நானும் இறங்கி நடந்தேன்! நடந்தேன் என்று சொல்வதை விட
தள்ளாடினேன்
என்பதே உண்மை! ஒரு
வழியாக நகரும் நடைபாதை
வழியாக சோதனை நிலையத்தை அடைந்தோம்
அங்கேதான் எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது வரிசையில் நான் மூன்றாவது ஆளாக நின்றிருந்தேன் முன்னால் சொன்ற
அனைவருடைய
கடவுச் சீட்டை சோதித்ததோடு வலது கை கட்டை
விரல்
ரேகையையும் பதிவு செய்தார்கள்! ரேகை, சென்னையில் நேரில்
சென்று
விசா பெற்ற போது எடுத்ததோடு ஒத்திருக்கிறதா
என்று
பார்க்கிறார்கள்.
என் முறை வந்ததும் நான் சென்று கட்டைவிரலின் ரேகையைப்
பதிவு செய்தேன் விரலை நன்றாக அழுத்த வேண்டும்
என்னால்
இயலவில்லை விரல் லேசாக
நடுங்கு வதால் ரேகை
சரியாகப்
பதியவே இல்லை ! நீண்ட நேர விமானப் பயணம் என்
உடலை
மிகவே பாதித்துவிட்டது என் உடலே சிறிது நடுக்குவதை
நானே
உணர்ந்தேன்
பலமுறை முயன்றும் தோல்விதான்! முழுகையையும்
இடது, வலது என்று மாறி மாறி வைத்தும் பலனில்லை அவனுக்கே
அலுத்து
விட்டது என்னை சற்று ஓரமாக தள்ளி நிற்கச் சொல்லி
அடுத்தவர்களை
சோதிக்கத் தொடங்கினான் தள்ளி நின்ற எனக்கோ
லேசாக
நடுங்கிக் கொண்டிருந்த உடலோடு உள்ளமும் சற்று நடுங்கத்
தொடங்கியது
வந்த அனைவரும் சோதனை முடிந்து உள்ளே சென்று விட
நான்
மட்டும் தனியாக நிற்கிறேன் அந்தப் பக்கம் அமைப்பாளர் திரு
சாமிநாதனும்
எம்பரர் அமைப்பாளர் இராசேந்திரனும் கவலையோடு
காத்திருந்தார்கள்
என்னை சோதித்த அலுவர் எழுந்து உள்ளே சென்றார்
திரும்பி
வந்த அவரோடு ஒரு அம்மையார் வந்தார் அவரும் பலமுறை
சோதித்து
விட்டு தோல்விதான் கண்டார்
பின்பு அவர்கள் இருவரும் ஏதோ பேசிக் கொண்டே என்னிடம் ஏதும் சொல்லாமல் மீண்டும்
உள்ளே
சென்றார்கள்
ஐந்து நிமிடங்கள் இருக்கலாம்! அதற்குள் நான் பட்ட நரகவேதனை
, மரண தண்டனையை எதிர்நோக்கும் கைதியைப் போல
துடித்துப்
போனேன்
மீண்டும் வந்தார்கள் என்னிடம் ஏதும் கேட்க வில்லை
என்னுடைய
கடவுச் சீட்டை எடுத்து அணுமதி முத்திரையைக் குத்தி
புன்னகையோட
என் தோளில் அன்போடு தட்டி
உள்ளே போகச் சொன்னார்கள் வேதனையின்
விளிம்பில் நின்றுகொண்டிருந்த நானோ
குருடன்
கண் பெற்றதைப் போல உள்ளே சென்றேன்
கிட்டத் தட்ட என்னால் ஒரு
மணிநேரம் தாமத மாகிவிட்டது
அனைவரும்
அவரவர் பெட்டிகளை
எடுத்துக் கொண்டதோடு என்
பெட்டியையும்
எடுத்து வைத்திருந்தார்கள் . விமான நிலையத்திலிருந்து
வெளியே
வந்த நாங்கள் முன்னரே காத்திருந்த பேருந்தில் ஏறினோம்
பேருந்து நகரின் எல்லைலையைக் கடந்து புற நகர் பகுதியில்
அமைந்துள்ள
ஒரு பெரிய தங்கும் விடுதி
முன் நின்றது அனைவரும்
இறங்கினோம்
இரவு உணவும் அங்கேயே
தயராக இருந்ததால் உணவை
உண்டபின்
அவரவருக்கு ஒதுக்கப் பட்ட(இரண்டுபேருக்கு
ஒன்று) அறைக்கு
சொன்றோம்
காலை எட்டு மணிக்கெல்லாம் கிளம்ப வேண்டும் என்றும்
சொல்லப்பட்டது
இத்துடன் (இப் பதிவோடு) என் சுய வரலாற்றை முடித்துக் கொள்கிறேன் அடுத்த பதிவு முதல் தல வரலாறு தொடங்கும்
என்ப
தையும்
முதற்கண் இலண்டன் பற்றி எழுதுகிறேன் என்பதையும்
தெரிவித்துக்
கொள்கிறேன்
மீண்டும் சந்திப்போம்
புலவர்
சா இராமாநுசம்
இது போல கட்டை விரல் ரேகையை பதிவு செய்ய இயலாதவர்களுக்கென விசா கொடுக்கும் நேரத்திலேயே
ReplyDeleteஅமெரிக்காவில் மற்ற நாலு விரல்களின் ரேகைகளையுமே பதிவு செய்து இருக்கிரார்கள்.
