இலண்டன்(-4-8-2013)
என்னால் மேலும் இனி நடக்க இயலாது நீங்கள் அனைவரும்
போங்கள்! நான் பார்க்கா விட்டாலும் பரவாயில்லை நேரமாகிவிடும் என்று
கூறி என் கைப்பையையும் நண்பரிடம் கொடுத்து விட்டு வழிகாட்டியிடம்
என்னை
மட்டும் உட்கார (பாதுகாப்பாக)
இடத்தைக் ஏற்பாடு செய்ய
முடியுமா என்று கேட்டேன்
அவர், சற்று பொறுங்கள் என்று கூறி, பயண ஏற்பாட்டாளர்
இராசேந்திரரோடு
உள்ளே சென்று யாரிடமோ பேசிவிட்டு திரும்பி
வந்து , உங்களுக்கு சக்கர நாற்காலி
வண்டி ஏற்பாடு செய்துள்ளோம்
என்று
சொல்ல, இராசேந்திரர்,
உங்களோடு நான் வருகிறேன் வழிகாட்டி அவர்களோடு போவார் என்றார்
அது வேறு வாயில் என்பதால் அதைத் தேடிப் போனோம் அங்குள்ள
காவலரிடம்
கேட்டதும் அவர் தன்
கையில் உள்ள தொலை பேசி வாயிலாக தகவல்
தெரிவிக்க பத்துநிமிடங்களுக்குள் ஆட்டோ போல
ஒரு
வண்டி வந்தது அதில் எங்களை ஏற்றிவிட சென்று
இறங்கினோம்
அங்கு சக்கர நாற்காலி வண்டி தயராக
இருந்தது அதில் நான்
அமர்ந்தேன் . திரு இராசேந்தரிடம் ஏதேதோ
கேட்டு எழுதி கையெழுத்தும்
வாங்கினார்கள்
அதன்பின் அவரே வண்டியை தள்ளத் தொடங்கினார்
அதனால்
நான் மிகவும் துன்பத்தோடு அவரிடம் வருத்தம் தெரிவிக்க
அவர், என் தந்தையைப் போல உள்ள உங்களுக்கு சேவை செய்ய
ஒரு
வாய்ப்பு கிடைத்ததே என்று சொன்னதைக் கேட்டு
நெகிழ்ந்து
போனேன்
சக்கர நாற்காலியில் செல்வதற்கென்றே உரிய வழி ஏற்ற இறக்கங்களுடன் இருந்ததால்
எதுவும் சிரமமின்றி ஒரு மணிநேரத்திற்கு
மேல் சுற்றினோம் மிகப் பெரிய அரண்மனை!
நேர்த்தியாக கட்டப் பட்டு
இருந்தாலும்
எங்கு
பார்த்தாலும் (முழுவதும்) வழிவழி வந்த இராச
பரம்பரை பற்றிய வரலாறு, முடிசூட்டிக் கொள்வது இராணுவ அணிவகுப்பு
ஆகியன பற்றியே, ஓவியங்களாக,தீட்டப்பட்டும் புகைப் படங்களாவும்
இருந்தன! சில
குறும் படங்களும் ஆங்காங்கே காட்டப் பட்டன
இது காணும்
மக்களுக்கு
ஒருவித சலிப்பைத்தான் ஏற்படுத்தும் என்பதே
என் கருத்து புகைப்படக் கருவியும் ,பையும்
நண்பரிடம் இருந்ததால் படமெடுக்க வில்லை! அது எனக்கு அவசியமாகவும் படவில்லை!
அன்று
பகல் இரண்டுமணி அளவில் இலண்டனை விட்டு
பாரிஸ்
செல்ல யூரோஸ்டார்
என்னும் அதிவேக இரயில் (,கடலுக்குள் செல்வது)மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் நாங்கள் சென்றவாறே
வெளியில் வந்தோம்
அங்கே வண்டியும் மற்றவர்களும் வந்துவிட சென்று பகல் உணவை முடித்துக் கொண்டு
இரயில் நிலையத்தை அடைந்தோம்
கீழே சில படங்கள்! இலண்டன் ஐ ,யில் மேலிருந்து
எடுத்த
என்னால் எடுக்க
முடியாமல் போன காட்சிகள்( நண்பரிடம் பெற்றேன்)
அருமையான பயணக்கட்டுரை... ஒரு மகனைப்போல உதவி செய்யும் நண்பர்.... அழகிய புகைப்படங்கள்.... தொடருங்கள்.... நன்றி ஐயா..
