Friday, September 20, 2013

என் ஐரோப்பிய சுற்றுப் பயணம் பகுதி-ஆறு





                இலண்டன்(-3-8-2013)

    இனிய உறவுகளே
சென்ற பதிவின் இறுதியில்  கண்ட  படமானது  இலண்டன்  ஐ என்று
சொல்லப் படுகின்ற ( மிகமிக) மெதுவாக ஊர்ந்து  சுற்றும் இராட்சத  இராட்டினம் ஆகும் அது ஒரு சுற்றுவர  முப்பது  நிமிடங்களாகின்றன
அதில்  காணப்  படும் பல பெட்டிகளில் மக்கள் அது மெதுவாவே நகர்வதால்
விரைந்து இறங்கவும் வரிசையில் நிற்போர் பத்து, பதினைந்து வரை ஏறவும்
முடிகிறது மத்தியில் என்னைப்  போன்ற வயதானவர்கள் அமர (நாலுபேர்)
நீண்ட பலகையும்  உள்ளது அதில் ஏறினோம்

       மேலே செல்ல செல்ல  இலண்டன்  எழில் மிகு தோற்றம் படிப்படியாகத் தெளிவாகத் தெரிந்தது  இரவு எட்டு மணிக்குமேல்
தான் அங்கு கதிரவன் மறைவதால்  நகரின் நாலபக்கமும்  கண்டு அனைவரும் அங்கும் இங்கும்  ஓடி படமெடுத்தார்கள் நானும்  பட
மெடுக்க முயன்ற போது ஏமாற்றமே அடைந்தேன் .  காரணம்
என் புகைப்பட கருவியின் மின்விசை தீர்ந்துவிட்டது.

         உடல் சோர்வோடு , மனச் சோர்வும் சேர்ந்து விட, நான்
இருக்கையில் அமர்ந்தேன் ஆனாலும் அவ்வப்போது எழுந்து நின்றும் ஓரமாகச் சென்றும் கண்டு  இரசித்தேன் உச்சியில் சென்ற போது
நகரம் முழுவதும்  காண முடிந்தது  அடடா! என்ன  அழகு!
காலம் கழிய சுற்றும் முடிய  ஏறியவாறே அதை விட்டு  விரைந்து இறங்கினோம்

       அனைவரும்  ஒன்று சேர, மணி எட்டு !  இரவு  உணவு  நேரம்
(எங்கள் குழவுக் கென்று,ஒதுக்கப்பட்டது. காலம் தவறின் காத்திருக்க நேரும்)
உரிய நேரத்தில் சென்று உண்டு முடித்தபின் தங்கும் விடுதிக்குச் சென்று விட்டோம்

             இலண்டன்(-4-8-2013)

       மறுநாள்  காலை  ஏழுமணிக்கே  எங்கள்  பயணம்  தொடங்கியது
காரணம் இராணியாரின்  அரண்மனையில் காவலர்களின்  பணிமாற்ற அணி
வகுப்பு மிகவும் சிறப்பாக இருக்கு மென்றும் அது எட்டு மணி அளவில்  நடைபெறுமென தெரிய  எங்கள் வழிகாட்டி வண்டியில் சுற்றிவர  நேரமாக்கும் என்று குறுக்கு வழியில் செல்லலாம் எனக் கூறி வண்டியை  விட்டு இறங்கி தன் பின்னால் நடந்து வரச் சொன்னார்

       விமான நிலையத்தில்  வந்தது சோதனை! இங்கே  வந்தது வேதனை
அனைவரும் வேகமாக நடக்க என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை ! நீண்ட தூரம்(எனக்கு) !  சரிவும் , மேடுமாகவும் இருக்கவே  மூச்சு வாங்கியது
எப்படியோ நானும் சென்று  சேர்ந்தேன்.

