இடையில் உள்ளது சிலநாளே-நம்
எதிர்வரும் பதிவர் திருநாளே
தடையில் உம்முடை வரவொன்றே-மேலும்
தந்திடும் பெருமை மிகநன்றே
படையென அணிதரும் தம்பிகளே-ஆற்றும்
பணியில் தங்க , கம்பிகளே
நடைபெறும் அன்றே காண்பீரே –மனம்
நலமுற இன்பம் பூண்பீரே
கொட்டிய நெல்லி மூட்டையென-நாட்டில்
குவிந்து,
சிதறியோர் கோட்டையென
கட்டிய மாலையாய் வருவீரே-நம்
கடமை வரவென தருவீரே
எட்டியா? கசக்க ! கரும்பன்றே –உறவு
இணையத்தில் காச்சிய இரும்பன்றோ
ஒட்டிய அன்பே உள்ளத்தில் –உணர்வு
ஒன்றெனும் உணர்ச்சி வெள்ளத்தில்
மண்ணில் மனித நேயந்தான்
–ஏதும்
மாசில் ஒன்றென
ஆய்ந்தேதான்
பண்ணில்
உரையில் வலையோரே –நாளும்
பாடி , எழுதி வாழ்வோரே
எண்ணில் பதிவர் கூட்டமென
–நம்
எழுத்தில் கண்ணியம் நாட்டமென
கண்ணில் காணும் இடமெல்லாம்-பலரும்
காண நீரும் வருவீரா
! !?
புலவர் சா இராமாநுசம்
எண்ணில் பதிவர் கூட்டமென –நம்
ReplyDeleteஎழுத்தில் கண்ணியம் நாட்டமென//அறிவுரைக்கு நன்றிங்கையா
சென்ற ஆண்டை விட இவ்வாண்டு வெகு சிறப்பாக நடக்கப் போகிறது அய்யா
ReplyDeleteமுதியவர்களின் வழிகாட்டுதலில்
ReplyDeleteஇளைஞர்கள் படையின் செயல்திறத்தில்
இவ்வாண்டுச் சந்திப்பு சிறந்த சந்திப்பாக
அமையும் என்பதில் யாருக்கும்
எள்ளவும் சந்தேகமில்லை
அருமையான பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
tha.ama 2
ReplyDeleteஅருமை ஐயா...
ReplyDelete// எண்ணில் பதிவர் கூட்டமென –நம்
ReplyDeleteஎழுத்தில் கண்ணியம் நாட்டமென
கண்ணில் காணும் இடமெல்லாம்-பலரும்
காண நீரும் வருவீரா ! !?//
நீங்களெல்ளோரும் வருவீங்களான்னு கேட்கக் கேட்க ஆவலாகி முடியாமல் வேதனையும் எனக்கு வருகுதையா...
நாம் இங்கிருந்தாலும் உணர்வால் அங்கே உங்கள் ஒவ்வொருவர் அருகிலும்....
அருமையான கவிதை ஐயா!
என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும்!
அருமையான கவிதை ஐயா. நேரில் வர இயலாவிட்டாலும், நெஞ்சம் முழுக்க பதிவர் திருவிழா அரங்கையே சுற்றி வரும் ஐயா
ReplyDeleteஇனிய வணக்கம் பெருந்தகையே...
ReplyDeleteநலமா?
இந்தமுறை விழாவிற்கு வர இயலவில்லை ஐயா..
பணிச்சுழலில் இருக்கிறேன்...
விழா சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்...
விழாவில் சந்திப்போம் அய்யா
ReplyDelete