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteகண்கவர் புகைப்படங்கள் !
ReplyDeleteகடலுக்கு அடியில் நாமும் ஒரு மீனைப் போல
பிரயாணமா ?
கேட்கவே ஆச்சர்யமாக உள்ளது.
மிக்க நன்றி!
Deleteபுகைப்படங்கள் ஒவ்வொண்ணும் கண்ணை இழுத்துப் புடிச்சு நிறுத்திடுச்சு ஐயா... அருமை! அனுபவஙகள் சுவாரஸ்யமா இருக்குது!
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteபயணக்கட்டுரை மிகவும் அருமை ஐயா... அழகிய புகைப்படங்கள்...
ReplyDeleteஅற்புதமான காட்சிகள்
ReplyDeleteஅருமையாக புகைப்படமெடுத்து
விரிவான விளக்கத்துடன்
பதிவாக்கித் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி
மிக்க நன்றி!
Deletetha.ma 3
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஅற்புதமானபடங்களுடன்உங்களின்பெருந்தன்மையும்புரிகிறதுஅய்யா
ReplyDeleteநான் நினைத்ததுபோல், நீங்கள் மேற்கொண்டு சுற்றிப்பார்க்க விரும்பாவிட்டாலும், திரு இராசேந்தர் அவர்கள் சக்கர நாற்காலி வண்டியை உங்களுக்காக ஏற்பாடு செய்து உங்களை உட்காரவைத்து அவரே வண்டியை தள்ளிக்கொண்டு போய் உங்களையும் பார்க்கவைத்தது மிக்க மகிழ்ச்சியைத் தந்தது.
ReplyDeleteபடங்கள் அருமை. தொடர்கிறேன்.
மிக்க நன்றி!
Deleteஐயா... சென்ற பதிவில் உங்கள் துயரம் கண்டு மனம் பதைத்துப் போனது. ஆனால் சக்கர நாற்காலியும் அந்தச் சகோதரர்கள் உதவியாலும் மிகுதி இடங்களையும் கண்டு களித்தது கேட்டு ஆறுதலாகவும் மகிழ்வாகவும் இருக்கின்றது.
ReplyDeleteபடங்கள் அருமை! தொடருங்கள் ஐயா...
மிக்க நன்றி!
Deleteபடங்களும் பயணக்கட்டுரையும் மிக அருமையாகச் செல்கிறது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
ReplyDeleteகவிதையே எழுதிவந்த நீங்கள் இப்போது அழகாக இந்தப்பயணக் கட்டுரை எழுதுவது, எனக்கு மிகவும் வியப்பாகவும், படிக்க மிகுந்த ஆர்வமாகவும் உள்ளது, ஐயா. தொடருங்கள்.
கவிதையே எழுதிவந்த நீங்கள் இப்போது அழகாக இந்தப்பயணக் கட்டுரை எழுதுவது, எனக்கு மிகவும் வியப்பாகவும், படிக்க மிகுந்த ஆர்வமாகவும் உள்ளது, ஐயா. தொடருங்கள்.
Deleteஉண்மைதான் ஐயா! தட்டச்சு அதிகம் செய்ய என்னால் இயலாமை ! முதுமை காரணம்! எனவே கவிதை
கூட முன்போல் எழுதுவதில்லை என் சுற்றுப் பயணம் பற்றி
எழுதும் ஒவ்வொரு பகுதிக்கும் நான் படும் உடல் துன்பம் அதிகமே!மிக்கநன்றி!
படங்களுடன் பயணக் கட்டுரை. சலிப்பு தட்டவில்லை.
ReplyDeleteதவறாமல் தொடரும் உங்களுக்கு மிக்க நன்றி!
Deleteபடங்களுடன் பயணக் கட்டுரை அருமை. தொடருங்கள்
ReplyDeleteதவறாமல் தொடரும் உங்களுக்கு மிக்க நன்றி!