கை விரல் ரேகையைப் பார்க்கிறார்கள். கையே இல்லாதவனுக்கு என்ன பார்த்து பரிசோதிக்க இயலும் எனக் கேட்டபோது டி. என். எ. சோதனை மூலம் கூட செய்யலாம். என்றார்கள்.
நான் சிகாகோ விமான நிலையத்தில் ஒரு வரிசையில் நின்றுகொண்டு இருக்கையில், என் முன்னால் இருக்கும் ஒரு இள வயது பெண்ணை அழைத்து அவள் உள்ளங்கைகளில் ஏதோ ஒரு கருவியினால், ராண்டம் செக் செய்தார்கள். ஏதேனும் போதைப்பொருள் கடத்தி செல்கிறார்களா என்று சந்தேக கேசுகளில் செய்வார்களாம். அந்த பெண்ணுக்கு அசாத்திய கோபம்.
என்ன செய்வது. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதிமுறை இருக்கிறது. அதற்கு உட்பட்டுத்தான் இருக்கவேண்டும்.
என் மனைவிக்கும் இந்த கட்டை விரலைப் பதிக்க இயலவில்லை. நடுக்கம் தான் காரணம். ஆயினும் அவர்கள் பொறுமையாக என்னை, அவளது கட்டை விரலின் மேற்பாகத்தில் சற்றே என் கை விரலால் அமுக்குமாறு அந்த அலுவலர் கூறினார்.
மேலும் மற்ற நாலு விரல் ரேகையும் எடுத்தார்.
போதும் என விட்டு விட்டார்.
அடுத்த தரம் வெளி நாடு செல்லும்பொழுது ( கிழக்காசிய நாடுகளைத் தவிர்த்து ) ஒரு வில் சேர் எடுத்து சென்றால், அதிக நேரம் எந்த கவுண்டரிலும் காத்திருக்க வேண்டாம். அதுவும் நம்மைப்போன்ற முதியோருக்கு ஒரு சிறப்பு கவுண்டர் எங்குமே இருப்பதால் க்யுவைத் தவிர்க்கலாம்.
சுப்பு தாத்தா.
www.vazhvuneri.blogspot.com
www.subbuthatha72.blogspot.com
நன்றி !ஐயா!
Deleteஎனக்கும் அவ்வாறு செய்து பார்த்தார்கள் பலனில்லை
இங்கு (ஐக்கிய அரபு எமிரேட்) கை ரேகை பார்ப்பதில்லை... முதல் முறை வரும் போது கண்ணை ஸ்கேன் பண்ணி விடுவார்கள்... அடுத்த முறை வரும் போது இமிக்ரேசன் செக்கிங்கின் போது கேமரா நம்ம கண்ணை படம் பிடித்து விடும்... செக்கிங்க் ஓகே ஆகும்...
ReplyDeleteஒவ்வொரு நாட்டிலும் ஒருவிதம்! நன்றி! குமார்!
Deleteநடுக்கத்துடன் கூடிய அந்த நிகழ்ச்சி ஒரு நெருடல் தான்.
ReplyDeleteதிருஷ்டி போனது என வைத்துக் கொள்ளலாம்.
நானும் உங்களுடன் லண்டன் பயணிக்கக் காத்திருக்கிறேன்.
நன்றி! மகளே!
Deleteஒவ்வொரு நாட்டிலும் விதிகள் வித்தியாசமானதுதான்..அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி...!
ReplyDeleteலண்டன் பற்றிய (தலவரலாறு?) பதிவுகளுக்காக காத்திருக்கிறேன்..
மிக்க நன்றி ஐயா!
Deleteமிக்க நன்றி ஐயா!
ReplyDeleteசோதனையான மணித்துளிகள்
ReplyDeleteஉங்களுடன் இலண்டனுக்குப் பயணிக்கக்காத்திருக்கிறேன்!
சோதனையான தொடக்கம் தான்.....
ReplyDeleteஉங்களுடன் சேர்ந்து பயணிக்க நானும் தயாராகிவிட்டேன்....
மிக்க நன்றி ஐயா!
Deleteதாங்கள் லண்டன் விமான நிலையத்தில் பட்டுள்ள கஷ்டங்களையும், மன உளைச்சல்களையும் நன்றாக என்னால் உணர முடிகிறது, ஐயா.