        ஏராளமான  மக்கள் அணிவகுப்பைக் காண குவிந்து இருந்தனர்
மணி , எட்டைத் தாண்டியும்  அணிவகுப்புக்கான அறிகுறி ஏதும் தெரியவில்லை முடிவில் (ஒன்பது மணியளவில்) வழிகாட்டி ,அன்று
அணிவகுப்பு இரத்து செய்யப்பட்டுள்ளதாக வந்து தெரிவித்தார் பெரும்
ஏமாற்றம் அனைவருக்கும் ஏற்பட்டது

       அதன் பிறகு அரண்மனையின்  உள்ளே செல்ல மீண்டும்
வாயிலை  நோக்கி நடந்தோம் முன் அனுமதி ஏற்கனவே பெற்றிருந்தால்
காத்திருக்க  தேவையில்லாமல்  போயிற்று . ஆனால் ஒவ்வொரு குழுவாக
 உள்ளே  அனுப்புவதாலும் அரண் மனை வாயில் சற்று தூரமாக இருப்பதாலும்  உள்ளே படிகள்  ஏறி இறங்க வேண்டி இருக்கும் என்
பதையும்  அறிந்து நொந்து போனேன்!  ஏற்கனவே நீண்ட தூரம்  நடந்தும்
நின்றும் இருந்ததால்  என் கால்கள்  தன் சக்தியை முழுதும்  இழந்து விட்டன

     எனவே என்னால்  யாருக்கும் (உடன் வந்த) தடை ஏற்படக்
கூடாது என்று எண்ணி நான்,  ஒரு முடிவுக்கு வந்தேன்………….

          மீண்டும்  சந்திப்போம்!

                     புலவர்  சா  இராமாநுசம்
     

32 comments :

  1. வணக்கம்
    ஐயா

    ஐரோப்பிய சுற்றுப் பயணம் பற்றிய அனுபவப் பகிர்வு நன்றாக உள்ளது மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. என்ன முடிவுக்கு வந்தீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள அடுத்த பதிவினை எதிர்பார்த்து ஆவலாக இருக்கிறேன்.

    ReplyDelete
  3. நல்ல விறுவிறுப்பாக் எழுதுகின்றீர்கள் அய்யா...

    ReplyDelete
    Replies
    1. நன்றி! முத்தரசன்!

      Delete
  4. தங்கள் பதிவு தூய தமிழில் நன்றாக உள்ளது!

    www.revmuthal.com

    ReplyDelete
  5. அனுபவங்கள் சுவையாகச் செல்கின்றன .

    ReplyDelete
  6. //ஒவ்வொரு குழுவாக உள்ளே அனுப்புவதாலும் அரண் மனை வாயில் சற்று தூரமாக இருப்பதாலும் உள்ளே படிகள் ஏறி இறங்க வேண்டி இருக்கும் என்பதையும் அறிந்து நொந்து போனேன்! ஏற்கனவே நீண்ட தூரம் நடந்தும் நின்றும் இருந்ததால் என் கால்கள் தன் சக்தியை முழுதும் இழந்து விட்டன//

    நல்லதொரு அனுபவம். சுவையாக யதார்த்தமாக எழுதி வருகிறீர்கள். மிக்க நன்றி, ஐயா.

    ReplyDelete
  7. நிச்சயம் மற்றவர்களை மேற்கொண்டு போக சொல்லிவிட்டு ஓரிடத்தில் அமர்ந்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். காத்திருக்கிறேன் எனது யூகம் சரியா என அறிய!

    ReplyDelete
  8. சுவாரஸ்யமாகச் செல்கிறது தங்கள்
    பயணப் பதிவு.தொடர்கிறோம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. என்கும்பார்கும்ஆவலைத்தூண்டுகிறது

    ReplyDelete
  10. ஐரோப்பிய அனுபங்கள் பகிர்வுகள் அருமை..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! நலமா சகோதரி

      Delete
  11. வந்த இடத்திலும் உடல்நிலை இடந்தராமையால் மிகவும் சிரமப்பட்டமை துரதிஷ்டமே ஐயா!..