Deleteபின்னூட்ட்த்திற்குப் பதிலிடுவது கூட உங்களுக்குச் சிரமமாக இருந்தல் எல்லோருக்கும் சேர்ந்து ஒரு நன்றி சொல்லுங்கள் ஐயா.
ReplyDeleteஇவ்வளவு அழகான் அபடங்களைத் தந்து எங்களை லண்டனுக்கு அழைத்துச் சென்ற உங்களுக்கு ஒரு சிரமும் இருக்கக் கூடாது.
தவறாமல் தொடரும் உங்களுக்கு மிக்க நன்றி!
Deleteஅப்பாடா! கடைசியில் உங்களுக்கு சக்கர நாற்காலி கிடைத்தது எங்களுக்கு பெரிய ஆறுதல். அத்தனை தூரம் போய்விட்டு நல்ல இடங்களைப் பார்க்காமல் வந்தால் அதுவும் வருத்தமாகத் தான் இருக்கும், இல்லையா?
ReplyDeleteநல்லபடியாக லண்டன் சுற்றுலா முடித்து பாரிஸ் கிளம்பி இருக்கிறீர்கள். நாங்களும் பயணிக்கிறோம்.
தவறாமல் தொடரும் உங்களுக்கு மிக்க நன்றி!
Deleteஅழகான படங்கள் மற்றும் விளக்கமாக எழுதியுள்ளீர்கள் அய்யா...
ReplyDeleteதொடருங்கள்...
அற்புதமான கட்டுரை.. அப்பா படங்கள் எல்லாமே கொள்ளை அழகு.. குட்டீஸும், அரண்மனை வெளிப்புறமும். அப்பா உங்க முகம் அதிக சோர்வா இருந்திருக்கு. நல்லவேளை சக்கர நாற்காலி கிடைத்தது. இத்தனை தூரம் போய்விட்டு தவறவிடாமல் இருக்க உடன் திரு இராசேந்திரர் உங்கள் நாற்காலியை தள்ளிக்கொண்டு வந்ததும். நீங்க அதனால் வருத்தமாக சொன்னதும் அதற்கு அவர் சொன்ன பதில் மனதை நெகிழவைத்துவிட்டது அப்பா.. எத்தனை பிள்ளைகள் இப்படி கிடைக்கும் உலகில்... அன்பு நன்றிகள் அவருக்கு. அப்பாவை பத்திரமா எல்லா இடமும் சுற்றி காண்பித்தது மட்டுமல்லாது எல்லோரும் உங்களை ஒரு குழந்தையை பார்த்துக்கொள்வது போல் அத்தனை அன்புடன் பார்த்துக்கொண்டதற்கும்...
ReplyDeleteஅழகிய படங்கள். அன்பான மகன் கிடைத்துள்ளார் அவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஐயா!
ReplyDeleteலண்டனில் தமிழர் வாழும் பகுதிகள், செல்லவில்லையா? அங்கு ஈஸ்ட்காமில் ஒரு அழகான கோபுரத்துடன் கூடிய முருகன் கோவில், மகாலட்சுமி கோவில், அத்துடன் உயர் வாசல் குன்று(High gate Hills) எனும் இடத்தில் தமிழர் கட்டிய முதல் முருகன் கோவில் இங்கு சீர்காழி முதல் முதல் லண்டன் வந்து பாடியுள்ளார். சென்றிருக்கலாம்...
ஈஸ்ட்காம் சென்றால் நீங்கள் சென்னையில் இருப்பது போல் உணர்ந்திருப்பீர்கள்.
ஈரோஸ்ரார் தொடர் வண்டி, கடலுக்குள் செல்வதில்லை. இது கடலின் அடிப்பரப்பில் இருந்து 30 மீட்டர் ஆழத்தில் உள்ள மிகக் கடினமான பாறைகளைத் தோண்டியிட்ட பாதையிலேயே செல்கிறது.அதைக் கடக்க சுமார் 20 நிமிடங்கள் எடுக்கும். குகையூடு செல்லும் போது இருப்பது போல் , இருட்டே!!!