ReplyDeleteநல்லவேளையாக கடைசியில் அனுமதி அளித்தார்களே புண்யவான்கள். அதுவரை மகிழ்ச்சியே.
தொடர்ந்து படிக்க ஆவலாக உள்ளேன், ஐயா.
நடைமுறைகளை கடந்து செல்வது பெரும்பாடு என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
ReplyDeleteதொடர்கிறோம் ஐயா!
மிக்க நன்றி ஐயா!
Deleteதொடர்கிறேன்.
ReplyDeleteமிக்க நன்றி ஐயா!
Deleteதாங்கள் அந்நேரத்தில் பட்ட வேதனையை உணர்ந்து கொள்ள முடிகிறது. தங்களுடன் லண்டன் பயணிக்க நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ReplyDeleteமிக்க நன்றி ஐயா!
Deleteசங்கடமான மணித்துளிகள் தான். நீண்ட பயணத்தின் முடிவில் இப்படி ஒன்று நிகழ்ந்திருக்க வேண்டாம். ஸ்ரவாணி சொல்வதுபோல திருஷ்டி கழிந்தது என்று வைத்துக் கொள்ளுவோம்.
ReplyDeleteஉங்கள் மூலம் லண்டன் தல வரலாறு படிக்கக் காத்திருக்கிறேன்.
மீண்டும் வந்தார்கள் என்னிடம் ஏதும் கேட்க வில்லை
ReplyDeleteஎன்னுடைய கடவுச் சீட்டை எடுத்து அணுமதி முத்திரையைக் குத்தி
புன்னகையோட என் தோளில் அன்போடு தட்டி உள்ளே போகச் சொன்னார்கள் //
கண்களில் கண்ணீர் பொங்கியது ஐயா !!
சில நல்ல இதயங்கள் தக்க தருணத்தில் இவ்வாறு நடந்து கொள்ளும் போது மனித நேயத்தையும் கண்டு மனம் துன்பத்திலும் ஓர் இன்பத்தை அனுபவிக்கத் தான் செய்திருக்கும் இல்லையா ஐயா ?...அனுபவங்களே வாழ்வில் பலதையும் கற்றுத் தருகின்றன .மகிழ்வான தருணங்களில் இவர்களுக்கும் நாம் நன்றி சொல்லிக் கொள்ளுவோம் .கவலைகள் வேண்டாம் இனி நீங்கள் எங்கு பயணித்தாலும் இவர்களைப் போன்ற நல்ல இதயம் படைத்தவர்கள் முன்னின்று உதவுவார்கள் .சுவிஸ் நாட்டில் நீங்கள் பெற்ற அனுபவத்தை அறியும் ஆவலுடன் காத்திருக்கின்றேன் .பகிர்வுகள் இனிதே தொடரட்டும் .
மிக்க நன்றி
Deleteநன்றி! மகளே! .சுவிஸ் நாட்டில் உங்களோடு பேசியதை மறக்க இயலுமா
ReplyDeleteவேதனையான தருணங்கள். பயணம் படிக்க ஆவலுடன் இருக்கின்றோம்.
ReplyDeleteமிக்க நன்றி
Deleteவேதனையான பயணம் !ம்ம் தொடரட்டும் லண்டன் அனுபவம் ஐயா!
ReplyDeleteமிக்க நன்றி
Deleteமுதன் முறையாகச் செல்வபவர்களுக்கு
ReplyDeleteதங்கள் பதிவு அதிக பயனுள்ளதாக இருக்கும்
எனவே அவசியம் சுய புராணத்தையும்
சேர்த்தே பதிந்து செல்லவும்
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து..
அன்புடன்
மிக்க நன்றி
Deleteநீண்ட நேரம் பயணம் செய்ததால் வந்த களைப்பு ஐயா.
ReplyDeleteதங்கள் சோதனை முடிந்தது குறித்து சந்தோஷம்.
மிக்க நன்றி
Deleteமிகவும் சங்கடமான சூழல் அது. முதியவர்களைப் படுத்தாமல் ஏதேனும் எளிய வழிமுறைகள் இருந்தால் நல்லது. நல்லவிதமாக அதைக் கடந்து வந்தமை குறித்து மகிழ்ச்சி ஐயா.
ReplyDeleteமிக்க நன்றி
Delete// நீண்ட நேர விமானப் பயணம் என் உடலை மிகவே பாதித்துவிட்டது என் உடலே சிறிது நடுக்குவதை நானே உணர்ந்தேன் //
ReplyDeleteபடிக்கும்போதே நீங்கள் அங்கு இருந்த பதட்டமான நிலைமை புரிந்தது. அதிலிருந்து மீண்டு வந்து விட்டீர்கள். இறைவனுக்கு நன்றி!
மிக்க நன்றி
Deleteமிக்க நன்றி
ReplyDeleteசீக்கிரம் படத்தைப் போடுங்கள் அய்யா .பார்க்க வேண்டும்
ReplyDelete