இலண்டன்(-4-8-2013)
இரயில் நிலையத்தில் கிட்டத் தட்ட ஒரு மணி நேரம் காத்திருந்தோம். இரயில் வந்ததும்
நீண்ட நேரம் நிற்காது என்பதால் அவசரம் அவசரமா ஏறி ( ஒதுக்கப்பட்ட வாறு) அனைவரும்
உரிய
இருக்கையில் அமர்ந்தோம் சில நிமிடங்களிலேயே வண்டி
புறப்பட்டு
அதிவேக இரயில் என்பதற்கு ஏற்ப விரையத் தொடங்கியது
வழி
நெடுக பலகாட்சிகள் கண்டாலும் கடலுக்கு உள்ளே எப்படி செல்கிறது என்பதைக்காணவே ஆவலாக இருந்தோம் ஆனால்…!
வண்டி திடீரென்று குகைக்குள் செல்வது போல இருந்தது
அதுவரை
கண்டு வந்த வெளிக்
காட்சிகள் மறைந்தன அரை மணிநேரம்
இருக்கலாம்
மீண்டும் வெளிக் காட்சிகள் கண்ணில் தோன்ற அப்போது தான்இதுவரை
கடலின் உள்ளே வந்து கரையேறி விட்டோம் என்பதும் பாரிஸ்
வந்து விட்டது என்பதும் உணர்ந்தோம்! மேலும் ஒரு மணி நேரம் ஓட பாரிஸ்
நகரை அடைந்தோம்
மிகப் பெரிய இரயில் நிலையம்! நீண்ட தூரம் நடந்து வந்துதான் வெளியே வந்தோம் அங்கே எங்களுக்காக காத்திருந்த
பேருந்தில்
ஏறி நேராக தங்கும் விடுதிக்குச் செல்லாமல் வண்டியில்
இருந்த
வாறே நகரின் பல்வேறு இடங்களைப் சுற்றிப் பார்த்தோம்
மங்கிய வெளிச்சத்தில் தொடங்கிய பயணம் வண்ண ஒளிமயமாக விளங்கும் நகரின் பல பகுதிகளுக்கும் சென்றது இரவு ஒரு மணி அளவில்தான் தங்கும் விடுதிக்கு சென்றோம்
பாரிஸ்-5-8-13
விடிந்ததும் வழக்கம் போல காலை உணவை முடித்துக்
கொண்டதும்
நகர சுற்றுலா தொடங்கியது இன்றும் பல இடங்களை
வண்டியஅல் அமர்ந்த வாறே கண்டோம் பகல் உணவு முடித்து அங்குள்ள லூவர் மியூசியம்
சென்று பார்த்தோம் வழக்கமான கலைப் பொருள்கள் தான் ஆனால் வெகு அழகாக பராமரிக்கப் படுகிறது
படிகள் மிகுதி! எனவே முழுவதும் நான் பார்க்க
வில்லை
அதை முடித்திக்
கொண்டு, சீன் நதியில் படகு சவாரி!அனைவரும்
மிகவும் விரும்பிய
ஒன்றாக, நன்றாக இருந்தது இரண்டு மணி நேரம்!
போனதே தெரியவில்லை படங்களும் அதிகமாக எடுத்தோம்
அங்கு, எடுத்த படங்களுடன் நகர உலாவின் போது
எடுத்த படங்களையும் கீழே காணலாம்!
பாரிஸ் புகைப்படங்கள் சிறப்பு ஐயா.
ReplyDeleteநன்றி ஆவி!
ReplyDeleteகடலுக்குள் பயணம் எவ்வாறு இருந்தது ஐயா. வெறும் இருட்டாக இருந்ததென்றால் சுவாரஸ்யமாக இருந்திருக்காதே? பயணங்களில் தங்களுக்கேற்ற உணவு கிடைத்ததா?அதைப்பற்றியும் எழுதுங்கள்.
