Saturday, August 31, 2013

கரம்கூப்பி அழைக்கின்றேன் வருக! வருக!





வந்துவிட்டார்  வந்துவிட்டார்  சிலபேர்  இங்கே
     வந்துகொண்டே  இருக்கின்றார்  பலபேர்  இங்கே
தந்துவிட்டார்  தந்துவிட்டார்  மகிழ்வே  தன்னை
     தலைநிமிர  வாழ்துகிறாள்  தமிழாம்  அன்னை
 
விடுதியிலே  தங்கிசிலர்  ஓய்வுப்  பெறவும்
     வேண்டியநல்  வசதிகளைச்   செய்து  தரவும்
கடமையென  உழைக்கின்ற  இளைஞர்  படையே
      கண்ணியமாய்  செய்கின்றார்   இல்லை  தடையே

வருவிருந்து  ஓம்புவது   தமிழர்  பண்பே
     வள்ளுவனார்  வகுத்திட்ட  உயர்ந்த  பண்பே
அருமருந்து  ஆற்றல்மிகு   இளைஞர்  படையே
    ஆற்றுகின்ற சேவைக்கு  இல்லை  தடையே

எண்ணில்லார்  நாளையிங்கே  வருவார்  என்றே
    எண்ணுகின்றோம்  எதிர்பார்த்து வருவீர்  நன்றே
கண்ணில்லார்  கண்பெற்ற  மகிழ்வே  பெறுவோம்
    கரம்கூப்பி அழைக்கின்றேன்  வருக!  வருக!


                         புலவர்  சா இராமாநுசம்

5 comments:

  1. வருவிருந்து ஓம்புவது தமிழர் பண்பே
    வள்ளுவனார் வகுத்திட்ட உயர்ந்த பண்பே
    அருமருந்து ஆற்றல்மிகு இளைஞர் படையே
    ஆற்றுகின்ற சேவைக்கு இல்லை தடையே

    --

    அருமையான கவிமழையில் அழகான அழைப்பு ஐயா...

    ReplyDelete
  2. இதோ.. நானும் இளைஞன் அல்லவா அதனால் ஓடி வந்துட்டேன்

    ReplyDelete
  3. பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைப்பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. பதிவர் சந்திப்பில் வெளியிடப்படுவதாக சொல்லப்பட்ட இரு நூல்கள் எவ்வித முன்னறிவிப்பின்றி அவசரமாக சனியன்றே வெளியாகிறதே,என்னதான் நடக்குதுங்க? ஏதேனும் பனிப்போரால் அந்நூல்களை பதிவர் சந்திப்பில் வெளியிட தடை என முன்னரே வெளியிடப்பட்டதா? ஒன்னுமே புரியலை உலகத்திலே அவ்வ்!

    இப்படி ஒருமித்த எண்ணமில்லாமல் எங்கிருந்து ஒற்றுமை ஓங்க?

    ReplyDelete
  5. பதிவர் சந்திப்பு மிகச் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete