Wednesday, July 3, 2013

என் முகநூல் பதிவுகள் -2






நாம் செய்த தீவினைகள் நம்மோடிருக்க, பிறர் நமக்கு செய்யும் தீவினைகள் நம்மை வருத்தும் போது, நாம் தெய்வத்தை நோவதால் எந்த பயனும் விளையாது! துன்பப் பட்டுத்தான் தீர வேண்டும்! வேறு வழியில்லை! எதுபோல என்றால் , ஒன்றுமே இல்லாத ( காலியான) பானையை அடுப்பில் வைத்து எரித்தால் பொங்கி வருமா !? வராது. அதுபோல!


ஆற்றில் நீர் ஓடிக்கொண்டிருக்கிறது.கரையோரம் கொக்கு, ஒன்று வாடிய பயிர் போல, அமர்ந்து கொண்டிருக்கிறது நீரில் மீன்கள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கின்றன என்றாலும். கொக்கானது தான் விரும்பும் மீன் வரும் வரை காத்துக்கொண்டிருப்பதைப் போல, நாமும் ,நமக்கு உரிய வாய்ப்பு வரும் வரை காத்திருக்க வோண்டும்


சிறப்பான வழிபாடு, ஆறுகால பூசை, வேண்டுதல், படையல் அன்னதானம், எனப் பல்வேறு வகையில் ஆண்டவனை வழிபாடு செய்கிறோமே, அதுகூட நடைபெறாமல் போய்விடும்! வானம்(மழை) பெய்யாமல் ,பொய்த்து விட்டால்!


பொருளற்ற, பரம ஏழைகளை அழிக்கக் கூடிய, கொடிய ,பசியாகிய நோயினைப் போக்குவதுதான் ,மிகுதியான பொருளைப் சேர்த்த ,ஒருவன் அப்பொருளைப் பாதுகாப்பாக வைக்கும் இடமாகும்! அதாவது ஏழைகளின் அழிபசி மிக்க வயிறுதான் வங்கியாகும், பாதுகாப்புப் பெட்டகமாகும் என்பதே வள்ளுவர் கருத்தாகும்!

                                  புலவர் சா இராமாநுசம்


9 comments :

  1. சிறப்புக்களை இங்கேயும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு ஐயா...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. முகநூலில் பார்த்தவைகளை இங்கே படிக்கையிலும் ருசிக்கிறது. அருமை ஐயா! தொடருங்கள்!

    ReplyDelete
  4. மிகவும் அருமையான பகிர்வு ஐயா !..மிக்க நன்றி பகிர்ந்துகொண்டமைக்கு நேரம் கிடைத்தால் திடங்கொண்டு போராடு சீனு அவர்காளால் நடத்தப்படும் போட்டி நிகழ்வுக்காக ஒரு கடிதம் வரைந்துள்ளேன் அதற்க்குத் தங்களின் ஆசியும் இருந்தால் மிகவும் சிறப்பாக அமையும் என்று கருதுகின்றேன் ஐயா .வாசித்து தங்களின் கருத்தினையும் தாருங்கள் என அன்போடு கேட்டுக்கொள்கின்றேன் .

    ReplyDelete
  5. ஒன்றுமே இல்லாத ( காலியான)பானையை அடுப்பில் வைத்து எரித்தால் பொங்கி வருமா//

    மிகவும் பொருத்தமான உதாரணம். இதை விட இன்னும் திறம்பட கூறிடவும் இயலுமோ?

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  6. சிறந்த விடயங்கள்! அருமையான பதிவும் பகிர்வும் ஐயா!

    பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    த ம.5

    ReplyDelete
  7. முகநூலிலும் படித்தேன். ஐயா !பசி போக்குவதை விட சிறந்த சேவை ஏதுமில்லை என்பதை அழகாக சொலி விட்டீர்கள் ஐயா

    ReplyDelete
  8. முகநூலில் பகிர்ந்ததை இங்கேயும் பகிர்ந்து எங்களையும் மகிழ்விக்கச் செய்தமைக்கு மிக்க நன்றி புலவர் ஐயா.

    ReplyDelete
  9. அதாவது ஏழைகளின் அழிபசி மிக்க வயிறுதான் வங்கியாகும், பாதுகாப்புப் பெட்டகமாகும் //உண்மைதாங்க அய்யா

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...