Wednesday, September 11, 2013

என் ஐரோப்பிய சுற்றுப் பயணம். பகுதி இரண்டு!





 அகில பாரத மூத்த குடிமக்கள்  சங்கமும்   கோவை  எம்பரர்  டிரேவல் லைனும்  சேர்ந்து   திட்டமிட்டிருந்த படி ஆகஸ்டு முதல் தேதியே  எங்கள்
பயணக் குழு  சென்னை  வந்து . பூந்தமல்லி நெடுஞ் சாலையில் உள்ள சுதா விடுதியில் தங்க,  நானும் அன்று இரவே சென்று அவர்களோடு சேர்ந்து  விட்டேன்!

    மறுநாள்  (2-ம்தேதி) அதிகாலையே நாங்கள்  அனைவரும்  தயாராகி எங்கள்  பொருள்களை  எல்லாம்  எடுத்துக்  கொண்டு  கீழே  வந்தோம்
அங்கே   எங்களை  விமான நிலையத்திற்கு  அழைந்துச்  செல்ல  பே,ருந்து
ஒன்று  நின்றிருந்தது  எங்கள்   உடமைகளை   அதிலே ஏற்றியபின் காலை
உணவும் பையில் போட்டு  தந்தார்கள் அதோடு பேருந்தில்  ஏறினோம்
பயணம்  தொடங்கியது

       ஏழுமணியளவில்  விமான  நிலையத்தை  அடைந்தோம்  எங்கள்
குழுவில் மொத்தம் ஐம்பது பேர்  இருந்தோம்  அனைவரும்  வரிசையாகச்
சென்று  நிலையத்துள்  நுழைந்தோம்

       எங்கள் பயணம்  இலண்டன்  செல்ல  கொழும்பு வழியாக ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது  ( ஸ்ரீலங்காஏர்வேஸ்) எனவே நாங்கள் அதற்கு ஏற்ப
உரிய இடங்களில் நின்று  கடவுச் சீட்டையும்  பயணச்சீட்டையும் காட்டி
பெட்டிகளை ஒப்படைத்து விட்டு  விமானத்தில்  ஏற அணுமதி சீட்டையும் இருக்கை எண்களையும்  பெற்றோம்

       கொழும்பு  செல்லும்  விமானம் புறப்படும் நேரம்  பத்து மணி முப்பது நிமிடம்  என்பதால் அமைதியாக  மேலே(முதல் தளம்) சென்று
கொண்டு  வந்திருந்த  காலை  உணவை உண்டோம் அதன் பிறகு சோதனை
அதிகாரிகள் எங்களுடைய கைபை தொலைபேசி உட்பட உடல் முழுவதும் சோதனைக் கருவி மூலம் சோதனை சொய்தார்க்கள்  கிட்டத்தட்ட  பத்து
மணி அளவில்  விமானத்தில்  ஏற அறிவிப்பு  வர  நாங்கள் உள்ளே
சென்று அவரவர்களுக்கு  உரிய இருக்கையில்  அமர்ந்தோம்

     விமானத்தில்  பழச்சாறும்  காலை  உணவும்  வழங்கினார்கள் எங்களால்  காலை உணவை  முன்பே முடித்து  விட்டதால் சாப்பிட  இயலவில்லை . ஒரு மணி பத்து நிமிடங்கள் ! கொழும்பு வந்துவிட்டோம்
அவரவர் கைபையோடு விமானத்தை விட்டு  இறங்கி நிலையத்தின்  உள்ளே
சென்று  அமர்ந்தோம்

      பகல்  ஒரு மணி முப்பது நிமிடத்திற்கு தான் இலண்டன் விமானம்
புறப்படும்  நாங்கள் நீண்ட நேரம் காத்திருக்க  வேண்டியதாயிற்று  அங்கும்
சோதனை  மிகவும்  கடுமையாக இருந்தது பெல்டு  காலணி களைக்  கூட அகற்றச் சொன்னாகள் அனைத்தையும்  முடித்துக் கொண்டு நாங்கள் இலண்டன்  விமானம்  ஏற அறிவிப்பை  எதிர் பார்த்து  காத்திருந்தோம்!

      அறிவிப்பு  வரவும்  முறைப்படி  ஏறி  விமானத்தில்  அமர்ந்தோம்
குறித்த  நேரத்தில் விமானம்  கிளம்பியது ஏறத் தாழ அதில்  முன்னூறு
பயணிகள் இருந்தார் கள்  புறப்பட்ட சிறிது நேரத்துக் கெல்லாம்  பகல் உணவு வழங்கினார்கள் பசியோடு  இருந்ததால் உணவு  சுவையாகவே
இருந்தது பயணநேரம் பதினான்கு மணி என்று அறிந்த போது நான்  மிகவும்
கலங்கிப்  போனேன்  அவ்வளவு  நேரம் ஒரேயிடத்தில்  உட்கார்ந்து  வர என்னால் முடியுமா என்ற கேள்வி  என்னுள்  எழ இப் பயணத்திற்கு  நான்
ஆசைப்பட்டது  தவறோ என எதிர் கேள்வியும் உள்ளத்தில்  தோன்றியது

