பிறப்பு வாழ்வில் ஒருமுறைதன்-மேலும்
இறப்பு வழவில் ஒருமுறைதான்
இருப்பது நாமே எதுவரையில்-இதை
எவரும் அறியார் இதுவரையில்
சிறப்பு பெறநாம் வாழ்ந்தோமா-என
சிந்தனை தன்னில் ஆழ்ந்தோமா
வெறுப்பா மற்றவர நமைநோக்க-பெரும்
வேதனை வந்து நமைதாக்க
எண்ணிப் பாரீர் மனிதர்களாய்-பல்
இதயம் வாழ்த்த புனிதர்களாய்
மண்ணில் வாழ்ந்த காலத்தே-பிறர்
மனதில் திகழ ஞாலத்தே
கண்ணிய முடனே வாழ்ந்தோமா-நம்
கடமை அதுவென ஆய்ந்தோமா
பண்ணிய பாபம் ஏதுமிலை-எனில்
பயப்பட வாழ்வில் எதுவுமிலை
மரணம் நம்மைத் தேடிவர-கேட்ட
மக்கள் அனைவரும ஓடிவர
வரமே பெற்றோம் நாமென்றே-அங்கு
வந்தோர் வாழ்த்த மிகநன்றே
கரமே குவித்துக் கண்ணீரை-அவர்
காணிக்கை யாக்க பண்ணிரேல்
தரமாம் உமது வாழ்வாகும்-பெயர்
தரணியில் என்றும் நிலையாகும்
புலவர் சா இராமாநுசம்
///பண்ணிய பாபம் ஏதுமிலை-எனில்
ReplyDeleteபயப்பட வாழ்வில் எதுவுமிலை...///
அருமையான... உணர வேண்டிய வரிகள் பல... வாழ்த்துக்கள் ஐயா... நன்றி...
மிக்க நன்றி!
Delete// இருப்பது நாமே எதுவரையில்-இதை
ReplyDeleteஎவரும் அறியார் இதுவரையில் //
நூறுவீதம் உண்மை ஐயா!
அதற்குள் நாமும் ஏனையவர்களுக்கு ஆற்றும் கடமையை நன்றே செய்திடுவோம்.
அழகிய சிறந்த கற்பனைக் கவிதை ஐயா!
என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும்!
த ம.2
மிக்க நன்றி!
Delete"மண்ணில் வாழ்ந்த காலத்தே-பிறர்
ReplyDeleteமனதில் திகழ ஞாலத்தே
கண்ணிய முடனே வாழ்ந்தோமா" இந்த சிந்தனை இருந்தால் நன்று.
மிக்க நன்றி!
Deleteவாழ்வாங்கு வாழ வேண்டும்.அருமை ஐயா
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஅருமையான சிந்தனைக் கவிதை...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி ஐயா...
மிக்க நன்றி!
Deleteசீர் மிகு சிந்தனை வரிகள் அய்யா. நன்றி
ReplyDelete// பிறப்பு வாழ்வில் ஒருமுறைதன்-மேலும்
ReplyDeleteஇறப்பு வழவில் ஒருமுறைதான்
இருப்பது நாமே எதுவரையில்-இதை
எவரும் அறியார் இதுவரையில் //
இந்த தத்துவத்தை அனைவரும் உணர்ந்தால் உலகில் ஏது சண்டை?
மிக்க நன்றி!
Deleteமரணத்தின் வாயிலில் நின்றுகொண்டு வாழ்க்கையை அசைபோடுவதை விடவும் வாழும் காலத்திலேயே வகையாய் வாழ்ந்தோமா என்று ஒருமுறை நம்மை நாமே சுயபரிசோதனை செய்துகொள்வது அவசியம். மிக அருமையானக் கருத்தை முன்வைக்கும் அற்புதமான கவிதைக்குப் பாராட்டுகள் ஐயா.
ReplyDeleteமரணம் நம்மைத் தேடிவர-கேட்ட
ReplyDeleteமக்கள் அனைவரும ஓடிவர
வரமே பெற்றோம் நாமென்றே-அங்கு
வந்தோர் வாழ்த்த மிகநன்றே
கரமே குவித்துக் கண்ணீரை-அவர்
காணிக்கை யாக்க பண்ணிரேல்
தரமாம் உமது வாழ்வாகும்-பெயர்
தரணியில் என்றும் நிலையாகும்
இப்போதெல்லாம் காரணம் எதுவுமின்றிக் கண்ணீரை
வரவைப்போரே அதிகம் எனலாம் .பலரும் கற்றுத்
திருந்த நற் கருத்துரைத்த கவிதை இது அருமை ஐயா.....
மிக்க நன்றி!
Deleteஎண்ணிப் பாரீர் மனிதர்களாய்-பல்
ReplyDeleteஇதயம் வாழ்த்த புனிதர்களாய் //சரியாய் சொன்னீர்கள் அய்யா
மிக்க நன்றி!
Deleteசிறப்பான கவிதை......
ReplyDeleteத.ம. 8
மிக்க நன்றி!
Deleteநமது பிறப்பு அர்த்தமுள்ளதாக அமையவேண்டும் என்பதை தெளிவாய் அழகு தமிழில் சொல்லி விட்டீர்கள்
ReplyDeleteஉணரவேண்டிய வரிகள்.. நன்றி..
ReplyDelete