன்றாவது  நிலை மட்டும் அப்போது
உள்ள கால நிலைக்கு ஏற்ப  அனுமதி கிடைக்கும் என்று  சொன்னார்கள்

            லிப்ட் வழியாகத்தான் அனைவரும் மேலே  போக முடியும்
எங்களுக்கான முறை வந்த  போது அனைவரும் ஒன்றாகப் போக 
இடமின்றி  இரண்டு குழுவாக மேலே போனோம்  முதல்  நிலையோடு
லிப்டு  நின்று விடும்  வட்ட வடிவமாக சுமார் நூறடி  அகலத்தில்  பாது
காப்புக்  கம்பிளோடு இருந்தது  நீளம் ஐநூறுக்கு மேல் இருக்கலாம் மையத்தில்  கழிப்பரை வசதியும்  இருந்தன

           அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப இரண்டுமுறை, மூன்று முறை
எனச் சுற்றிச் சுற்றி படமெடுத்து கொண்டனர் பாரிஸ் நகரம் முழுவதும் மிகத் தெளிவாகத் தெரிந்தது! நானும் எடுத்தேன்!  என்னை பெறுத்தவரை இலண்டன் நகரை விட பாரிஸ் நகரம் பெரிதாகத்  தோன்றியது

           அதை விட்டு  இரண்டாவது நிலைக்குச்  சென்றோம்  அது
அகலமும் , நீளமும் சற்று  குறைவாக இருந்தது  நகரம்  மேலும்
தெளிவாகத்  தெரிந்தது வேறு, வேறுபாடு இல்லை மூன்றாவது நிலை யும்
செல்ல  சிலர் விரும்ப அனுமதி, காலநிலை சரியில்லையென மறுக்கப் பட
கீழே வந்து தங்கும் விடுதிக்கு  வந்து சேர்ந்தோம்  அன்று இரவு பனிரெண்டு
மணி அளவில் தான  பாரிஸ் கம்பன் கழகத் தலைவர் வெண்பா வேந்தர்
திருமிகு பாரதிதாசன் அவர்களை சந்தித்தோம்

         கீழே  சில காட்சிகள்  ………….!  படத்தின் மீது அம்புக் குறியை
     வைத்து அழுத்தினால் படம் பெரிதாக , தெளிவாகத் தெரியும்

















32 comments :

  1. அற்புதக் காட்சிகள்
    தங்கள் பதிவின் மூலம் காணக் கிடைத்தது
    மிக்க மகிழ்ச்சி
    வெண்பா வேந்தர் பாரதிதாசன் அவர்களைச்
    சந்தித்தது தங்களுக்கு நிச்சயம் அதிக மகிழ்வளித்திருக்கும்
    தமிழால் இணையும் உறவுகளுக்கு என்றும்
    நெருக்கம் அதிகம் தானே
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கு மிக்க நன்றி! ஐயா!

      Delete
  2. அற்புதமான படங்கள்.
    ரசித்தேன்.

    ReplyDelete
  3. ஈபில் கோபுரத்திலிருந்து எடுத்த புகைப்படங்கள் அருமை. பாரிஸ் நகரை காண உதவியமைக்கு நன்றி!

    ReplyDelete
  4. எத்தனை சிரமங்களை எதிர்கொண்ட போதும் மனதிற்கு மகிழ்வாக எம் நோக்கம் அமையும்போது பட்ட சிரமங்கள் பனிபோல் மறைந்திடுமே...

    அருமையான காட்சிகள் அற்புதப் படப் பதிவுகள்!

    கவிஞர் ஐயாவின் சந்திப்பையும் காணும்போது மனதிற்கு மேலும் மகிழ்வாயுள்ளது.

    தொடருங்கள் ஐயா..

    த ம.3

    ReplyDelete
  5. தமிழால் (கம்பன் கழகத் தலைவர் வெண்பா வேந்தர்
    திருமிகு பாரதிதாசன்) தமிழுக்கு (புலவர் அய்யாவுக்கு) மரியாதை. வாழ்க தமிழ். படங்களை ரசித்தேன்!

    ReplyDelete
  6. படங்களும் பயணக்கட்டுரையும் அருமை, ஐயா. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  7. பூர்வஜென்மத்தில் தாங்கள் செய்த புண்ணிய பலனே இந்தச்
    சுற்றுலாப் பயணம் என எண்ணத் தோன்றுகின்றது ஐயா .
    மனம் மகிழ்ந்தேன் பகிர்வினைக் கண்டு .தொடரட்டும் மேலும் ..

    ReplyDelete
  8. இத்தனை இடங்களுக்கும் என்னை அழைத்துச் செல்லாததால் நான் ஊரை விட்டே தொலைவுக்குப் போகிறேன்

    ReplyDelete
  9. புகழ் பெற்ற இடங்களை உங்கள் பதிவு மூலம் காண முடிந்தது.... மிக்க மகிழ்ச்சி.

    பகிர்வுக்கு நன்றி புலவர் ஐயா.

    ReplyDelete
  10. படங்களும் பயணக்கட்டுரையும் அருமை ஐயா... வாழ்த்துகள்...

    ReplyDelete
  11. அருமையான பயணப்பகிர்வுகள்.. சிறப்பான படங்கள்..
    கம்பன் கழகத் தலைவர் சந்திப்பு என இனிய பதிவுகளுக்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்.ஐயா..

    ReplyDelete
  12. நெஞ்சில் நிலைத்திருக்கும் பயண அனுபவங்கள் தொடரட்டும்.

    ReplyDelete
  13. அனுபவப் பகிர்வோடு அசத்தலான புகைப்படங்கள். நினைவில் என்றும் நிறைந்திருக்கும் இனிய அனுபவப் பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  14. எழுத்தும் படங்களும் அருமை ஐயா

    ReplyDelete
  15. மூன்றாவது நிலையில்....ஒரு காபி ஷாப்...மற்றும் ஈபிள் கோபுரத்தை நிறுவிய பொறியாளர் மெழுகு சிலையும் இருக்கும்...அருமையான காட்சியும் உண்டு......ஆயினும் அது மிகக் குறுகிய இடம்.....தங்கள் பதிவு சிறப்பாக உள்ளது

    ReplyDelete
  16. கண்டுகொண்டோம் அருமை.

    ReplyDelete
  17. ஐயா! நல்ல பதிவு .
    தமிழமணம் பிளஸ் +1 வோட்டு போட்டுள்ளேன்.
    மக்கள் பல நாடுகள் சென்று அனுபவம் பெறனும்!
    நன்றி!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...