     எப்படியோ விமானம் என்னையும் , என் எண்ணங்களையும்  சுமந்து
கொண்டு  தன்  போக்கில் பறந்து  கொண்டிருக்க  நேரம்  ஓடிக்  கொண்
டிருந்தது  விமான  ஓட்டி மிகவும் திறமை சாலியாக இருந்ததால் இறுதி
வரை குலுக்கலோ ஆட்டமோ தீடிரென்று ஏற்றமோ, இறக்கமோ இல்லாமல்
பறந்துச்  சென்றது  அவரது திறமைக்குச் சான்றாகும் இடையிடையே
எங்களுக்கு  பழச்சாறும்,  ரொட்டியும்  காபி டீ குடிநீர் அளவின்றி  வழங்கினார்கள்.

      நான் இரண்டு மூன்று  முறை  இருக்கையை  விட்டு  எழுந்து
 நின்றும்  சற்று நேரம் நடந்தும் என் கால்வலியைச்  சற்று குறைத்துக்
 கொள்ள முயன்றேன் சிலநேரம்  கண்துயின்றேன் !
     
       ஒவ்வொருவர்  இருக்கைக்கும்  முன்னால் தொடுதிரை இருந்தன!
அதில் திரைப் படங்களும்  விமானம் தற்போது எங்கே  பறந்து  கொண்டு
இருக்கிறது  என்ற  விபரமும் காட்டபட்டன . ஒவ்வொருநாடாக  விமானம்
கடந்தபோது  நான் அந்நாட்டில்  வாழும் நம்  வலையக உறவுகளை கண்முன் கொண்டு வர மலரும் நினைவுகளாக அவை தோன்றின! கீழே  எப்போது  பார்தாலும் கதிரவன் ஓளி  வீசிக் கொண்டிருந்தான் பகலும் எங்களோடு பயணம் செய்தது மிகவும் வேடிக்கையாக  இருந்தது

       ஒரு நேரத்தில்  பலரும்  கீழே  குனிந்து பார்க்க  , கருங்கடலுக்கு
மேலே பறந்து கொண்டிருப்பது தெரிந்தது,  தெளிவான காட்சிகள்! அடடா!
என்ன அழகு! கருங்கடல்  என்பதற்கு ஏற்ப அதன்  நிறமும்  ஆங்காங்கே
பனி  மலைகளும்  கண் கொள்ளாக்  காட்சி! அது, எழுதித்  தெரிவதல்ல
நேரில்  காண வேண்டிய ஒன்று!

       ஒருவழியாக  இலண்டனை  விமானம்  நெருங்கி விட்டத்தை
அறிந்தோம்   அதுபோது இலண்டனின் நேரம்  இரவு பத்து மணி தரை
இறங்க விமானம் தாழப்  பறந்த போது  இலண்டன் மாநகரம்  ஒளி வெள்ளத்தில்  மிதந்தது

        விமானம் தரை  இறங்கியதும்   அனைவரும் தம்தம் கைபைகளோடு இறங்கினார்கள்  . நானும் இறங்கி  நடந்தேன்


     ஆனால்?? இலண்டன் விமான  நிலையத்தில் , மிகப் பெரிய
அதிர்ச்சி , எனக்கு, எனக்கு மட்டுமே, காத்திருப்பது  தெரியாமல்…….?

             மீண்டும்  சந்துப்போம்!

                       புவலர் சா  இராமாநுசம்

    

33 comments:

  1. லண்டன் மாநகர விமான நிலையத்தில் தங்களுக்கு மட்டும் ஏற்பட்ட அந்த அதிர்ச்சி பற்றி அறிய காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. // கடந்தபோது நான் அந்நாட்டில் வாழும் நம் வலையக உறவுகளை கண்முன் கொண்டு வர மலரும் நினைவுகளாக அவை தோன்றின! கீழே எப்போது பார்தாலும் கதிரவன் ஓளி வீசிக் கொண்டிருந்தான் பகலும் எங்களோடு பயணம் செய்தது மிகவும் வேடிக்கையாக இருந்தது
    //

    எங்கெங்கும் நீங்கள் பதிவர்கள் நினைப்பினூடேயே
    பயணித்திருப்பது மகிழ்ச்சியையும்
    வியப்பையும் தருகிறது. அதிர்ச்சி என்னவாக
    இருந்திருக்கும் ? ஆவலுடன் ....

    ReplyDelete
  3. சஸ்பென்ஸ் உடன் முடித்திருக்கிறீர்கள். காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  4. நாங்களும் உங்களுடன் பயணிக்கத் துவங்கிவிட்டோம்
    சொல்லிச் செல்லும் விதம் மிக மிக அருமை
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...

    ReplyDelete
  5. ஐயா.. அருமையான பயணத்தொடர்... இடையிடையே பயத்தொடராகவும் இருக்கிறதே...

    என்ன ஆச்சு ஐயா.. நீங்களுமா இப்படி சஸ்பென்ஸ் வைத்து எழுதுவீர்கள்...:)

    தொடருகிறேன்....

