இலண்டன்(-3-8-2013)
காலையில் அனைவரும் தயாராகி முன்னரே வந்துள்ள
பேருந்தில்
ஏறி பயணத்தைத்
தொடங்கினோம் நாங்கள்
பார்க்க வேண்டிய
இடங்களை
( திட்டமிட்ட
வாறு) முதற்கண் சுவாமி நாரயணன் கோவிலிக்குச்
சென்று
இறைவனை வழிபட்டோம் அதன் பின் நகர உலா தொடங்கியது
சற்று
தாமதமாக எங்கள் வழிகாட்டி வர புறப்பட்டோம்
இலண்டன் வீதிகளில் எங்கள் பேருந்து செல்ல ஆங்காங்கே உள்ள
முக்கிய
இடங்களைப் பற்றி வழிகாட்டி குறிப்புகளைக் கூறிக் கொண்டு வரவும் பேருந்தில்
அமர்ந்த வாறே
கேட்டுக் கொண்டே
நகரின் மையப்
பகுதிக்கு
வந்தபோது அடியோடு போக்கு வரத்து தடைபட்டது
காரணம் அன்றைய தினம் இலண்டனில்
சைக்கிள் பேரணி தினமாம்
புற்றீசல்
போல நாலா பக்கமும் இருந்து ஆயிரம் கணக்கில் சைக்கிளில்
வந்தனர்! ஆண், பெண் குழைந்தைகள் என எவ்வித ஆரவாரமும் இன்றி
அமைதியாகச்
சென்றது கண்கொள்ளா காட்சி! என் மனதில் நம் நாட்டில்
நாம்
நடத்தும் ஊர்வலம் பற்றிய காட்சி,மாட்சி நினவுக்கு வந்தது அமைதி
ஊர்வலம்
கூட இங்கு அமைதியாகப் போவதில்லையே!
இதன் காரணமாக பிரிட்டன் பாராளும் மன்றத்தைக கூட வண்டியில்
அமர்ந்தவாறேதான்
பார்க்க முடிந்தது ஒரு வழியாக அழகு மிக்க தேம்ஸ் நதிக் கரையிலே
சென்று இறங்கினோம் அங்கே கண்ட காட்சிகளை பின் வரும் புகைப் படங்கள்
மூலம் அறியலாம் முலில் வருவது நாராயணசுவாமி திருக் கோயில்.
மற்றவை நாளை.......!
புலவர் சா இராமாநுசம்
அட போட்டோவில் நீங்களா ?
ReplyDeleteதொப்பி எல்லாம் அணிந்து அடையாளம் தெரியாத
யூத் ஆகா மாறி விட்டீர்களே ?!
முதல் வருகைக்கு முதற்கண் நன்றி!
Deleteஐயா,
ReplyDeleteஉங்கள் குழுவினரோடு உள்ள படம் ஒன்றும் போடுங்கள். துணைவியாரிடம் காண்பிக்க வேண்டியதுள்ளதே ... அதற்காகவே. மற்றும் உங்கள் சுற்றுப்பயணத்தை நடத்துபவர்கள் பற்றிய குறிப்புகள் இருந்தாலும் சொல்லுங்கள்.
நன்றி
ஐயா!
Deleteபதிவர் சந்திப்பில் தங்களைக் கண்டு உரையாடியது நினைத்து பெரு மகிழ்ச்சி அடைகிறேன்! தங்களின் அன்புகட்டளையை விரைவில் நிறைவேற்றுகிறேன்
ஐயா... எத்தனையோ இடர்களுக்குள்ளாக உங்கள் பயணம் இடம்பெற்றிருக்கிறது.
ReplyDeleteபடங்கள் மிக அருமை!. அதில் நீங்களும் தொப்பியுடன் நன்றாகத்தானிகிறீர்கள்!
நீங்கள் வந்த நேரம் நல்ல கோடல்காலம் ஐரோப்பாவில்... அதனால் தப்பிப் பிழைத்தீர்கள் ஐயா!
இப்போது ஓயாத மழையும். இரவில் குளிரும்...
தொடருங்கள் ஐயா!
த ம.1
அன்பு மகளே!