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteபாரீஸ் அது கனவு உலகம்
ReplyDeleteமாதிரித்தானே
தங்கள் புகைப்படங்கள் மூலம்
கண்டு ரசித்தோம்
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
tha.ma 1
ReplyDeleteபுகைப்படங்களும் பகிர்வும் அருமையாக உள்ளன .
ReplyDeleteநன்றி!
ReplyDeleteபுகைப்படங்கள் அழகாக உள்ளது அய்யா...
ReplyDeleteஎன் கனவு உலகத்தின் சில படங்களை இங்கு கண்டதில் மகிழ்ச்சி...
தொடருங்கள்...
மிக்க நன்றி!
Deleteபொறாமையாஇருக்கு
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஅப்பா சந்தோஷமாக இருக்கு. என்னால் இந்த இடம் எல்லாம் சுற்றிப்பார்க்கமுடியவில்லையே என்ற கவலை துளியும் இல்லை. ஏன்னா நீங்க தான் எங்கள் எல்லோர் கைகளையும் பிடித்துக்கொண்டு சுற்றிக்காண்பித்துவீட்டீரே.. அழகிய படங்கள். தெளிவான காட்சிகள். அழகிய கட்டுரை.. அப்பா படி ஏற சிரமமாக இருப்பதால் தான் அதிகம் சுற்ற முடியவில்லையா? கடலுக்குள் செல்வதை பார்க்க இயலாமல் குகைக்குள் போவது போல் காட்சி எல்லாம் மறைந்துவிட்டதுன்னு படித்தபோது எனக்கும் அப்டி தான் இருந்தது. அன்பு நன்றிகள் அப்பா பகிர்வுக்கும். படங்களுக்கும்...
ReplyDeleteமிக்க நன்றி!
Deletetha.ma.4
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஎங்களுக்கும் சுற்றிக் காட்டி விட்டீர்கள்! நன்றி
ReplyDeleteமிக்க நன்றி!
Delete//வண்டி திடீரென்று குகைக்குள் செல்வது போல இருந்தது
ReplyDeleteஅதுவரை கண்டு வந்த வெளிக் காட்சிகள் மறைந்தன அரை மணிநேரம்
இருக்கலாம் மீண்டும் வெளிக் காட்சிகள் கண்ணில் தோன்ற அப்போது தான்இதுவரை கடலின் உள்ளே வந்து கரையேறி விட்டோம் என்பதும் பாரிஸ் வந்து விட்டது என்பதும் உணர்ந்தோம்!//
அதிசயமான பயணம். அழகான படங்கள். பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.
மிக்க நன்றி!
Deleteபடங்கள் சிறப்பு ஐயா..
ReplyDeleteபாரீஸ் நகரை கண்டுகொண்டோம்.
ReplyDeleteஅழகான காட்சிகள். உங்கள் புகைப்படங்கள் மூலம் நாங்களும் ரசிக்கிறோம்.
ReplyDeleteகடலுக்குள் பயணம் செய்த அனுபவம் உண்மையிலேயே அதிசயம்தான்.
ReplyDeleteகுகை ரெயில். நல்ல அனுபவம். படங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி! ஒரு வேண்டுகோள். தங்கள் பதிவிலுள்ள எழுத்துக்களின் பின்புலம் (BACKGROUND) வெள்ளையாக இருந்தால் நல்லது.
ReplyDeleteமிக்க நன்றி
Deleteஎன்ன ஐயா, நீங்கள் சென்ற ரயில் கடலின் அடியில் சென்ற ரயிலின் உள்ளே இருந்து விட்டு இவ்வளவு சுலபமாக எழுதி விட்டீர்கள். மனிதன் உருவாக்கிய அதிசயம் அல்லவா அது. பாரீஸ் பயணம் அருமை, இன்றிலிருந்து தங்களை தொடர்கிறேன்.
ReplyDeleteபடக்காட்சிகள் அருமை.