    இருந்தாலும் ஓரளவுக்கேனும் ரசித்திருப்பீர்களென நினைக்கின்றேன்.

    உங்கள் பயண ஏற்பாட்டாளரிடம் போட்டபிள் சக்கர நாற்காலி ஏற்பாடு செய்திருந்தால் கொஞ்சம் சிரமத்தைத் தவிர்த்திருக்கலாமோ...

    இங்கெல்லாம் வயதானவர்களும் சுற்றுலாச் செல்வதற்கென பல வசதிகள் செய்வார்கள். அதில் சக்கர நாற்காலி(இரண்டாக மடித்து செல்லும் வண்டி வாகனத்தில் எடுத்துச் செல்லக்கூடியது) வசதியும் உண்டு.. அறிந்துள்ளேன் ஐயா! வாடகைக்கே பெறலாம்.

    தொடருங்கள் ஐயா!...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! நலமா சகோதரி

      Delete
  12. அந்த முடிவு என்ன ஐயா...ஆவலுடன்...

    ReplyDelete
  13. உடல், மனச் சோர்வுகள் வயதானபின் வருவது இயற்கையே. அதையும் பொருட்படுத்தாது வெளிநாட்டுச் சுற்றுலா போய் வந்த உங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை.

    ReplyDelete
  14. அனுபவப் பகிர்வு அருமை ஐயா.

    ReplyDelete
  15. உங்கள் உற்சாகம் உங்களுக்கு உடல் நலத்தைத் தரட்டும். படங்கள் பிரமாதம்.நன்றி ஐயா.

    ReplyDelete
  16. வெளிநாடுகளில் வயதானவர்களுக்கு என்று பல வசதிகள் செய்து தருவார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். நீங்களும் அவற்றை பயன்படுத்திக் கொண்டிருக்கலாம் என்று தோன்றியது.
    லண்டன் ஐ - மேல் ஏறிப் பார்த்தீர்களா என்று போன பதிவிலேயே கேட்கவேண்டும் என்று நினைத்தேன். இந்தப் பதிவில் பதில் சொல்லிவிட்டீர்கள். அடுத்த பதிவு படிக்கிறேன் உங்கள் முடிவை அறிந்து கொள்ள.

    ReplyDelete
  17. இராட்ச ராட்டினத்தில் ஏறி அந்த ஊரின் முழு அழகை பார்க்க முடிந்தது சந்தோஷம் அப்பா.. அதை போட்டோ எடுக்க முயலும்போது மின்விசை தீர்ந்ததால் உடல் சோர்வோடு மனமும் சோர்ந்ததுன்னு எழுதி இருந்தீங்க. இதற்கெல்லாம் சோர்ந்து போகலாமா அப்பா? வேறு யாராவது நண்பர்கள் எடுத்திருப்பாங்க. அவங்க கிட்ட இருந்து வாங்கிக்கலாம் தானே. சந்தோஷமா இருங்க அப்பா.. கால் வலி அதிகமானது பற்றி படித்து கஷ்டமாச்சு. அத்தனை தூரம் கஷ்டப்பட்டு பிரயத்தனத்தில் அணிவகுப்பு அன்று ரத்து செய்யப்பட்டதுன்னு படிச்சப்ப வேதனை இன்னும் அதிகமாச்சு. பரவால்ல அப்பா. நீங்க இதெல்லாம் சாதித்து விடுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கு. எந்த முடிவும் நல்ல முடிவாகவே இருக்கட்டும் அப்பா.... அன்பு நன்றிகள் அப்பா பகிர்வுக்கு.

    ReplyDelete
    Replies
    1. மஞ்சு எப்படியும் பார்த்துவிடத் துடிக்கிறார் எப்படியாவது யாரிடமாவது கெட்டுப் பதிவிடுங்கள் அய்யா

      Delete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...