Deleteநான் அங்கு வந்த போது மூன்று முறை தொலை பேசி வழியாக தொடர்பு கொண்டு பேசி அன்புகாட்டியதை நான்
என்றும் மறவேன் இறை அருள் என்றும் எனக்கு உண்டு என்றே
நம்புகிறேன்
படங்கள் அருமை. தொடர்கிறேன்.
ReplyDeleteநன்றி ஐயா!
Deleteஅனுபவம் புதுமை ... அருமையான புகைப்படங்கள்.. நன்றி..
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteஐயா. தங்களது லண்டன் புகைப்படங்கள் அருமையாக இருக்கின்றன.
ReplyDeleteமுந்தைய பகுதிகளையும் படித்துவிட்டு வருகிறேன். என்றும் நலமுடன் இருக்க வாழ்த்துகள்.
லண்டன் படங்கள் அழகாக இருக்கின்றன. சுற்றுப்பயணத்தில் தொடர்கிறேன்.
ReplyDeleteமிக்க நன்றி
Deleteரோமில் ரோமானியன் ஆக இரு என்று சொல்வார்கள் ...நீங்களும் தொப்பி எல்லாம் போட்டுக்கிட்டு லண்டன்வாசி ஆகிவிட்டீர்களே ...படங்கள் அருமை !
ReplyDeleteஅன்பரே! தொப்பி எங்கள் குழுவின் அடையாளச் சின்னம்!
Deleteதங்கள் வருகைக்கு மிக்க நன்றி!
படங்கள் அழகு, தொடருங்கள் ஐயா தொடர்கிறேன்
ReplyDeleteமிக்க நன்றி
Deleteமிக்க நன்றி
ReplyDeleteஐயா உங்களுடன் நாங்களும் சுற்றிப் பார்ப்பது போல் உள்ளது.
ReplyDeleteபயணக் குறிப்புகள் தொடரட்டும்
மிக்க நன்றி
Deleteபடங்களுடன் பயண அனுபவம் ரசிக்கவைக்கிறது. பகிர்வுக்கு நன்றி ஐயா.
ReplyDeleteமிக்க நன்றி
Deleteபடங்களும் பயணக்கட்டுரையும் அருமை ஐயா. உங்களுடன் சேர்ந்தே பயனிப்பது போன்றதோர் உணர்வு ஏற்படுகிறது. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteமிக்க நன்றி
Deleteபுகைப்படங்கள் அத்தனையும் அருமை
ReplyDeleteபடைப்பில் தங்களில் நையாண்டித்தனமும் தெரிகிறது அருமை அய்யா...
மிக்க நன்றி
Deleteபடங்களும் தங்கள் விவரிப்பும் அருமை... நாங்களும் உங்களுடனேயே பயணிக்கிறோம்....
ReplyDeleteமிக்க நன்றி
Deleteஇலண்டனில் சைக்கிள் பேரணி தினம் கொண்டாடிவிட்டீர்கள் போலிருக்கிறது. தேம்ஸ் நதிக் கரையில் எடுக்கப்பட்ட புகைப் படங்கள் நன்றாக உள்ளன.
ReplyDeleteமிக்க நன்றி
Deleteதேம்ஸ் நதிப் பயணத்தின் புகைப்படங்கள் நன்றாக இருக்கின்றன, ஐயா!
ReplyDeleteகொஞ்சம் தாமதமாக வந்திருக்கிறேன். மற்ற பகுதிகளையும் படிக்கிறேன்.
வெண் திட்டு மேகங்களுக்கு கீழே நெருக்கமாக கப்பல் நிற்பது போல அழகிய காட்சி அப்பா... சைக்கிள் பேரணி அமைதியாக செல்வது பார்க்கவே கண் கொள்ளா காட்சியாக இருந்தது என்று சொல்லும்போது எனக்கும் பார்ப்பது போலவே இருந்தது. அன்பு நன்றிகள் அப்பா பகிர்வுக்கு. த.ம.7
ReplyDeleteசிறப்பான படங்கள் சிந்திக்க வைக்கும் இடங்கள் அருமை
ReplyDelete