    ReplyDelete
  6. ஐ எனக்கு தெரியும், எனக்கு தெரியும். அய்யா என்கிட்ட முன்னமே சொல்லிட்டாரே, மற்றவர்களெல்லாம் சஸ்பென்சுடன் காத்திருங்கள்

    ReplyDelete
  7. நம்நாட்டுக்கும் வந்து சென்றுள்ளீர்கள். அதிர்ச்சி என்ன என அறிய ஆவலுடன்.......

    ReplyDelete
  8. //பயணநேரம் பதினான்கு மணி என்று அறிந்த போது நான் மிகவும் கலங்கிப் போனேன் //

    மிகவும் கஷ்டம் தான் ஐயா.

    பயணக்கட்டுரை அருமையாகவும், மிகச்சிறப்பாகவும், சுவாரஸ்யமாகவும் உள்ளது. கடைசியில் ஒரு சஸ்பென்ஸ் வேறு. அருமை ஐயா, தொடருங்கள்.

    ReplyDelete
  9. சென்னையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்வேஸ்ல கிளம்பி சாப்பாடும் சாப்பிட்டுட்டு கிளம்பியதால் வயிறு திம்முனு இருக்கவே சாப்பிட முடியாம அதன் பின் பரிசோதனை மிக கடுமையாக இருந்ததுன்னு சொல்லி இருந்தீங்க அப்பா.. ஆமாம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கடுமையான சோதனை... பெல்ட் ஷூ எல்லாமே கழட்டச்சொல்லி செக் செய்கிறார்கள்.. 14 மணி நேர பயணம்னு படிச்சதும் நானும் உங்க உடல்நலனைப்பற்றி தான் நினைத்தேன் அப்பா... கடவுளின் கருணை.. கொஞ்சம் நின்று, நடந்து , உறங்கி , படம் பார்த்து, கடலை ரசித்து, அந்தந்த ஊர் மேலே பறக்கும்போது நம் நண்பர்களை நினைக்கும் மனசு உங்களுக்கு தான் அப்பா வரும்.... குவைத் மேலே பறந்ததோ விமானம்? மகளை நினைத்தீரா அப்பா? பத்திரமா லண்டன் போய் இறங்கியாச்சு சரி.. அதென்ன அப்பா உங்களுக்கு மட்டும் சோதனை? பயமா இருக்கே...

    ReplyDelete
    Replies
    1. அன்பு மகளே! உன்னை அப்போது மட்டுமா! எப்போதும்! ஏன்
      முப்போதும் மறக்க இயலாது! சுருங்கச் சொன்னால் , மறந்தால் தானே நினைபதற்கு!

      Delete
  10. அதிர்ச்சி1அதுவும் உங்களுக்கு மட்டுமா?பயங்கர மர்மமாக இருக்கிறதே!

    ReplyDelete
  11. இலண்டன் விமான நிலையத்தில் அதிர்ச்சியா?

    ReplyDelete
  12. மிக்க நன்றி!

    ReplyDelete
  13. 14 மணிநேரப் பயணத்தை எண்ணி முதலில் கலங்கினாலும், பிறகு எழுந்து நின்று, நடந்து சமாளித்த உங்களுக்கு என்ன அதிர்ச்சி காத்திருக்கும் என்று அடுத்த பதிவில் போய் படித்துத் தெரிந்து கொள்ளுகிறேன், ஐயா.
    கடவுளின் அருள் உங்களுக்கு எப்போதும் துணை இருக்கும் என்றாலும் சின்ன சஸ்பென்ஸ் வைத்து சொல்லியிருக்கிறீர்களே!
    எங்கு போனாலும் பதிவுலக நண்பர்கள் நினைவா? வியப்பாக இருக்கிறது. கருங்கடல் வருணனை, லண்டன் மாநகரின் வருணனை எல்லாமே - அதுவும் பகலும் உங்களுடனேயே பயணித்தது என்ற வருணனை ரொம்பவும் ரசிக்க வைத்தது.

    ReplyDelete
  14. மிக்க நன்றி அம்மா!

    ReplyDelete
  15. ஒரே இடத்தில் அமர்ந்து பலமணி நேரம் அதுவும் விமானத்தில் பயணிப்பதென்பது நல்ல உடல்நிலையில் இருப்பவர்களாலேயே இயலாது. தாங்கள் இந்த வயதில் முதுகுவலிப் பிரச்சனையோடு இருந்தாலும் நல்லபடியாக சென்றுவந்தமை அறிந்து நிம்மதியும் மகிழ்வும் ஐயா. அடுத்துவரும் அதிர்ச்சி என்னவாக இருக்குமென்று யோசித்தபடியே தொடர்கிறேன்.

    ReplyDelete
  16. இந்த வயதில் பதினான்கு மணிநேரம் பயணம்! எப்படியோ பயணத்தை வெற்றிகரமாக செய்து விட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. தெளிவான காட்சிகள்! அடடா!
    என்ன அழகு!//ஆம் உங்கள் மனதைப் போல

    ReplyDelete