ReplyDelete/பாரிஸ் வந்து விட்டது என்பதும் உணர்ந்தோம்!/
ReplyDeleteபாரிஸ் என்பதை பிரான்ஸ் என மாற்றிவிடவும்.
நீங்கள் வந்திறங்கிய நிலையம் Gard du Nord என அழைப்பர். பிரான்சின் வடபகுதிக்குச் செல்லும் தொடர்வண்டி யாவும் இங்கிருந்தே புறப்படும்.மிக நீளமானதும் விஸ்தீரமானதுமே , உங்களுக்கு மிகக் கடினமாக இருந்திருக்கும்.
இந்நிலையத்திலிருந்து 150 மீட்டரில் தானே , இந்திய பகுதி லா சப்பல்(La chapelle) இருக்கிறது. அதனூடு வண்டியில் சென்றிருந்தாலே தமிழ்ப் பெயர் பலகையுடன் கூடிய வர்த்தக நிலையங்களைப் பார்த்துச் சென்றிருக்கலாம். அப்படியே 50 மீட்டரில் வருடா வருடம் தேரில் பவனி வரும் பிள்ளையாரும் ,இன்னும் ஒரு 50 மீட்டரில் அம்மனும் கோவில் கொண்டிருக்கிறார்கள். ஆனால் லண்டன் போல் கோபுரத்துடன்கூடிய கோவிலல்ல.
எனக்குத் தெரிந்த உங்கள் படங்களில் உள்ளவை
2. ஜீன் டாக்(Jeanne d'Arc) , பிரன்சு வீராங்கனையின் சிலை , இவர் உயிருடன் கொழுத்தப்பட்டவர்.
3.- 4. ஒபேரா (Opera) ,நாட்டிய நாடக அரங்கம். அழகிய பழைமையான கட்டிடம்.
5- பிளேஸ் து வந்தொம்(- place de vendome)பிரான்சின் பிரபல ஆபரணக் மாளிகைகள் உள்ள பகுதி, அடிக்கடி
கொள்ளை நடக்குமிடம். 2 வாரத்துக்கு முதலும் பெரிய கொள்ளை நடந்தது.
6.- 7. பிளேஸ் து லா கொன்கோட்(place de la concorde), இதன் ஒரு பக்கத்திலேயே பிரன்சுப் பாராளுமன்றம் உள்ளது இதன் நடுவில் நட்டுள்ள கல், எகிப்தில் இருந்து கொண்டுவரப்பட்டது.
8- இதில் தெரியும் தங்க நிறக் கோபுரக் கூரையுடைய கட்டடத்தில் , இனவலிட்ஸ்(Invalides -musée de l'armée, போர் ஆயுதக் காட்சியகம் அமைந்துள்ளது.
//சீன் நதியில் படகு சவாரி//
இந்த நதியை Seine "சென்" என அழைப்பர்.
நீங்கள் எங்கள் உலகப் புகழ் தமிழ்ப் பகுதி "லா சப்பல்"( La chapelle )பார்க்காமல் சென்றது. கவலையே.
எனினும் இந்த வயதில் உலகின் அழகிய நகரங்களை நீங்கள் சுற்றிப் பார்ப்பது, பாராட்டியே ஆகவேண்டியது.
இன்னும் பல பயணங்கள் அமையட்டும்.
அருமையான நகரம் பாரீஸ்.
ReplyDeleteநாங்கள் தங்கிய இரண்டு நாட்களும் ஒரு இடம் விடாமல் சுற்றினோம். பிரமிக்கவைக்கௌம் அழகு. தமிழ் பேசும் மக்கள் நிறையப் பார்க்க முடிந்ததது. தமிழ்க்கடை ஒன்றில் நிறைய பொருட்களும் வாங்கினோம். உங்கள் பயணம் என்னைப் பாரீசுக்கு இழுத்துவிட்டது ஐயா. மிகவும் நன்றி.